search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "door"

    • வீட்டின் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது.
    • கூடல் புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை மேலமடையை சேர்ந்தவர் ராஜேசுவரி (70). சம்பவத்தன்று இவர் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.

    பீரோவில் இருந்த ரூ.7ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோசாகுளம் திருமலை நகரை சேர்ந்தவர் சலீம் (61). இவர் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.அந்த பைக் சம்பவத்தன்று திருடு போனது.

    இதேபோன்று தபால்தந்திநகர் விரிவாக்கம் கோமதி நரை சேர்ந்த சுரேஷ்குமாரின் (42) பைக்கும் திருடு போனது. இது குறித்து கூடல் புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் ெபாருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை திருடிய ஆனையூரை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    • சேலம் அருகே ஆட்டையாம்பட்டி டாக்டர் வீட்டில் கதவை உடைத்து 5 பவுன், ரூ.2.15 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
    • டாக்டர் வீட்டின் அருகே இருந்த மற்றொரு டாக்டர் வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வக்கீல் வினோத் சேவியர். இவரது மனைவி ஆர்த்தி மரியா. இவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள தங்களது பண்ணை வீட்டின் தோட்டத்திற்கு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டி்ன் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது.

    மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்து, கொள்ளையடித்துச் சென்றதை அறிந்த அவர்கள், சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏற்கனவே கடந்த 12-ந் தேதி, இவர்களது வீட்டின் அருகில் உள்ள மற்றொரு டாக்டர் வீட்டில் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்ம நபர்களின் இந்த தொடர் திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    • ராம்குமார் கடந்த 8 மாதங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
    • கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பாட்டி ராஜலட்சுமி கதவை திறக்க முயன்றுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சி சன்னதி தெருவை சேர்ந்தவர் ராம்குமார் மனைவி விவேதா (வயது 20). இருவருக்கும் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது.

    இவர்களுக்கு நித்தீஸ்வரன் (வயது 1) என்ற ஆண் குழந்தை உள்ளது. ராம்குமார் வெளிநாட்டில் கடந்த 8 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார். விவேதா மாமனார் ராமலிங்கம், மாமியார் செல்வி, ராமலிங்கத்தின் தாயார் ராஜலட்சுமி ஆகியோருடன் கங்களாஞ்சேரியில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முதல் நாள் காலை 9 மணிக்கு வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்றுள்ளனர்.

    பாட்டி ராஜலட்சுமி மட்டும் வீட்டிலிருந்துள்ளார்.

    விவேதா குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு அறையில் இருக்கிறார் என நினைத்துக் கொண்டு இருந்துள்ளார்.

    காலை 11 மணி ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பாட்டி ராஜலட்சுமி கதவை திறக்க முயன்றுள்ளார்.

    பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்று கத்தி கூச்சலிட்டுள்ளார்.

    அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது விவேதா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் விவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமாகி 2 ஆண்டுகளில் விவேதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் உதவி கலெக்டர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • அணை கட்டினால் காவிரியில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி பயன்படுத்த வாய்ப்பாக இருக்கும்.
    • கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உள்ளே புகாதவாறு போர்க்கால அடிப்படையில் கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய தண்ணீரால் சூழப்பட்டுள்ள திட்டு கிராமங்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. 64 டிஎம்சி தண்ணீரை தேக்கி பயன்படுத்தும் அளவுக்கு ராசிமணலில் அணை கட்டினால் விவசாயத்திற்கு பயன்படும்.

    எனவே மத்திய அரசு கர்நாடக அரசின் உதவியை பெற்று அதற்கான பணியை தொடங்கிட வேண்டும். காவிரியில் 93 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பாசனத்திற்கு தேக்கி வைக்கும் அளவிற்கு மேட்டூர் அணை உள்ளது. அதற்கு மேல் வரும் தண்ணீர் அனைத்தும் கடலுக்குத் தான் செல்ல வேண்டும். அணை கட்டினால் காவிரியில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி பயன்படுத்த வாய்ப்பாக இருக்கும். கரூர் முதல் பஞ்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் எத்தனை ஏரிகள் கொள்ளிடம் கரைப்பகுதியில் இருக்கின்றதோ, அத்தனை ஏரிகளிலும் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொள்ளிடம் ஆற்றின் பாலத்திலிருந்து ஆறு கடலில் கலக்கும் கடல் முகத்துவாரம் வரை இரு கரைகளிலும் கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும். இந்த முறை ஒரு லட்சத்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் தான் வெளியேற்றப்படுகிறது.ஆனால் கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் 5 லட்சம் கன அடி தண்ணீர் செல்லும் ஆற்றில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கொள்ளிடம் அருகே நாதல்படுகை, முதலை மேட்டுதிட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களில் ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் முற்றிலும் அழிந்து இருக்கிறது. குடிசை வீட்டிற்கு ரூ25 ஆயிரம், ஓட்டு வீட்டிற்கு ரூ50,000 வீதம் நிவாரணம் வழங்கி மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தொடர்ந்து மேடான பகுதிகளில் மனைபட்டா வழங்கி ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ளவர்களை குடிமாற்றம் செய்து வீடு கட்டி கொடுக்க வேண்டும். அடுத்த ஆண்டிற்குள் அதனை செய்ய வேண்டும். கொள்ளிடம் பகுதியில் 3வது முறையாக தோட்டப்பயிர்கள் பருத்தி, கரும்பு, வாழை உள்ளிட்ட பல்வேறு பணப்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    எனவே விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணமாக 50 ஆயிரம் உற்பத்தி செலவை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கு முதல் அமைச்சர் முழு முயற்சி செய்து விவசாயிகளுக்கு பெற்று தர வேண்டும்.

    வெள்ளமணல் கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உள்ளே புகாதவாறு போர்க்கால அடிப்படையில் கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாவட்ட விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் விஸ்வநாதன், ஆச்சாள்புரம் விவசாய சங்கத் தலைவர் அருண், நிர்வாகிகள் சீனிவாசன் ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு மீண்டும் வெளிநாடு செல்ல புறப்பட்டார்.
    • பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 3Ñ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பாதரக்குடி புறவழிச்சாலை லட்சுமணன் நகரை சேர்ந்தவர் வெற்றிவளவன் (வயது 45). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் .

    இந்நிலையில் தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு மீண்டும் வெளிநாடு செல்ல புறப்பட்டார். அவரை சென்னை விமான நிலையத்திற்கு வழி அனுப்ப அவரது மனைவி சூரியகாந்தி (40) மற்றும் மருமகள் ஆகியோர் சென்றிருந்தனர். வெளிநாடு அனுப்பி விட்டு சென்னையில் இருந்து மீண்டும்நள்ளிரவு சூரியகாந்தி வீடு திரும்பியு ள்ளார். அப்பொழுதுவீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்ப ட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்றுபார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 3Ñ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சூரியகாந்தி சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர் மணி மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • கதவை உடைத்து ரூ.35 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையிலான போலீசார் வீட்டில் ஆய்வு செய்து கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் புதுநகரை சேர்ந்தவர் ஜெயந்தி(வயது 36). கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் தனியாக வசித்து வருகிறார். மேலும் அவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார்.

    ஏல சீட்டு வசூல் செய்த பணம் மற்றும் காலி மனையிடம் வாங்குவதற்காக உறவினர்களிடம் கடனாக வாங்கிய பணம் உட்பட ரொக்க பணம் ரூ.35 லட்சத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.கடந்த 10 -ந் தேதி ஜெயந்தி திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்றார். இதனால் கடந்த 5 நாட்களாக வீடு பூட்டியிருந்தது.

    இந்த நிலையில் வீட்டின் மாடியில் வசிப்பவர்கள் இன்று காலை வீட்டின் பின்புறம் பார்த்த போது ஜெயந்தி வீட்டின் பின்பக்க வாசல் திறந்து கிடப்பதை கண்டு ஜெயந்திக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த ஜெயந்தி வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த ரொக்கப் பணம் ரூ.35 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையிலான போலீசார் வீட்டில் ஆய்வு செய்து கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொ ள்ளப்பட்டது. மோப்பநாய் வீட்டின் அருகில் உள்ள தெரு வழியாக கண்மாய் பகுதி நோக்கி சென்றது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ரூ.35 லட்சத்தை திருடிய கொள்ளையர்களை பிடிக்க ேபாலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • கதவணை கட்டும் பணிக்கு சென்ற தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
    • அறிவழகனின் உறவினர்கள் மற்றும் சீப்புலியூர் கிராம மக்களும், பா.ம.க. வினரும் திரண்டு வந்து அறிவழகனின் உடலை எடுக்கவிடாமல் தடுத்ததுடன், கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏற்றப்பட்ட வேனையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே ஆதனூர் குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1064 மீட்டர் தூரத்திற்கு ரூ.465 கோடி மதிப்பில் கதவணை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

    இந்த கதவணை கட்டுமான பணியில் சீபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் அறிவழகன் (வயது 35) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில் கதவணை கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு சற்று தூரத்தில் கொள்ளிடம் ஆற்றில் அறிவழகன் மர்மமான முறையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அறிவழகன் உடலை கைப்பற்றியதுடன் அணை கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரையும் விசாரணைக்காக போலீஸ் வேனில் ஏற்றி அழைத்துச் செல்ல முற்பட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த அறிவழகனின் உறவினர்கள் மற்றும் சீப்புலியூர் கிராம மக்களும், பா.ம.க. வினரும் திரண்டு வந்து அறிவழகனின் உடலை எடுக்கவிடாமல் தடுத்ததுடன், கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏற்றப்பட்ட வேனையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து 3 மணிநேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நீடித்து வந்தது.

    அறிவழகனை ஜேசிபி வாகனத்தால் மோதி கொலை செய்து புதைத்துவிட்டு மறைப்பதாகவும், அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அறிவழகன் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

    அவர்களிடம் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜ்குமார், தாசில்தார் மகேந்திரன், மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் உரிய இழப்பீடு தொகையை தருவதாக கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொண்டதாலும், விதவைகள் மறுவாழ்வு திட்டத்தில் அறிவழகன் மனைவிக்கு அரசு வேலை பெற்றுத் தர ராஜகுமார் எம்.எல்.ஏ, தாசில்தார் மகேந்திரன் உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×