search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் பள்ளி"

    • இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் மோப்ப நாய் ஆதவன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று பள்ளி கட்டிடம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
    • மூடப்பட்ட பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மேற்கு மாம்பலம் வாசுதேவபுரம் பகுதியில் மூடப்பட்ட தனியார் பள்ளி உள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் "மேற்கு மாம்பலம் வாசுதேவபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு குண்டு வைத்து உள்ளேன், சிறிது நேரத்தில் வெடிக்கும்" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இதுபற்றி உடனடியாக அசோக் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் மோப்ப நாய் ஆதவன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று பள்ளி கட்டிடம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் அங்கு வெடிகுண்டு ஏதும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. இந்த பள்ளி கடந்த 2021-ம் ஆண்டு மூடப்பட்டு விட்டது. மூடப்பட்ட பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து அவர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
    • கோவை மாநகர காவல்துறையினர் தனியார் பள்ளியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து கோவை மாநகர காவல்துறையினர் தனியார் பள்ளியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவைக்கு இன்று மாலை பிரதமர் மோடி வரும் நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளியில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை செய்தனர்.
    • ஒரே பள்ளிக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் அருகே உள்ள காளம்பாளையத்தில் பி.எஸ்.பி.பி. என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2500-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு இந்த பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான இ-மெயிலுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் வடவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டெல் டிடெக்டர் கருவி உதவியுடன் பள்ளி முழுவதும் ஒவ்வொரு அறையாக அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    பள்ளியில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை செய்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் உதவியுடனும் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனார்.

    நீண்ட நேரம் சோதனை செய்தும், பள்ளியில் அப்படி எதுவுமே இல்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது புரளி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பள்ளிக்கு வந்த இ-மெயில் எங்கிருந்து வந்தது, அதனை அனுப்பியது யார் என்பதை அறிய அந்த தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் பள்ளி முன்பு வடவள்ளி இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று காலை வழக்கம் போல பள்ளி செயல்பட்டது. மாணவர்களும் பள்ளிக்கு வந்தனர். இதற்கிடையே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் இன்று காலை அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியது.

    இதையடுத்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளி முன்பு திரண்டனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றனர்.

    கடந்த 2-ந் தேதி இதே பள்ளிக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். அப்போதும் அங்கு போலீசார் தீவிர சோதனை நடத்தி வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை உறுதி செய்தனர். தற்போது 2-வது முறையாக அதே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    எதற்காக ஒரே பள்ளிக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    • கடந்த வாரம் இதே பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததையடுத்து தீவிர சோதனை நடைபெற்றது.
    • கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று காலையில் மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    சென்னை:

    மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த வாரம் இதே பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததையடுத்து தீவிர சோதனை நடைபெற்றது. இன்று இரண்டாவது முறையாக அதே பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    ஏற்கனவே கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று காலையில் மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், சென்னையிலும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பள்ளி அலுவலக இ-மெயிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • பள்ளி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி அலுவலக இ-மெயிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தனியார் பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    பள்ளி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கடந்த மாதம் சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • யுடெமி என்ற ஆன்லைன் வழியாக அயல்நாட்டு மொழிகளை கற்கத் தொடங்கினார்.
    • ஆங்கில துறை மாணவ-மாணவிகளுக்கு மொழிப்பயிற்சி பட்டறை வகுப்புகள் எடுத்து வருகிறார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.எம். காலனியைச் சேர்ந்த கண்ணன்-அனுப்பிரியா தம்பதியின் மகள் தன்மயா (வயது 13). இவர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தனது சிறு வயது முதலே தமிழ் ஆங்கிலத்தை தவிர்த்து பிற மொழிகளை கற்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.

    இதற்காக யுடெமி என்ற ஆன்லைன் வழியாக அயல்நாட்டு மொழிகளை கற்கத் தொடங்கினார். பிரான்ஸ், பிரட்டிஷ், ஆஸ்த்திரேலியா, அமெரிக்கன் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் ஆங்கில மொழிகளை இலக்கணப் பிழையின்றி எழுதி படிக்க கற்றுக் கொண்டார். உச்சரிப்பு, எழுத்து, வாக்கியம், இலக்கணம் ஆகியவற்றை வீடியோ வடிவிலும், பி.டி.எப்., டெக்ஸ்ட் வடிவிலும் புதிர் கேள்விகள், வினாடி வினா மூலம் கற்றுத் தேர்ந்தார்.

    இது குறித்து ஆன்லைன் மூலம் நடந்த தேர்விலும் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றார். இவரது திறமையை கண்டு திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இவர் மொழித் திறன் பயிற்றுவிக்கும் வாய்ப்பை பெற்றார்.

    ஆங்கில துறை மாணவ-மாணவிகளுக்கு மொழிப்பயிற்சி பட்டறை வகுப்புகள் எடுத்து வருகிறார். 5 வெளிநாட்டு ஆங்கில மொழியை அந்த நாட்டின் நளினத்தில் உரையாற்றி கல்லூரி மாணவிகளுக்கு பயிற்றுவித்து அவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

    பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் எந்தவித தயக்கம் மற்றும் கூச்சம் இருக்க கூடாது என்று கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். இவர் பேசும் ஆங்கில உச்சரிப்புக்கு கல்லூரி பேராசிரியர்கள் கூட பேசுவதற்கு திணறி வருகின்றனர் என்பது கூடுதல் விஷயமாகும்.

    தமிழகத்தில் பிற மொழிகளை கற்கக்கூடாது என்று ஒரு சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்திய மொழிகளைக் கடந்து அயல்நாட்டு மொழிகளையும் கற்று அதனை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்றுவித்து 8ம் வகுப்பு மாணவி அசத்தி வருவதோடு இந்த காலத்திலேயே வருவாயும் ஈட்டி வருகிறார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு அவரது சொந்த நிதியில் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
    • பள்ளி தாளாளர் டயானா தலைமையில் நடைபெற்றது

    மார்த்தாண்டம், அக்.18-

    குமரி மாவட்டம் செந்தறை தனியார் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ.மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா .பள்ளி தாளாளர் டயானா தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜோபி முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு அவரது சொந்த நிதியில் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

    கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜகிளன், கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், கீழ்குளம் பேரூராட்சி உறுப்பினர் அனிதா ராஜகிளன், முன்னாள் மேல்புறம் வட்டாரத் தலைவர் சதீஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பள்ளி விடுமுறையின் காரணமாக தனது சொந்த ஊருக்குசென்றார்
    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    கடலூர்:

    கடலூர் சி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு மகன் ராஜ்குமார் (வயது 28) இவரது மனைவி ஜஸ்வர்யா (21) இருவரும் கள்ளக்குறிச்சியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் பள்ளி விடுமுறையின் காரணமாக தனது சொந்த ஊரான சி.என். பாளையத்திற்கு சென்றவர்கள் மீண்டும் கடந்த 3- ந் தேதி சி.என்.பாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி சென்று கொண்டிருந்தனர்.

    தியாகதுருகம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக ஐஸ்வர்யா அணிந்திருந்த துப்பட்டா மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதனால் ஜஸ்வர்யா கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இது குறித்து ஐஸ்வர்யாவின் அண்ணன் விஜய் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் ஜஸ்வர்யாவின் கணவர் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

    • பல இடங்களில் தேடி யும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வினோதினியின் தாய் தனம் புகார்கொடுத்தார்.
    • இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் வினோதினியை தேடி வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த குடுமியான் குப்பம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து.இவரது மகள் வினோதினி (15). இவர் வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் -1 படித்து வருகிறார் .நேற்று முன்தினம் வீட்டிலிருந்தவர் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடி யும் கிடைக்காததா ல்புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வினோதினியின் தாய் தனம் புகார்கொடுத்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் வினோதினியை தேடி வருகிறார்.

    • சுப்பிரமணியன் தனது மொபட்டில் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன் குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை தனது மொபட்டில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை யில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த தென்காசியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன், சுப்பிரமணியன் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் ஓட்டி வந்த மொபட்டும் பலத்த சேதம் அடைந்தது. இதுகுறித்து அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பள்ளி வேன் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாணவர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்திருப்பதை கண்டு அவர்களது பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர்.
    • இன்று காலை பள்ளிக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குன்றத்தூரை அடுத்த கோவூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் உள்ள யூ.கே.ஜி. வகுப்பறையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் 5 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயம் அடைந்த மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்காமல் மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பியதாக தெரிகிறது.

    மாணவர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்திருப்பதை கண்டு அவர்களது பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை பள்ளிக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் மாங்காடு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் பாதிப்பு.
    • குருசாமிபாளையம் அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குருசாமி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    இதில், 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்த குருசாமிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அங்கு மாணவ, மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    ×