வேலை வாய்ப்பு முகாம்

மதுரையில் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது. மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.
வேலை வாய்ப்பு முகாம்
Published on

மதுரை

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு படித்த இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். 10-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐடிஐ, சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் டிப்ளமோ நர்சிங், பிசியோதெரபி பட்டதாரிகள் கலந்து கொண்டு பணி நியமனம் பெறலாம்.

எனவே வேலை தேடுவோர் மற்றும் தனியார் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in இணைய தளத்தில் சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கல்விச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வருகிற 8-ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் வரவேண்டும். தனியார் நிறுவனங்களில் பணி பெறுவதால், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com