வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு மீண்டும் வெளிநாடு செல்ல புறப்பட்டார்.பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 3Ñ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பாதரக்குடி புறவழிச்சாலை லட்சுமணன் நகரை சேர்ந்தவர் வெற்றிவளவன் (வயது 45). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் .

இந்நிலையில் தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு மீண்டும் வெளிநாடு செல்ல புறப்பட்டார். அவரை சென்னை விமான நிலையத்திற்கு வழி அனுப்ப அவரது மனைவி சூரியகாந்தி (40) மற்றும் மருமகள் ஆகியோர் சென்றிருந்தனர். வெளிநாடு அனுப்பி விட்டு சென்னையில் இருந்து மீண்டும்நள்ளிரவு சூரியகாந்தி வீடு திரும்பியு ள்ளார். அப்பொழுதுவீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்ப ட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்றுபார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 3Ñ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து சூரியகாந்தி சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர் மணி மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com