என் மலர்
நீங்கள் தேடியது "construction work by"
- 420 வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது.
- ஆணையர் ஜெயந்தா லாசரஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பு.புளியம்பட்டி:
பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது.
இங்கு வசித்து வரும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பவானிசாகர் கோழி பண்ணை அருகே 12 ஏக்கரில் ரூ.20 கோடி செலவில் சுமார் 420 வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது.
இதை அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெயந்தா லாசரஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஐமன் ஜமால், சத்தியமங்கலம் தாசில்தார் சங்கர் கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






