search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில்"

    • நாளை ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
    • உற்சவர் தேவநாதசாமி மோகன அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான தேவநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    விழாவில் 8-ம் நாளான நேற்று பங்களா உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி பழங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசாமி அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதில் உற்சவர் தேவநாதசாமி மோகன அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனை தொடர்ந்து அன்றைய தினம் பகல் பத்து உற்சவம் முடிவடைகிறது.

    இதையடுத்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத பூஜை நடைபெறுகிறது. இதையடுத்து காலை 5.30 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள்கிறார். அப்போது தேசிகர் எதிர்சேவை நடைபெறும். இதை தொடர்ந்து அன்றைய தினம் இரவு ராப்பத்து உற்சவம் தொடங்க உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விமரிசையாக நடைபெற இருக்கிறது.
    • 8-ந்தேதி தேவநாத சாமிக்கு தைலக்காப்பு உற்சவம் நடைபெறுகிறது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான பகல் பத்து உற்சவம் நேற்று முதல் தொடங்கியது.

    இதையொட்டி பெருமாளுக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பெருமாள், தேசிகர் சாமி புறப்பட்டு பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அங்கு பெருமாள், தேசிகர், ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கப்பட்டு சாமிக்கு சாற்றுமுறை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பகல்பத்து உற்சவத்தில் தினசரி சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சாற்றுமுறை நடைபெறும். இதில் வருகிற 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

    அதை தொடர்ந்து 2-ந்தேதி மிக முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விமரிசையாக நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் இரவு ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. மேலும் வருகிற 8-ந்தேதி தேவநாத சாமிக்கு தைலக்காப்பு உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • இந்த உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பகல்பத்து உற்சவம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இதையொட்டி, பெருமாளுக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெறுகிறது. பின்னர் பெருமாள், தேசிகர் சாமியை பகல்பத்து மண்டபத்திற்கு கொண்டு சென்று, அங்கு பெருமாள், தேசிகர், ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறும். பின்னர் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கப்பட்டு சாமிக்கு சாற்றுமுறை நடக்கிறது. இந்த உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.

    வருகிற 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு அன்று, சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற உள்ளது. மேலும் மார்கழி மாதம் என்பதால் சாமிக்கு தினந்தோறும் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில், 1-ந்தேதி பகல் பத்து உற்சவம் நிறைவடையும் நிலையில், மறுநாள் 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • இந்த கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.
    • விஸ்வரூப தரிசனமும், பெருமாளுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது.

    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி பெருமாளை வழிபட்டு செல்வார்கள்.

    அந்த வகையில் நடப்பாண்டு புரட்டாசி மாத முதல் மற்றும் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து சாமி தரிசனம் செய்தனர். இன்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேவநாதசாமி கோவிலுக்கு திரண்டு வந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மொட்டை அடித்துக் கொண்டு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தேவநாதசாமியை தரிசனம் செய்தனர்.

    முன்னதாக நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அதிகாலை 3 மணியளவில் விஸ்வரூப தரிசனமும், பெருமாளுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. மேலும் 3-ம் சனிக்கிழமையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதவிர இன்று 3-ம் வார சனிக்கிழமை பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் பகுதி மற்றும் சாலைகளில் கூட்டம் அலைமோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • திருவோண நட்சத்திரத்தில் ரத்னாங்கி சேவை நடைபெற்றது.
    • இன்று (வியாழக்கிழமை) இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினசரி சிறப்பு பூஜை செய்யப்பட்டு, காலை, மாலை வேளையில் சாமி வெவ்வேறு வாகனத்தில் வீதிஉலா வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று முன்தினம் காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் தேசிகர் எழுந்தருளினார்.

    இதையடுத்து டிராக்டர்கள் மூலம் தேர் இழுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.

    அதனை தொடர்ந்து நேற்று திருவோண நட்சத்திரத்தில் ரத்னாங்கி சேவை நடைபெற்றது. அப்போது பெருமாள் சன்னதியில் உள்ள யோக நரசிம்மர் மற்றும் தேசிகர் ஆகியோர் மலையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் எழுந்தருளினர். பின்னர் யோக நரசிம்மர் மற்றும் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கீழே கொண்டுவரப்பட்டு பெருமாள், ராமர், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், தாயார், ராஜகோபாலன், பள்ளிகொண்டநாதர், ஆண்டாள், ஆழ்வார், பாஷியக்காரர் ஆகிய சன்னதிகளில் தேசிகர் நேரில் சென்று தரிசனம் செய்தார்.

    பின்னர் பெருமாள், தாயார் தேசிகர் சன்னதிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி மற்றும் சாற்று முறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • அக்டோபர் 4-ந்தேதி தேர்த்திருவிழா நடக்கிறது...
    • 6-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் முதன்மையான தேவநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் உற்சவர் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினார். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்று விழா கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு ஹம்ச வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.

    விழாவில் தினசரி காலை, மாலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. மேலும் அடுத்த மாதம்(அக்டோபர்) 4-ந் தேதி காலை 6 மணிக்கு தேர்த்திருவிழாவும், 5-ந்தேதி திருவோணம் நட்சத்திரத்தில் ரத்னங்கி சேவையும், விஜயதசமி அம்பு போடுதல், கண்ணாடி பல்லக்கு வீதி உலா புறப்பாடு, 6-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • 4-ந்தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
    • 6-ந்தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் வருடந்தோறும் சித்திரை மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிகர் பிரம்மோற்சவம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, கொடியேற்று விழா நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரவு அம்ச வாகனம், 27-ந்தேதி காலை பல்லக்கு, இரவு தங்கவிமானம், 28-ந்தேதி காலை சூரிய பிரபை, இரவு யாளி வாகனம், 29-ந்தேதி சந்திர பிரபை, 30-ந்தேதி வெள்ளி சிம்ம வாகனத்தில் சாமி வீதிஉலா நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. 5-ந்தேதி திருவோணம் நட்சத்திரத்தில் ரத்னாங்கி சேவை நடைபெற உள்ளது. அப்போது பெருமாள் சன்னதியில் உள்ள யோக நரசிம்மர் மற்றும் தேசிகர் ஆகியோர் மலையில் உள்ள லட்சுமி ஹயக்கிரிவர் சன்னதியில் எழுந்தருள்வார்கள். மேலும் அன்றைய தினம் விஜயதசமி என்பதால் விஜயதசமி அம்பு போடுதல், கண்ணாடி பல்லக்கு வீதி புறப்பாடும் நடைபெற உள்ளது. பின்னர் 6-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    முன்னதாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மகாளய அமாவாசை என்பதால் தேசிகர் சன்னதியில் பெருமாள், தாயார் எழுந்தருளி கண்ணாடி அறை உற்சவமும், நாளை மறுநாள் முதல் 9 நாள் நவராத்திரி உற்சவம் தொடங்கப்பட்டு, வருகிற 4-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    • ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்க தனித்தனியாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
    • வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். புரட்டாசி மாதம் பிறந்ததையடுத்து கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்களும், 3-வது சனிக்கிழமை அன்று 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் வசதிக்காக கோவிலில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் வகையில் கழியால் தடுப்புகள் அமைக்கப்படுகிறது. மேலும் வழக்கமாக கோவில் பின்புறம் உள்ள கூடத்தில் பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் மொட்டையடிப்பார்கள் என்பதால் பக்தர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே மொட்டையடிக்கும் இடம் மாற்றப்பட்டுள்ளது.

    அதாவது சாலக்கரை இலுப்பை தோப்பில் பக்தர்கள் மொட்டையடிக்க கூடாரமும், ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்க தனித்தனியாக கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக சாலக்கரையிலேயே இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    ×