search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை கார்த்திகை தீபம்"

    ராஜகோபுரத்தின் முன்பு எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என்று பக்தி கோஷம் எழுப்பினர்.
    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும்.

    இந்த ஆண்டிற்காக தீபத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு உள்ளதால் விழா நாட்களில் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலையில் விநாயகர், சந்திரசேகரர், வள்ளி-தெய்வானையுடன் முருகன், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு 5-ம் பிரகாரத்தில் உற்சவ உலா நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் நேற்று தீபத்திருவிழாவின் 7-ம் நாள் விழாவாகும். வழக்கமாக 7-ம் நாள் விழாவின் போது பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும். அதிகாலையில் தொடங்கி அன்று இரவு வரை தேரோட்டம் நடைபெறும். இதில், உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் கொரோனா காரணமாக கோவிலில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக கோவிலில் நிர்வாகம் சார்பில் ஆகம விதிகளின்படி கோவிலின் 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகளின் ரதங்கள் பிரகார உலா வந்தது.

    முன்னதாக அதிகாலையில் கோவிலின் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருகல்யாண மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க பஞ்சமூர்த்திகள் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து 5-ம் பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் முன்பு கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு தேரோட்டம் நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக செய்யப்பட்டு இருந்த சிறப்பு ரதங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.

    முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் அனுமதி அளிக்கப்படவில்லை.

    பின்னர் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியை காண ராஜகோபுரத்தின் நுழைவு வாயில் அருகில் நின்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த குறைந்த அளவிலான பக்தர்களை கோவிலுக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். தொடர்ந்து ராஜகோபுரத்தின் முன்பு எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

    இதையடுத்து வழக்கமாக நடைபெறுவது போன்று முதலில் விநாயகர் ரதத்தை பக்தர்கள் வடம் பிடித்து சிறிது தூரம் இழுத்தனர். தொடர்ந்து முருகர், அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ரதங்களும் இழுக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சமூர்த்திகள் பிரகார உலா நடைபெற்றது.

    பஞ்சமூர்த்திகள் உலா காலை 6.30 மணி அளவில் மேளதாளங்கள் முழங்க தொடங்கி 9 மணி அளவில் நிறைவடைந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

    பின்னர் தொடர்ந்து 3 நாட்கள் இரவில் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தெப்ப உற்சவமும், நிறைவாக 23-ந்தேதி சண்டீகேஸ்வரர் உலாவும் நடைபெற உள்ளது.
    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை (17-ந்தேதி) மதியம் 1 மணி முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் அனுமதி இல்லை.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    6-ம் திருநாளான நேற்று (15-ந்தேதி) காலையில் விநாயகர், சந்திர சேகரர் வெள்ளி யானை வாகனத்தில் பிரகாரத்தில் வலம் வந்தார். 63 நாயன்மார்கள் பிரகார விழா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதன் பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரதத்தில் பிரகார உலா வந்தனர்.

    இதைத்தொடர்ந்து 7-ஆம் திருநாளான இன்று காலை 6.30 மணி முதல் 7.30மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் விநாயகர் தேர் தேரோட்டம் நடந்தது. கோவில் பிரகாரத்திலேயே தேர் வலம் வந்தது. அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் மகா ரதங்களில் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வந்தனர்.

    மேளதாளங்கள் முழங்க தேர் அசைந்தாடி வந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள், உள்ளூர் பிரமுகர்கள் பங்கேற்றனர். தேரோட்ட நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை (17-ந்தேதி) மதியம் 1 மணி முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் அனுமதி இல்லை. இதுதொடர்பாக பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பக்தர்கள் தங்களது நகை மற்றும் பணத்தை பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் போலீசார் சார்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    தீப விழாவின் உச்ச நிகழ்வாக வருகிற 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.அப்போது பஞ்சமூர்த்திகள் தங்க ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். அர்த்தநாரீஸ்வரர் நடனமாடியபடி காட்சி தருவார்.

    இந்த நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.உள்ளூர் பக்தர்கள் கோவில் வெளியிலிருந்து மகா தீபத்தை தரிசனம் செய்யலாம். அவர்கள் மகாதீபமண்டபத்துக்கு செல்ல அனுமதி இல்லை.

    தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 7-ம் நாள் நடைபெறும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவில் வளாகத்திலேயே வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டை போன்றே கோவில் வளாகத்திலேயே சாமி உலா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான

    7-ம் நாள் நடைபெறும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவில் வளாகத்திலேயே வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது. வழக்கமாக தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளன்றும், அந்த சமயத்தில் வரும் பவுர்ணமியன்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், மலையை சுற்றி கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் 1.03 மணிக்கு தொடங்கி 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.51 மணிக்கு நிறைவடைகிறது.

    இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் மலையேறி சென்று மகா தீபத் தரிசனம் செய்யவும், நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணி முதல் வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் 6-ம் நாள் விழாவையொட்டி நேற்று நால்வருடன் விநாயகர், சந்திரசேகரர் உலா நடைபெற்றது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் உலாவும் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவில் கோவிலில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 5-ம் பிரகாரத்தில் உலா வந்தனர்.

    தொடர்ந்து 6-ம் நாள் விழா நேற்று நடைபெற்றது. வழக்கமாக 6-ம் நாள் விழாவின் போது காலையில் 63 நாயன்மார்கள் உலா நடைபெறும். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் 63 நாயன்மார்கள் விழா நடைபெறவில்லை. இருப்பினும் நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மேலும் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க 5-ம் பிரகாரத்தில் நால்வருடன் விநாயகர், சந்திரசேகரர் உலா நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணியளவில் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெற்றது.

    தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் நாள் அன்று நடைபெறும் தேரோட்டமும் ஒன்று. இந்த ஆண்டும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதனால் 7-ம் நாள் விழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) ஆகம விதிகளின் படி கோவில் வளாகத்திற்கு வெள்ளி வாகனங்களில் சாமி உலா காலை சுமார் 6.30 மணியளவில் நடைபெற உள்ளது. இன்று காலை 9 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. அதன்பின்னர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
    கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வெளியூர் பக்தர்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவை முன்னிட்டு கொரோனா கட்டுப்பாடுகளும் அமுலில் உள்ளது. எனவே வருகிற 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

    இதேபோல் 19-ந்தேதி பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்லவும் அனுமதி இல்லை. மேலும் வருகிற 16-ந் தேதி கோவில் வளாகத்தில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுவதால் பக்தர்கள் அன்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. எனவே அந்த நாட்களில் வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    தற்போது திருவிழாவை முன்னிட்டு தற்காலிக பஸ் நிலையங்கள் 4 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையங்கள் வருகிற 23-ந் தேதி வரை செயல்படும். ஈசானியம், செங்கம் ரோடு, காஞ்சி ரோடு, திருக்கோவிலூர் ரோடு ஆகியவற்றில் இந்த பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வெளியூர் பக்தர்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளது. சாதாரண நாட்களில் வரும் பக்தர்களின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது. மேலும் தொடர் மழையும் பக்தர்கள் வருகை குறையக் காரணம் என்று கூறப்படுகிறது.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் அம்பாளுடன் கூடிய சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று 5-ம் நாள் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் அம்பாளுடன் கூடிய சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து விநாயகரும், சந்திரசேகரரும் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினர். பின்னர் அங்கிருந்து 5-ம் பிரகாரத்திற்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் இருந்த வாகனங்களில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளினர். அப்போது சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கோவில் 5-ம் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உலா நடைபெற்றது. பின்னர் இரவு சுமார் 9 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உலா நடைபெற்றது.

    அப்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாமி உலா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3-ம் நாள் தீபத்திருவிழாவையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது. மேலும் கோவிலில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடந்ததை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 10-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவில் கோவில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெற்றது.

    தொடந்து 3-ம் நாள் விழாவை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் விநாயகருக்கும், சந்திரசேகரருக்கும் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினர். அங்கிருந்து 5-ம் பிரகாரத்திற்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ள வாகனங்களில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளினர். பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் திரண்டு நின்று வழிபட்டனர். பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலில் 5-ம் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உலா நடைபெற்றது.

    மேலும் 3-ம் நாள் விழாவையொட்டி கோவிலில் 1008 சங்காபிஷேகம் மற்றும் மகா யாகம் நடைபெற்றது. முன்னதாக 1008 சங்குகளில் புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மகா யாகம் முடிந்த பிறகு புனித நீர் கொண்டு அருணாசலேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. கோவிலில் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோவில் வளாகத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இரவு சுமார் 9 மணியளவில் கோவில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் உற்சவ உலா நடைபெற்றது.

    ஆண்டுதோறும் தீபத் திருவிழாவின் 3-ம் நாள் விழாவின் போது பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்துவதற்காக பிரார்த்தனை உண்டியல் வைக்கப்படும். அதன்படி 3-ம் நாள் விழாவான நேற்று காலை கோவிலில் பிரார்த்தனை உண்டியல் கோவில் கொடி மரம் அருகில் வைக்கப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2-ம் நாள் தீபத் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கொட்டும் மழையில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடந்தது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அன்று காலை மற்றும் இரவில் கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் விநாயகர், முருகர், உண்ணாமலை சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உற்சவம் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா நடைபெற்றது.

    தொடர்ந்து 2-ம் நாள் விழாவான நேற்று காலை கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

    பின்னர் மேளதாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினர். பின்னர் அங்கிருந்து 5-ம் பிரகாரத்திற்கு விநாயகர் மற்றும் சந்திரசேகரர் கொண்டு வரப்பட்டு ராஜகோபுரம் முன்பு எழுந்தருளினர். அப்போது சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் திரண்டு நின்று வழிபட்டனர்.

    இதற்கிடையில் திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் வரை தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. கொட்டும் மழையில் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் 5-ம் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கையில் குடையுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு சுமார் 8 மணியவில் கோவில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் உற்சவ உலா நடைபெற்றது. கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    ஆன்லைன் மூலம் பதிவு செய்த வெளியூர் பக்தர்களும் கொடியேற்றும் நிகழ்ச்சியை காண அனுமதிக்கப்படவில்லை. கொடியேற்றம் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா முக்கியமானது.

    ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் விழாவில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தமிழகத்தில் கொரோனா பரவியதால் கடந்த கார்த்திகை தீபத்தின்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பரணி தீபம், மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண வெளியூர் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் சன்னதி முன்புள்ள தங்க கொடிமரத்தில் இன்று காலை 6.30 மணி முதல் 7.25 மணிக்குள் கொடி ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கொடியை ஏற்றினர்.

    இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் ஊழியர்கள், உள்ளூர் பிரமுகர்கள் உபயதாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

    கொடியேற்றும் நிகழ்ச்சியை காண கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வெளியில் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.

    கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உபயதாரர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள்.

    மேலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்த வெளியூர் பக்தர்களும் கொடியேற்றும் நிகழ்ச்சியை காண அனுமதிக்கப்படவில்லை. கொடியேற்றம் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    முதல் திருவிழா நாளிலேயே வெளியூர் பக்தர்கள் வந்து செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் உள்ளூர் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    முன்னதாக நேற்று கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இரவு விநாயகர் வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தது.

    கொடியேற்றத்தை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. இன்று இரவு சாமி வீதிஉலா கோவில் பிரகாரத்திலே நடக்கிறது.

    தீபவிழாவின் உச்ச நிகழ்வாக 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    ராஜகோபுரம் முன்பு திருக்குடைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு வீதி உலா நடந்தது. மேளதாளங்கள் முழங்க நடந்த வீதிஉலாவிற்கு பின்னர் திருக்குடைகள் அருணசலேஸ்வரர் கோவிலில் ஒப்படைக்கப்பட்டன.
    தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தீபத்திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு இன்று முதல் தினமும் காலை மற்றும் இரவில் சாமி உலா கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் வீதிஉலாவின் போது சாமிக்கு பயன்படுத்தப்படும் திருக்குடைகள் சென்னை பல்லாவரத்தில் உள்ள அருணாச்சலா ஆன்மிக சேவா சங்கத்தால் வழங்கப்படுகிறது இந்தாண்டும் சேவா சங்கத்தினர் சார்பில் நேற்று கோவிலுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான 7 திருக்குடைகள் காணிக்கையாக வழங்கப்பட்டது.

    முன்னதாக மாட வீதியில் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற்றது. ராஜகோபுரம் முன்பு திருக்குடைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு வீதி உலா நடந்தது. மேளதாளங்கள் முழங்க நடந்த வீதிஉலாவிற்கு பின்னர் திருக்குடைகள் அருணசலேஸ்வரர் கோவிலில் ஒப்படைக்கப்பட்டன.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை (புதன்கிழமை) காலை கார்த்திகை மகா தீபத் திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் எல்லை காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து. இன்று (செவ்வாய்க்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதைத்தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோவில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் நாளை (புதன்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதிலிருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் விழாவும் நடைபெற உள்ளது.

    கொரோனா தொற்று பரவலால் கொடியேற்ற விழாவில் பக்தர்கள் பங்கேற்கவும், மேலும் நாளை காலை 6 மணி முதல் 9 மணி வரை, தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொடியேற்றத்தை அடுத்து கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பஞ்ச மூர்த்திகளின் உற்சவம் 10 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 19-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவ உலாவும் நடைபெற உள்ளது.
    திருவண்ணாமலையில் தீபத் திருவிழா நாளை மறுநாள் (10-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந்தேதி பரணி தீபம், மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா நாளை மறுநாள் (10-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந்தேதி பரணி தீபம், மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக திருவிழாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நேற்று தீபத் திருவிழாவை முன்னிட்டு எல்லை தெய்வமான துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    பின்னர் துர்க்கையம்மன் உற்சவமூர்த்தி பல்லக்கில் எழுந்தருளி கோவில் வளாகத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நாதஸ்வர இசையுடன் மேளதாளம் முழங்க பெட்ரோமாஸ் விளக்குகளுடன் நடைபெற்ற அம்மன் பிரகார உலா பக்தர்கள் மனதைக் கவர்ந்தது.

    முன்னதாக கோவில் சிவாச்சாரியார்கள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகளை செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் பல்லக்கில் வலம் வந்தஅம்மனை வணங்கி மகிழ்ந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள், உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிகளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனர்.

    இதையொட்டி ஏ.எஸ்.பி.கிரண் ஸ்ருதி, டி.எஸ்.பி. அண்ணாத்துரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவம் நடக்கிறது.
    ×