என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவன் தாக்குதல்"

    • எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
    • மாணவர்களிடையே இதுபோன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு.

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை தனியார் பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

    தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே இதுபோன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு. தவறான மனிதர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு, இத்தனை சிறு வயதிலேயே அரிவாளைக் கையில் எடுக்கும் அளவுக்கு, நமது குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணம் தலைதூக்கியிருக்கிறது என்றால், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், அரசு என அனைவருமே இதற்கு பொறுப்பு.

    பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றத்தாரையே முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வளர்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், கடுமையான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் மீது கூட நடவடிக்கை எடுக்க அனுமதிக்காமல், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது திமுக அரசு. மேலும், உச்ச வரம்பு வைத்து அரசே மது விற்பனை செய்வதாலும், பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தாலும், தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் மாணவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்விளைவுகளை முதலமைச்சர் மு.க. இனியாவது உணர வேண்டும்.

    பள்ளி ஆசிரியர்களால் தங்கள் பணிச்சுமைகளைக் கடந்து, அத்தனை குழந்தைகளையும் கண்காணிப்பது என்பது இயலாதது. எனவே, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எப்போதும் தங்கள் கண்காணிப்பில் வைத்திருப்பது சமூகத்திற்கே நல்லது. சரியான வழியில் வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தையும், எதிர்காலத்தில் நூறு குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கிறார்கள். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தங்கள் கண்காணிப்பில் வளர்ப்பது, சமூகத்திற்குச் செய்யும் முக்கியமான கடமை என்பதை உணர்வது நன்று.

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    • காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
    • பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தடுக்க வந்த ஆசிரியரையும் அம்மாணவன் தாக்கியுள்ளதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    தினமொரு கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் சாதிய ரீதியான தாக்குதல் ஆகியவை வரிசை கட்டிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களின் அலங்கோல ஆட்சியில், பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்குமளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பது பெரும் ஆபத்தானது.

    அதுவும், "பென்சில் கேட்ட தகராறில் தாக்குதல் நடந்துள்ளது" எனக் கூறுகிறார் நெல்லை உதவி காவல் ஆணையர். ஆனால், பென்சிலுக்காக பள்ளிக்குள் அரிவாளை மறைத்து எடுத்துச் சென்று உடன் படிக்கும் மாணவனைத் தாக்குமளவிற்கு நமது பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது.

    எனவே, இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை முறையாக ஆராய்ந்து அதற்கு தக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு, இனியும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழாமலிருக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    • தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
    • மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ் மேரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது நல்லதல்ல.

    இரு மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்குவதில் தான் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது மறந்து, கடந்து போக வேண்டிய மோதல் தான். ஆனால், அதற்கான அரிவாளை வீட்டில் இருந்து பையில் மறைத்து எடுத்து வந்து சக மாணவரை வெட்டும் அளவுக்கு ஒரு மாணவரின் மனநிலை வெறுப்படைந்திருக்கிறது என்றால், அது மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்திலும் அதிகரித்து வரும் சீரழிவையே காட்டுகிறது. இந்தப் போக்கு சரி செய்யப்பட வேண்டும்.

    தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரை வீடு புகுந்து வெட்டப்பட்டது, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் பேருந்தை மறித்து அதில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டது என வன்முறை நிகழ்வுகள் தொடர்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது.

    மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களுக்கு நல்வழி காட்டுவது தான் பள்ளிகள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகும். இதை மனதில் கொண்டு பள்ளிகளில் நீதிபோதனை பாடவேளைகளை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்; விளையாட்டுப் பாடவேளையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • வகுப்பறையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.
    • போலீசார் படேலை கைது செய்து அவர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அகமதாபாத்:

    அகமதாபாத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்கள் முன்னிலையில் ஒரு மாணவனை ஈவிரக்கமின்றி தாக்கும் வீடியோ வைரலானதை அடுத்து, அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வத்வாவில் உள்ள தனியார் பள்ளியில் கணிதம் கற்பித்து வந்த அபிஷேக் படேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    வைரலாகும் வீடியோவில், மாணவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கு, ஆத்திரத்தில் வரும் கணித ஆசிரியர் ஒரு மாணவனின் கையை முறுக்கி, தலைமுடியை பிடித்து இழுத்து வந்து மாணவர்கள் முன்பு நிறுத்தி கன்னத்தில் பலமுறை அறையும் காட்சிகள்  இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றுள்ளது. வகுப்பறையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.

    வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு ஆசிரியரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து போலீசார் படேலை கைது செய்து அவர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×