search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி விமான நிலையம்"

    • திருச்சி விமான நிலையத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
    • விமான பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும் அதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகளும், மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் திருச்சி விமான நிலையத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

    இதே போல் வெளிநாட்டு கரன்சி மற்றும் அரியவகை ஆமை, பாம்பு, பல்லிகள் கடத்தி வருவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா விமானம் மலேசிய தலை நகர் கோலாலம்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த விமான பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த ராம் பிரபு (வயது 39). என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சோதனை செய்தனர்.

    அப்போது அவரிடம் 23 லட்சம் மதிப்பிலான சவுதி ரியால் இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விமான நிலைய இயக்குனர் இது குறித்து கேள்வி எதுவும் கேட்காமல் அமைதியாக சென்றுள்ளார்.
    • பாதுகாப்பு படை வீரர் உடனடியாக வேறு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தின் பாதுகாப்பு பணியில் சுமார் 300-க்கும் அதிகமான மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணியில் இருப்பவர்கள் விமான பயணிகள் உள்ளிட்ட அனைவரையும் சோதனை செய்த பின்னரே விமான நிலையத்திற்குள் அனுப்புவது வழக்கமான நடைமுறையாகும்.

    திருச்சி விமான நிலைய இயக்குனராக பணிபுரிந்து வருபவர் சுப்ரமணி. இவர் சில மாதங்களுக்கு முன்பு வெளிமாநிலத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டு பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை திருச்சி விமான நிலையத்தின் முனைய பகுதிக்குள் அவர் வந்தார். அப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையின் காவலர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் அவரிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளார்.

    அதனை விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி காண்பித்த பின்னரும் அவரை உள்ளே அனுமதிக்காமல், அவர் அளித்த அடையாள அட்டையை ஸ்கேனர் கருவி மூலம் மீண்டும் சோதனை செய்துள்ளார்.

    இருந்தபோதிலும் விமான நிலைய இயக்குனர் இது குறித்து கேள்வி எதுவும் கேட்காமல் அமைதியாக சென்றுள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் விளக்கம் கேட்டனர்.

    இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் உடனடியாக வேறு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிகழ்வானது விமான நிலையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பணியில் இருந்த காவலருக்கு விமான நிலைய இயக்குனரை கூட தெரியாமல் அவர் எவ்வாறு பணிபுரிந்தார் என மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

    மேலும் விமான நிலைய இயக்குனரை சோதனை செய்யும் நிலை இதுபோன்று பலமுறை நடைபெற்று இருப்பதும், இதனை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

    மற்ற அலுவலர்களோ, அதிகாரிகளோ விமான நிலையத்திற்குள் நுழையும் போது அவர்களது அடையாள அட்டையை காண்பித்தால் உள்ளே அனுமதிக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், ஒரு விமான நிலைய இயக்குனர் முனையத்திற்குள் நுழையும்போது அவரின் அடையாள அட்டையை ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்த பின்பு உள்ளே அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • யாரும் எதிர்பாராத வகையில் அதிகாரிகளின் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடினார்.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது போன்று இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியே அழைத்துச் சென்று நவீன ஸ்கேனிங் கருவி மீலம் சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.39.50 லட்சம் மதிப்பிலான 652 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த பயணியை மருத்துவ பரிசோதனைக்காக விமான நிலைய பகுதியில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் வெளியே அழைத்து வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அதிகாரிகளின் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடினார். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விரட்டி சென்று பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • இன்று அதிகாலை துபாயில் இருந்து இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.
    • அதிகாரிகள் துபாயில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அதிக அளவில் அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற கோடை விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விமானங்கள் இயக்கவும் ஆலோசனைக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே சர்வதேச நாடுகளில் இருந்து திருச்சிக்கு குருவிகள் மூலம் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அதிக அளவில் கடத்தி வரப்படுகின்றன. இதனை தடுக்க திருச்சி விமான நிலையத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்த அதிகாரிகளின் கண்ணில் சிக்காமல் இருக்க கடத்தல் புள்ளிகள் பல்வேறு நூதன வழிகளில் தங்கத்தை கடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை துபாயில் இருந்து இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். இதில் ஆண் பயணி ஒருவர் மீதான சந்தேகத்தின் அடிப்படையில் அவரையும், அவர் கொண்டு வந்த உடமைகளையும் நவீன ஸ்கேனர் கருவி மூலம் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.

    அப்போது அவர் எடுத்து வந்த மொபைல் போன் செல்பி ஸ்டிக்கில் மறைத்து கடத்தி வந்த ரூ.27 லட்சத்து 98 ஆயிரத்து 189 மதிப்புள்ள 53 கிராம் பிடிபட்டது.

    பின்னர் அதிகாரிகள் துபாயில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துரை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • கடந்த 2 நாட்களில் ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவதும், இங்கிருந்து வெளிநாட்டு பணத் தாள்களை கடத்தி செல்வதும் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

    இருந்தபோதிலும் அதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற் கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது.

    இந்த விமானத்தில் பயணம் செய்த திருச்சியை சேர்ந்த ஷேக் அப்துல்லா காதர் (வயது 43) என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவர் உடமைகளில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில், சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் நேற்று இரவு திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துரை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது மதுரையைச் சேர்ந்த அபூ சலி (41) என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

    உடனடியாக அவரை தனி அறைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள் அவர் எடுத்து வந்த உடமைகளை சல்லடை போட்டு நவீன ஸ்கேன் கருவி மூலம் சோதனை செய்தனர். இதில் அவர் தான் கொண்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதனையும் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கண்ட பயணிகளிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் இருவரிடமும் இருந்து 1,516 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 86 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக இங்கிருந்து வெளிநாட்டு பணத்தாள்கள் கடத்துவது அதிகரித்துள்ளது.
    • விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்கள் கொண்டு வந்த உடமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக இங்கிருந்து வெளிநாட்டு பணத்தாள்கள் கடத்துவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு துபாயில் இருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது.

    இந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்கள் கொண்டு வந்த உடமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது சலீம் (வயது 42) என்ற பயணி தனது உடமையில் மறைத்து எடுத்து வந்த ரூ.47.67 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தையும் ரூ.4.25 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    • திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த சில தினங்களாக தங்கத்தை போன்று வெளிநாட்டு பணம் கடத்தலும் அதிகரித்துள்ளது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் உள்நாட்டு விமான சேவைகளாக பெங்களூர், சென்னை, ஐதராபாத், டெல்லி உள்ள நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தை போன்று வெளிநாட்டு பணம் கடத்தலும் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகப்படும் வகையில் இருந்த பயணிகளில் ஒருவரான மதுரையைச் சேர்ந்த முகமது அனீஸ் (வயது 37) என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். இதில் அவரது உடைமையிலிருந்து இந்திய மதிப்பில் ரூ.9.80 லட்சம் மதிப்பிலான அமெரிக்கன் டாலர் மற்றும் சவுதி அரேபியன் ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தாள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் அந்த வெளிநாட்டு பணம் அவருக்கு எப்படி கிடைத்தது, யாரிடம் இருந்து வாங்கினார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருச்சியில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் விமானங்களில் வெளிநாட்டு பணம் கடத்தி செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
    • விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, திருச்சியில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் விமானங்களில் வெளிநாட்டு பணம் கடத்தி செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அவரது உடமைகளை சோதனை செய்த போது அவர் அணிந்திருந்த காலணியில் ரூ.7.73 லட்சம் மதிப்பிலான 9600 அமெரிக்க டாலர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முத்துலிங்கம் என்ற பயணி கொண்டு வந்த உடைமைகளை சோதனையிட்டபோது தங்க நிறத்தில் சாயம் பூசப்பட்டு இருந்த லுங்கியை கண்டுபிடித்தனர்.
    • அதிகாரிகள் லுங்கியில் இருந்து தங்கத்தை பிரித்தெடுத்தனர். அதில் சுமார் 128 கிராம் எடையிலான தங்கம் இருந்தது.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தினசரி வாடிக்கையாகி விட்டது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 3 வெவ்வேறு சம்பவங்களில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அந்த சோதனையில் முத்துலிங்கம் (வயது 46) என்ற பயணி கொண்டு வந்த உடைமைகளை சோதனையிட்டபோது தங்க நிறத்தில் சாயம் பூசப்பட்டு இருந்த லுங்கியை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அந்த பயணி கொண்டு வந்த லுங்கியை அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் அதனை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்திய போது அதில் தங்கத்தை சாயம் போல் மாற்றி நவீன உத்தியை கையாண்டு நூதன முறையில் பூசப்பட்டு இருந்தது உறுதியானது.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த லுங்கியில் இருந்து தங்கத்தை பிரித்தெடுத்தனர். அதில் சுமார் 128 கிராம் எடையிலான தங்கம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.6 லட்சத்து 51 ஆயிரம் என மதிப்பிடப்பட்டது.

    தொடர்ந்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த விமான பயணி முத்துலிங்கத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
    • பயணி தனது உடலில் பேஸ்ட் வடிவில் ரூ.46.37 லட்சம் மதிப்பிலான 846 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது நவீன ஸ்கேனர் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னை, பெங்களூர், ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவர்கள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

    அந்த வகையில் கடந்த வாரம் ரூ.8 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் ஒரு பயணியிடமும், ரூ.41.65 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் மற்றொரு பயணியிடமும் என மொத்தமாக ரூ.49.65 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவர் தனது உடலில் பேஸ்ட் வடிவில் ரூ.46.37 லட்சம் மதிப்பிலான 846 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது நவீன ஸ்கேனர் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தவிர வியாபாரிகளாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், குருவிகள் என பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சி விமானநிலையத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
    • கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து விமான நிலைய மருத்துவர்கள் குழுவினர் இன்று நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,

    நாடு முழுவதும் உருமாறிய ஒமைக்ரான் பிஎஃப்7 வகை கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணைக்குழுமம் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி திருச்சி விமானநிலையத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

    கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து விமான நிலைய மருத்துவர்கள் குழுவினர் இன்று (24-ந்தேதி) நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர். இதேபோல மத்திய அரசு உத்தரவின் பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்று காலை 10 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து வந்த மூன்று விமானங்களில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • பயணிகள் கொண்டு வந்த உடமைகளை அதிநவீன ஸ்கேனர் கருவி மூலம் சோதித்தனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், உள்நாட்டு விமான சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து வந்த மூன்று விமானங்களில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். குறிப்பாக அவர்கள் கொண்டு வந்த உடமைகளை அதிநவீன ஸ்கேனர் கருவி மூலம் சோதித்தனர்.

    இதில் சுமார் 25 பயணிகளிடம் இருந்து அவர் கொண்டு வந்த உடமைகளில் மறைத்து எடுத்து வந்த சுமார் 7.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.3.75 கோடி ஆகும். மேலும் இதுகுறித்து முழு தகவல்களும் விசாரணை நிறைவு பெற்ற பிறகு அதிகாரிகள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×