search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமங்கலம்"

    • திருமங்கலம் அருகே வீடு இடிந்து விழுந்து ஒருவர் காயம் அடைந்தார்.
    • திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 3 தினங்களாக மழை பெய்து வருகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 3 தினங்களாக மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே உள்ள கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்(57).

    இவருடைய மனைவி சாந்தா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நாகராஜூக்கு 2 வீடுகள் உள்ளது. அம்மாபட்டி பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் ஆட்டு குட்டிகளை அடைத்து மற்றொரு வீட்டில் நாகராஜ் தூங்கி கொண்டிருந்தார்.

    திடீரென்று வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் நாகராஜின் வலது கால் முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்று காலை அதே ஊரைச் சேர்ந்த பாண்டி என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கதவை உடைத்து ரூ.35 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையிலான போலீசார் வீட்டில் ஆய்வு செய்து கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் புதுநகரை சேர்ந்தவர் ஜெயந்தி(வயது 36). கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் தனியாக வசித்து வருகிறார். மேலும் அவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார்.

    ஏல சீட்டு வசூல் செய்த பணம் மற்றும் காலி மனையிடம் வாங்குவதற்காக உறவினர்களிடம் கடனாக வாங்கிய பணம் உட்பட ரொக்க பணம் ரூ.35 லட்சத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.கடந்த 10 -ந் தேதி ஜெயந்தி திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்றார். இதனால் கடந்த 5 நாட்களாக வீடு பூட்டியிருந்தது.

    இந்த நிலையில் வீட்டின் மாடியில் வசிப்பவர்கள் இன்று காலை வீட்டின் பின்புறம் பார்த்த போது ஜெயந்தி வீட்டின் பின்பக்க வாசல் திறந்து கிடப்பதை கண்டு ஜெயந்திக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த ஜெயந்தி வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த ரொக்கப் பணம் ரூ.35 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையிலான போலீசார் வீட்டில் ஆய்வு செய்து கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொ ள்ளப்பட்டது. மோப்பநாய் வீட்டின் அருகில் உள்ள தெரு வழியாக கண்மாய் பகுதி நோக்கி சென்றது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ரூ.35 லட்சத்தை திருடிய கொள்ளையர்களை பிடிக்க ேபாலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக வாலிபர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கட்டதேவன்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், பி.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித்குமார் (வயது 23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் இன்று நடக்க இருந்தது. திருமண வயதை எட்டாத பெண்ணுக்கு திருமணம் நடக்க இருப்பது குறித்து சமூக நல அலுவலர் சுமதிக்கு தகவல் கிடைத்தது.

    அவர், சிந்துப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசாரும், சமூக நல அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். சிறுமியை மீட்டு முத்துப்பட்டி காப்பக இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், ரஞ்சித்குமார், அவரது தந்தை முருகன், தாய் முத்துச்சரம் மற்றும் சிறுமியின் உறவினர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    ×