search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் சீனிவாசன்"

    • தங்க கவசத்தை பெற திண்டுக்கல் சீனிவாசன் தரப்பினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
    • இன்னும் ஓரிரு நாளில் காந்திமீனாள் நடராஜன் ஒப்புதல் கடிதத்தை யாருக்கு அளிக்கிறாரோ அவரிடம் தங்க கவசம் ஒப்படைக்கப்படும்.

    மதுரை:

    கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பசும்பொனில் உள்ள தேவர் நினைவிடத்தில் உள்ள தேவரின் சிலைக்கு ரூ.3.5 கோடி மதிப்பிலான 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசம் ஒவ்வொரு தேவர் ஜெயந்தியன்றும் தேவரின் நினைவிடத்தில் பொருத்தப்படும்.

    அ.தி.மு.க. பொருளாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரில் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி லாக்கரில் இந்த கவசம் வைக்கப்பட்டுள்ளது. அதனை அங்கிருந்து பசும்பொன்னுக்கு எடுத்து செல்வது வழக்கம்.

    இதற்காக ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு தேவர் ஜெயந்தியன்றும் வங்கிக்கு வந்து லாக்கரில் உள்ள தேவரின் தங்க கவசத்தை எடுத்து விழா கமிட்டியுடன் ஒப்படைப்பார். விழா முடிவடைந்ததும் அதேபோன்று தங்க கவசத்தை முறைப்படி வங்கிக்கு வந்து ஓ.பன்னீர்செல்வம் பெற்று ஒப்படைப்பார்.

    கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர் செல்வத்திற்கும் டி.டி.வி. தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தங்க கவசம் அ.தி.மு.க.வினர் வசம் ஒப்படைக்கப்படாமல் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டும் வங்கியில் உள்ள தங்க கவசத்தை பெற அ.தி.மு.க. தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பலப்பரீட்சை நடந்து வருகிறது.

    இரு தரப்பிலும் தனித்தனியாக வங்கியில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தேவரின் தங்க கவசம் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த நிலையில் தேவரின் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த 2 முறை மதுரை வந்த திண்டுக்கல் சீனிவாசன் வங்கியில் கடிதம் அளித்தும் வங்கி நிர்வாகத்தினர் தேவர் நினைவிட பொறுப்பாளரான காந்தி மீனாள் நடராஜனிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி வர கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் காந்தி மீனாள் நடராஜனை சந்தித்து பேசுவதற்காக திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், காமராஜ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய உள்ளான் உள்ளிட்ட தென் மாவட்ட அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் இன்று பசும்பொன் சென்றனர். பசும்பொனில் உள்ள தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அருகில் உள்ள தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தனர்.

    அப்போது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவுக்காக தங்க கவசத்தை வங்கியில் முறைப்படி எடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது காந்தி மீனா நடராஜனிடம் ஒப்புதல் கடிதம் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் ஒப்புதல் கடிதம் வழங்குவதில் காந்தி மீனாள் நடராஜன் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    தங்க கவசத்தை பெற திண்டுக்கல் சீனிவாசன் தரப்பினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாளில் காந்திமீனாள் நடராஜன் ஒப்புதல் கடிதத்தை யாருக்கு அளிக்கிறாரோ அவரிடம் தங்க கவசம் ஒப்படைக்கப்படும். அவர் ஒப்புதல் கடிதம் அளிக்காத பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் தங்க கவசம் ஒப்படைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இன்று பசும்பொன்னில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டது தென் மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெருங்காமநல்லூர் பகுதியில் உள்ள தியாகிகளுக்கு ரூ. 1 கோடியே 50 லட்சம் செலவில் மணிமண்டபத்தை உருவாக்கித்தந்தவர் எடப்பாடி பழனிசாமி ஆவார்.
    • தென் மாவட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.

    திருமங்கலம்:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மூக்கையாத்தேவரின் 43-வது நினைவு நாளையொட்டி உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார், கழக அமைப்பு செயலாளர்கள் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, எஸ்.டி.கே. ஜக்கையன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் ஆகியோர் தி.விலக்கு பகுதியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மூக்கையாதேவரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். இதில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெருங்காமநல்லூர் பகுதியில் உள்ள தியாகிகளுக்கு ரூ. 1 கோடியே 50 லட்சம் செலவில் மணிமண்டபத்தை உருவாக்கித்தந்தவர் எடப்பாடி பழனிசாமி ஆவார்.

    அதேபோல் மூக்கையா தேவரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் 58 கால்வாய் திட்டத்திற்கு மராமத்து பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்து, 3 முறை சோதனை ஓட்டத்தை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. தென் மாவட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். அவர் மீண்டும் முதலமைச்சராக அயராது பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓ.பி.எஸ்.சுக்கு எதிரான சட்ட போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றியாகவே கருதப்படுகிறது.
    • எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம்கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராகி இருக்கிறார்.

    கடந்த 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தின் போது, கட்சியில் இருந்து அதிரடியாக ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அவரது ஒருங்கிணைப்பாளர் பதவியும், பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்ட நிலையில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.

    இந்த தகவலை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வங்கிகளில் முறைப்படி தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வமும் வங்கிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

    அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் புதிய பொருளாளராக யாராவது தேர்வு செய்து அறிவித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும், எனது அனுமதியின்றி பணபரி மாற்றங்களை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றும் அதில் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் வங்கிகள் இதனை நிராகரித்துவிட்டு, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் சீனிவாசனை அ.தி.மு.க. புதிய பொருளாளராக அங்கீகரித்துள்ளன. இதன்மூலம் இனி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அ.தி.மு.க. வங்கி பணபரிவர்த்தனைகளை தங்குதடை இன்றி மேற்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருப்பதுடன் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டுள்ளார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து அவரை எடப்பாடி நீக்கியுள்ள நிலையில் அதற்கு எதிராகவும் சபாநாயகரிடம் ஓ.பி.எஸ். மனு அளித்துள்ளார்.

    இப்படி ஓ.பி.எஸ். தொடர்ந்துள்ள பல்வேறு சட்ட போராட்டங்களை எடப்பாடி பழனிசாமி எதிர் கொண்டு வருகிறார். இந்த நிலையில் தான் அ.தி.மு.க. புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

    இது ஓ.பி.எஸ்.சுக்கு எதிரான சட்ட போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றியாகவே கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இதுபோன்று அனைத்து சட்ட போராட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை ஏற்க கூடாது என்று முன்னதாகவே ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இதிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிடும் என்று எடப்பாடியின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைமுறைகள் முடிந்தவுடன் அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்களில் தேர்தல் ஆணையம் இறுதி உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இந்த விவகாரத்திலும் ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி சார்பில் புதிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் நியமனம் தொடர்பான கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே சபாநாயகர் உத்தரவிட வாய்ப்பு உள்ளது என்றே அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

    அடுத்ததாக பொதுக்குழு கூட்டம் தொடர்பாகவும் ஓ.பி.எஸ். உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இதிலும் நாங்களே வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    இதன்மூலம் சட்ட போராட்டங்களில் வென்று இன்னும் 4 மாதத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் மூலம் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவது உறுதி என்றும் அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
    • நான்தான் கட்சியின் பொருளாளராக தொடர்கிறேன் என ஓபிஎஸ் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்த அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவர் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி வங்கிகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

    அதிமுக கட்சி தொடர்பான வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என்றும், காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவரே மேற்கொள்வார் எனவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்குக் எழுதிய கடிதத்தில், என்னைக் கேட்காமல் வங்கி வரவு செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது. நான்தான் கட்சியின் பொருளாளராக தொடர்கிறேன்.

    கட்சியின் விதிகளை மீறி நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்தது செல்லாது. மேலும் இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது. எனவே அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில் அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதையடுத்து புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இவர் ஏற்கனவே இந்த பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் பொருளாளர் பதவியில் மட்டுமே அவர் நீடித்து வந்தார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதையடுத்து புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான முடிவும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்டுள்ளது.

    இவர் ஏற்கனவே இந்த பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×