search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி விமான நிலையம்"

    • திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.
    • விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை மறைத்து எடுத்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து இருந்த தங்கம் கடத்தல் மீண்டும் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஆண் பயணி ஒருவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவர் தனது காலணியின் அடிப்பகுதியில் ரூ.28.86 லட்சம் மதிப்பிலான 401.5 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணி ஒருவர் நடந்து கொண்டதை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.

    இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் தடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணி ஒருவர் நடந்து கொண்டதை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து ரூ.66.68 லட்சம் மதிப்பிலான 1061 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

    இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் திருச்சி விமான நிலைய பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
    • சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஆண் பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி போன்ற நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு திருச்சியில் இருந்து வியாபாரிகள் குருவிகளாக சென்று அங்கிருந்து தங்கத்தை திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பேடிக் ஏர் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஆண் பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து ரூ.35,02 ,800 மதிப்பிலான 556 கிராம் தங்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்த சிம்பத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவது தொடர்ச்சியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
    • மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தும் குருவிகளாக வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தும் குருவிகளாக வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது.

    இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது மலேசியாவை சேர்ந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது உடலில் மறைத்து பேஸ்ட் வடிவிலான 1025.12 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 64.51 லட்சம் ஆகும்.

    இதனை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாநிலங்களின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு இதுவரை இல்லாத அளவுக்கு நிதி வழங்கி வருகிறது.
    • வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அனைவரின் உதவியும் தேவைப்படுகிறது.

    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும். தமிழக அரசின் கோரிக்கைகள் அரசியல் முழக்கம் அல்ல, மக்களின் கோரிக்கைகள் என பேசினார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக நிகழ்ச்சி மேடையிலே பிரதமர் மோடி கூறியதாவது:-

    தமிழ்நாட்டிற்கு முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மாநிலங்களின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு இதுவரை இல்லாத அளவுக்கு நிதி வழங்கி வருகிறது. மாநிலங்களுக்கு 10 ஆண்டுகளில் ரூ.120 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

    வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அனைவரின் உதவியும் தேவைப்படுகிறது என்று கூறினார்.

    • உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது.
    • மேக் இன் இந்தியா திட்டத்தின் அடையாளமாக தமிழகம் திகழ்கிறது.

    திருச்சி :

    திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் பின்னர் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து பேசிய பிரதமர் மோடி,

    * இந்தியாவின் வளம் மற்றும் கலாச்சாரத்திற்கு தமிழகம் முக்கிய பங்காற்றியுள்ளது.

    * திருவள்ளுவர் தொடங்கி பாரதியார் வரை பல்வேறு இலக்கியங்களை நமக்கு கொடுத்துள்ளனர்.

    * தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் நான் புதிய சக்தியை பெறுகிறேன்.

    * உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது.

    * திருச்சியில் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், நாயக்கர்களின் வரலாற்று சுவடுகள் உள்ளன.

    * புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.

    * எந்த நாட்டுக்கு சென்றாலும், தமிழின் பெருமையை பேசாமல் நான் வருவதில்லை.

    * காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் தமிழை கொண்டு செல்கின்றன.

    * 40 மத்திய அமைச்சர்கள் 400 முறைக்கு மேல் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

    * பெரிய பெரிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர்.

    * புதிய விமான முனையத்தால், திருச்சியை சுற்றி வளர்ச்சி, வணிகம் பெருகும்.

    * மேக் இன் இந்தியா திட்டத்தின் அடையாளமாக தமிழகம் திகழ்கிறது.

    * கட்டுமானம், சமூக சட்டமைப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளோம்.

    * சாலை கட்டமைப்பு வசதிகளால், வணிகம், சுற்றுலா தமிழகத்தில் பெருகும்.

    * புதிய சாலை திட்டங்களால் ஸ்ரீரங்கம், சிதம்பரம், மதுரை, ராமேஸ்வரம், வேலூர் பயன்பெறும்.

    * துறைமுக கட்டமைப்புகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    * மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

    * மீனவர்கள் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    * சாகர் மாலா திட்டத்தால் துறைமுகங்களை சிறந்த சாலைகள் மூலம் இணைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எனது தமிழ் குடும்பமே உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
    • தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.1112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில், காரைக்குடி- ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை நடைபாதையுடன் கூடிய 2 வழிப்பாதை, எண்ணூர், திருவள்ளூர், நாகை, மதுரை, தூத்துக்குடி, இயற்கை எரிவாயு குழாய் திட்டம் உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதுதொடர்பான காணொலியும் திரையிடப்பட்டது.

    இதன்பின்னர் வணக்கம் என தமிழில் சொல்லி உரையை பிரதமர் மோடி தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * எனது தமிழ் குடும்பமே உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    * 2024-ல் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி தமிழகத்தில் தான்.

    * ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்கள், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும்.

    * தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும்.

    * கடந்த மாதம் வெள்ள பாதிப்பால் தமிழக மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    * வெள்ள பாதிப்பில் இருந்து மீள தமிழக மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்.

    * தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது.

    * சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன் தான். அனைத்தையும் விட தேசத்தை அதிகம் நேசித்தவர் விஜயகாந்த்.

    * விஜயகாந்த் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவர்களை அழைத்து பிரதமர் மோடி பாராட்டினார்.
    • ஆன்மிகம், கலாச்சாரம் என பல்வேறு பெருமைகளை கொண்டது திருச்சி மாநகர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.1112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவர்களை அழைத்து பிரதமர் மோடி பாராட்டினார்.

    பின்னர், விழாவில் முதலில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், 9 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி திட்டங்களை தமிழகத்திற்கு பிரதமர் மோடி கொடுத்துள்ளார். திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றவர் பிரதமர் மோடி என கூறினார்.

    மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது:- இந்தியா பொருளாதாரத்தில் மட்டுமின்றி கலாச்சாரத்திலும் சிறந்து விளங்க வேண்டும். ஆன்மிகம், கலாச்சாரம் என பல்வேறு பெருமைகளை கொண்டது திருச்சி மாநகர். புண்ணிய தலமான திருச்சிக்கு பிரதமர் மோடியை வரவேற்கிறோம். தமிழ்நாட்டின் தூய்மையான நகரமாக திருச்சி விளங்குகிறது. திருச்சியின் வரலாற்றில் இன்று புதிய அத்தியாயம். சாதாரண குடிமகன் கூட விமானத்தில் பயணிக்கும் நிலையை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார். 2032-க்குள் 42 கோடி மக்கள் விமான பயணம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.

    • மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.
    • சென்னை- பினாங்கு, சென்னை- டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.1112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * திருச்சியில் புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி.

    * தொட்ட துறைகள் அனைத்திலும், தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

    * திருச்சி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை.

    * மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.

    * சென்னை- பினாங்கு, சென்னை- டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும்.

    * சென்னை மெட்ரோ திட்ட பணிகளை வேகப்படுத்த, மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும்.

    * தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.

    * சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும்.

    * தமிழக அரசின் கோரிக்கைகள் அரசியல் முழக்கம் அல்ல, மக்களின் கோரிக்கைகள்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • திருச்சி விமான நிலையத்தில் பன்னாட்டு புதிய விமான முனையத்தை திறந்து வைக்கிறார்.
    • பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    பிரதமர் மோடி இன்று திருச்சி வருகிறார். இன்று காலை திருச்சி வரும் அவர், திருச்சி விமான நிலையத்தில் 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, பன்னாட்டு புதிய விமான முனையத்தை திறந்து வைக்கிறார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    அதன்பின் 19 ஆயிரத்து 850 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மற்றும் முடிவடைந்த திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

    பிரதமர் மோடி கலந்த கொள்ளும் திருச்சி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனி விமானம் மூலம் இன்று காலை 8 மணிக்கு சென்னையில் இருநது புறப்பட இருக்கிறார்.

    • விமானத்தின் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து புதுடெல்லி, புனே, மும்பை நகரங்களுக்கு செல்லும் பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர்.
    • விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து பயணிகள் தொடர் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு சேவைகளாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று உள்நாட்டு சேவைகளாக சென்னை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மற்ற மாநிலங்களுக்கு செல்பவர்கள் திருச்சி விமான நிலையத்திலிருந்து மேற்கண்ட விமான நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து வேறு விமானங்கள் மூலமோ அல்லது தொடர் விமானங்கள் மூலமோ பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் இருந்து பெங்களூருக்கு இன்று காலை 74 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    அப்போது விமானத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து விமானத்தில் ஏற்றப்பட்ட பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். தொடர்ந்து விமானம் புறப்படும் நேரம் அறிவிக்கப்படாத நிலையில் இருந்து வந்தது. ஏற்கனவே இந்த விமானத்தின் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து புதுடெல்லி, புனே, மும்பை நகரங்களுக்கு செல்லும் பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்ட றியப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தொடர் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் எப்போது புறப்படும்? என்றும், தற்போது சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் என்ன செய்ய இருக்கிறார்கள்? என்பது குறித்தும் இதுவரை பயணிகளுக்கு விமான நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள சுமார் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ள கவுரி, ராஜேந்திரன் மற்றும் ராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதில் குறிப்பாக பல்வேறு புதிய முறைகளில் தங்கத்தை கடத்தி வரும் பயணிகளிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்துவதில் திருச்சி சுங்கத்துறையில் பணியாற்றி வரும் டிரைவர் ஒருவர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. அவர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள சுமார் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றி வரும் 3 சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி விமான நிலைய சுங்கத்துறையில் பணியாற்றி வந்த துணை கமிஷனர்கள் இளமதி மற்றும் ராம்குமார், உதவி கமிஷனர் ஆக பணியாற்றி வந்த சிவகுமார் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    அவர்களுக்கு பதிலாக உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ள கவுரி, ராஜேந்திரன் மற்றும் ராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் தங்க கடத்தலை தடுக்கும் வகையில் மேலும் பல்வேறு அதிகாரிகள் மாற்றப்படும் நிலை உள்ளதாக தெரிய வருகிறது.

    ×