பள்ளி மாடியில் இருந்து குதித்து 6-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.. ராஜஸ்தானில் அதிர்ச்சி

ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் அமிரா என்ற 9 வயது சிறுமி 6ம் வகுப்பு படித்து வந்தார்.சிறுமி தற்கொலை செய்துகொண்டது குறித்த தகவலை பள்ளி நிர்வாகம் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பள்ளி மாடியில் இருந்து குதித்து 6-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.. ராஜஸ்தானில் அதிர்ச்சி
Published on

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் அமிரா என்ற 9 வயது சிறுமி 6ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், மாணவி அமிரா கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளியின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

போலீசார் விசாரணையில், ஆசிரியர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதால் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சிறுமி தற்கொலை செய்துகொண்டது குறித்த தகவலை பள்ளி நிர்வாகம் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறுமி பள்ளியின் 4வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com