search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமிரு புடிச்சவன்"

    சங்கம் ஒதுக்கிய தேதியில் திமிரு புடிச்சவன், சீதக்காதி படங்களை திரையிடாததற்கு சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த இரு படங்களின் தயாரிப்பாளர்களுக்கு தடைவிதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. #ProducersCouncil
    பெரிய படங்களால் சிறுபட்ஜெட் படங்களின் வசூல் பாதிக்கிறது. புதுமுக நடிகர்கள் படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைப்பதும் சிரமமாக இருந்ததால், படங்கள் வெளியாகும் தேதிகளை தயாரிப்பாளர்கள் சங்கமே முடிவு செய்து வாரம்தோறும் தேதிகளை ஒதுக்கீடு செய்து கொடுத்தது.

    விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்தை தீபாவளிக்கு வெளியிட சங்கத்தில் தேதி ஒதுக்கினர். ஆனால் அந்த படத்தை தீபாவளிக்கு திரையிடாமல் ஒரு வாரம் கழித்து திரையிட்டனர். இதனால் அதே தேதியில் வெளியான சிறிய படங்களின் வசூல் பாதித்ததாக அந்த படங்களின் தயாரிப்பாளர்களான நடிகர் உதயா, ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் குற்றம்சாட்டி தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதனால் விஜய் ஆண்டனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி பெறாமல் விஜய் ஆண்டனி படங்களில் திரைப்பட தொழிலாளர்கள் பணியாற்ற கூடாது என்று பெப்சிக்கு பட அதிபர்கள் சங்கம் கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.



    இதுபோல் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ படத்தை டிசம்பர் 14-ந்தேதி திரையிட சங்கம் தேதி ஒதுக்கி இருந்தது. ஆனால் அந்த படத்தை டிசம்பர் 21-ந்தேதி ரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்து உள்ளது. இதனால் விஜய் சேதுபதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் வற்புறுத்தப்பட்டு உள்ளது. #ProducersCouncil #VijayAntony #ThimiruPudichavan #VijaySethupathi #Seethakaathi

    விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் கணேஷா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் விமர்சனம். #ThimiruPudichavan #ThimiruPudichavanReview
    சாதாரண குடும்பத்தில் பிறந்த விஜய் ஆண்டனி, தனது தம்பியுடன் வாழ்ந்து வருகிறார். போலீஸ் ஏட்டாக இருக்கும் விஜய் ஆண்டனி, தம்பியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக தம்பியிடம் மிகவும் கண்டிப்பாக இருந்து வருகிறார். ஒருநாள் ஒரு பிரச்சனையில், விஜய் ஆண்டனியிடம் சண்டைப் போட்டுக்கொண்டு ஊரை விட்டு சென்று விடுகிறார் தம்பி. 

    சில காலங்கள் கழித்து சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. வந்த இடத்தில் ஒரு கொலையை பார்க்கிறார். அந்த கொலையை தான் பார்த்ததாக போலீசிடம் கூறுகிறார். இந்த கொலையை செய்தது விஜய் ஆண்டனியின் தம்பி என்று தெரிய வருகிறது. தம்பிக்கு விஜய் ஆண்டனி எஸ்.ஐ.ஆக இந்த ஊருக்கு வந்திருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் தனது தம்பியை சுட்டுக் கொன்று விடுகிறார் விஜய் ஆண்டனி.



    இதன் பின் இன்ஸ்பெக்டராக மாறும் விஜய் ஆண்டனி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வைத்து பல சம்பவங்கள் மற்றும் கொலைகளை ரவுடியான சாய் தீனா செய்து வருவது தெரிய வருகிறது. இதனால், சாய் தீனாவை என்கவுண்டர் செய்ய முடிவு செய்கிறார் விஜய் ஆண்டனி.

    இறுதியில் சாய் தீனாவை விஜய் ஆண்டனி என்கவுண்டர் செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், தம்பி மீது அக்கறை காட்டுபவராகவும், வில்லனை பழிவாங்க துடிப்பவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் ஆண்டனி, இந்த படத்திலும் மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார். 



    எஸ்.ஐ. கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகி நிவேதா பெத்துராஜ். போலீஸ் உடை இவருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. விஜய் ஆண்டனியுடன் குறும்பு செய்வது, அவரை காதலிப்பது என அழகாக நடித்திருக்கிறார். காமெடியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். 

    தம்பியாக வருபவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கம்போல் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் சாய் தீனா. லொள்ளு சபா சுவாமிநாதன் காமெடியில் கலக்கி இருக்கிறார்.

    18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை சிலர் தப்பான முறையில் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொலை செய்தால், சட்டத்தில் இருந்து எளிதாக தப்பிவிடலாம் என்ற நோக்கில் சிலர் செயல்படுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கணேஷா. போலீஸ் மீது மக்களுக்கு இருக்கும் சில நெகட்டிவ் எண்ணங்களை போக்குகிறார். ஆனால், சில லாஜிக் இல்லாத காட்சிகளை தவிர்த்திருக்கலாம். 



    விஜய் ஆண்டனியே இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல நாட்கள் கழித்து அவரின் இசையை கேட்ட ஒரு திருப்தி இங்கேயும் உள்ளது. பின்னணி இசை, பாடல் என தனக்கே உரிய ஸ்டைலில் கொடுத்திருக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘திமிரு புடிச்சவன்’ சாந்தமானவன்.
    கணேசா இயக்கத்தில் விஜய் ஆண்டனி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் `திமிரு புடிச்சவன்' படத்தின் முன்னோட்டம். #ThimiruPudichavan #VijayAntony #NivethaPethuraj
    விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் `திமிரு புடிச்சவன்'.

    விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். டேனியல் பாலாஜி, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், சாய் தீனா, முத்துராமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவு - ரிச்சர்டு எம்.நாதன், கலை இயக்குநர் - எம்.சக்தி வெங்கட்ராஜ், சண்டைப்பயிற்சி - ஆர்.சக்தி சரவணன், பாடல்கள் - அருண் பாரதி, ஏகாந்த், ஒலி வடிவமைப்பாளர் - ஏ.எம்.ரஹ்மத்துல்லா, விஜய் ரத்தினம், ஒலிப்பதிவு பொறியாளர் - கே.சக்திவேல், எஸ்.சந்திரசேகர், தயாரிப்பு - பாத்திமா விஜய் ஆண்டனி, தயாரிப்பு நிறுவனம் - விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன், எழுத்து, இயக்கம் - கணேசா.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் விஜய் ஆண்டனி பேசும் போது,

    தனிமரம் தோப்பாகாது என்பது போல இதில் என் பங்கு குறைவு தான். எந்த ஒரு படத்திலும் இயக்குனர் தான் ஹீரோ. இந்த படத்தை உருவாக்க கணேஷா சார் மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார். கடந்த இரண்டு படங்கள் வியாபரா ரீதியாக சரியாக போகவில்லை.  இந்த படத்தில் ரொமான்ஸ் இல்லை, இந்த படத்துக்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன் என்றார்.

    படம் நவம்பர் 16-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #ThimiruPudichavan #VijayAntony #NivethaPethuraj

    விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ திரைப்படத்துடன் விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ திரைப்படம் வெளியாகாமல் தள்ளி போயிருக்கிறது. #Sarkar #ThimiruPudichavan
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அன்றைய தினத்தில் ‘சர்கார்’ படத்திற்கு போட்டியாக விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’, ஆர்.கே.சுரேஷின் ‘பில்லா பாண்டி’ படங்கள் வெளியாக இருப்பதாக அறிவித்தார்கள்.

    தற்போது விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி தினத்தில் வெளியாகாமல் நவம்பர் 16ம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிட இருக்கிறார்கள். 
    திமிரு புடிச்சவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், பார்ட்டி சென்ற இடத்தில் பாலியல் தொல்லை ஏற்பட்டது என்று கூறியிருக்கிறார். #NivethaPethuraj
    விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ‘திமிரு புடிச்சவன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார். கணேஷா டைரக்டு செய்திருக்கும் இந்த படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா ஆண்டனி தயாரித்து இருக்கிறார். படக்குழுவினர் அனைவரும் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள்.

    அப்போது நிவேதா பெத்துராஜ் கூறியதாவது:-

    “பெண்களிடம் யாராவது ஒருவன் தவறாக நடக்க முயன்றால், அந்த இடத்திலேயே எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். ரொம்ப நாட்கள் கழித்து அந்த தவறை வெளிப்படுத்தினால் சம்பந்தப்பட்டவர் மட்டுமல்லாமல், அவருடைய குடும்பமும் பாதிக்கப்படும். அவர் செய்த தவறுக்கு குடும்பத்தினர் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

    ‘மீ டூ’ பிரச்சினையில் நானும் சிக்கி இருக்கிறேன். ஒரு ‘பார்ட்டி’க்கு போன இடத்தில், அது நடந்தது. நான் துபாயில் வளர்ந்த பெண் என்றாலும், மதுரையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண். வெட்கம், பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை. தவறு என் மீது தான். நான் அந்த ‘பார்ட்டி’க்கு போயிருக்க கூடாது. போகாமல் இருந்தால் பலாத்கார முயற்சியை தவிர்த்து இருக்கலாம்.



    இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். அதுபோன்று ஒரு சம்பவம் நடந்தால், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்’ என்றார்.
    திமிரு புடிச்சவன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நிவேதா பெத்துராஜ், இயக்குனரை உட்கார வைத்து படப்பிடிப்பில் ரவுண்டடித்தேன் என்று கூறியிருக்கிறார். #Thimirupudichavan
    விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன். கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ், இயக்குனர் கணேஷா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    நிவேதா பெத்துராஜ் பேசும்போது, ‘கதையை சொல்லும்போதே இயக்குனர் கணேஷா என்னை பயமுறுத்தி விட்டார். புல்லட் ஓட்டணும்னு சொன்னார். அதை கற்றுக் கொண்டு ஓட்டினேன். படப்பிடிப்பில் இயக்குனரை உட்கார வைத்து ஓட்டி காட்டினேன். பின்னர் விஜய் ஆண்டனியை வைத்து ஓட்டினேன். திடீரென மீன் பாடி வண்டி ஓட்ட சொன்னார். டப்பிங்கில் படத்தை பார்த்தபோது எனக்கே வித்தியாசமாக இருந்தது. நான் நடித்ததிலேயே என்னுடைய முக்கியமான படமாக இருக்கும்’ என்றார்.

    பாத்திமா மேடம் 7 மணி நேரம் கதையை கேட்டார், நல்லா இருக்கு என்று சொல்லி, தொடர்ந்து முழுக்கதையையும் கேட்டார். விஜய் ஆண்டனி சார் படங்களுக்கு இதுவரை பூஜை போட்டதே இல்லை. ஆனால் எனக்காக பூஜை போட்டார். நான் கேட்ட எல்லா விஷயங்களையும்  செய்து கொடுத்தார் விஜய் ஆண்டனி சார். என்னை முழுமையாக மதித்தார். ஒரு தயாரிப்பாளர் கதை நல்லா இருக்கு, கதையை மட்டும் வச்சிக்கிட்டு வேற இயக்குனர் வச்சி படத்தை பண்ணலாம் என சொன்னார். 

    ஆனால் விஜய் ஆண்டனி சார் தோல்வி அடைஞ்சவர் தான் நல்ல படத்தை கொடுப்பார் என சொல்லி நான் தான் இயக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். நான் பெரிய நடிகர்களை கேட்டு பெரிய லிஸ்ட் கொடுத்தேன். அவர் புகழ் வெளிச்சம் படாத நல்ல திறமையான நடிகர்களை நடிக்க வைக்கலாம் என சொன்னார். அவர்கள் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர் நம்பிக்கை வீண் போகாது என்றார் இயக்குனர் கணேஷா.



    தனிமரம் தோப்பாகாது என்பது போல இதில் என் பங்கு குறைவு தான். எந்த ஒரு படத்திலும் இயக்குனர் தான் ஹீரோ. இந்த படத்தை உருவாக்க கணேஷா சார் மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார். கடந்த இரண்டு படங்கள் வியாபரா ரீதியாக சரியாக போகவில்லை.  படத்தின் வேலை முடிந்ததால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இயக்குனருக்காக தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இந்த படத்தில் ரொமான்ஸ் இல்லை, இந்த படத்துக்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன் என்றார் நடிகர் விஜய் ஆண்டனி.
    விஜய்யின் சர்கார், விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் உள்ளிட்ட 6 படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில படங்களின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. #Sarkar #ThimiruPudichavan
    இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித், விஜய், சூர்யாவின் படங்கள் ரிலீசாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு தாமதமானதால் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியிருக்கும் நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா, விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படங்களும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



    ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ள பில்லா பாண்டி படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், அட்டகத்தி தினேஷ் - அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படமும் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமீர் கான் - அமித்தாப் பச்சன் இணைந்து நடித்துள்ள தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படமும் தீபாவளி ரேசில் இணைந்துள்ளது.



    3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்த தமிழ்நாட்டில் இப்போது 1000 திரையரங்குகள் கூட இல்லை. எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய படங்கள் வெளியானால் சிக்கல் ஏற்படுகிறது. ஆறு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக வாய்ப்பு இல்லை. எனவே திரையரங்குகள் கிடைக்காமல் சிறிய படங்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளது. #Sarkar #ThimiruPudichavan

    ×