search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inspection of"

    • மோட்டார் வாகன ஆய்வாளர் பாமாபிரியா ஆய்வு மேற்கொண்டார்.
    • அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்று ஒழிப்பான்கள் பயன்படுத்திய பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் பஸ்களில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் குறித்து போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தலின்படி, மோட்டார் வாகன ஆய்வாளர் பாமாபிரியா ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கோபி பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர், கோவை, தாளவாடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் காற்று ஒலிப்பான் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்று ஒழிப்பான்கள் பயன்படுத்துவது தெரிய வந்தது.

    அதனைத் தொடர்ந்து அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்களை பஸ்சில் இருந்த அகற்றம் செய்து பறிமுதல் செய்த வாகன ஆய்வாளர் அதனை பஸ்சின் சக்கரத்தின் அடியில் வைத்து அழித்தார்.

    பின்னர் அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்று ஒழிப்பான்கள் பயன்படுத்திய பஸ்களுக்கு தலா ரூ.1000 என சுமார் 10 பஸ்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்று ஒழிப்பான்கள் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    • 420 வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது.
    • ஆணையர் ஜெயந்தா லாசரஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பு.புளியம்பட்டி:

    பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது.

    இங்கு வசித்து வரும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பவானிசாகர் கோழி பண்ணை அருகே 12 ஏக்கரில் ரூ.20 கோடி செலவில் சுமார் 420 வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது.

    இதை அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெயந்தா லாசரஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஐமன் ஜமால், சத்தியமங்கலம் தாசில்தார் சங்கர் கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி அந்தியூர் தாலுகாவில் உள்ள தனியார் பள்ளிக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.
    • ஓட்டுநர்கள் சாலை விதிகளை பின்பற்றியும், வேகத்தை குறைத்தும் வாகனத்தை கட்டுப்பாட்டுடன் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்காவில் 15-க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை அழைத்து வர பள்ளி நிர்வாகம் வாகனங்களை இயக்கி வருகிறது.

    இந்த வாகனங்கள் பள்ளி வாகனங்களுக்கான அரசால் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்கின்றனவா என கலெக்டரின் உத்தரவுப்படி பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி அந்தியூர் தாலுகாவில் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.

    மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்களிடம் தனி மனித தவறுகளே வாகன விபத்துக்கு காரணமாக அமைகிறது.

    எனவே ஓட்டுநர்கள் சாலை விதிகளை பின்பற்றியும், வேகத்தை குறைத்தும் வாகனத்தை கட்டுப்பாட்டுடன் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது வட்டார கல்வி அலுவலர் மாதேஷா,கல்வி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடன் இருந்தனர்.

    ×