search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கப்பதக்கம்"

    • போட்டிகளில் ஒவ்வொரு மாணவரும் அவரவரின் தனித் திறமையை வெளிப்படுத்தினர்.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிசெயலாளர் சிவகாமி பதக்கங்கள் வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் தாராபுரம் சாலை பெருந்தொழுவு ரோட்டில் அமைந்துள்ள பிரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்களுக்கான தடகளப்போட்டிகள் 3 நாட்கள் நடைப்பெற்றன. இந்நாட்களில் மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம், தடைகளைத் தாண்டி ஓடுதல், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற பல போட்டிகள் நடைபெற்றன.

    இப்போட்டிகளில் ஒவ்வொரு மாணவரும் அவரவரின் தனித் திறமையை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிசெயலாளர் சிவகாமி பதக்கங்கள் வழங்கினார்.

    மேலும் இவர்களை பள்ளித்தாளாளர் சிவசாமி, இயக்குனர் சக்தி நந்தன் மற்றும் துணை இயக்குனர் வைஷணவி நந்தன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    இறுதியாக, அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் இடம் பெற்ற அக்வா அணிக்கும், 2-ம் இடம் பிடித்த ஏரிஸ் அணிக்கும் பள்ளித்தலைமை ஆசிரியை சியாமளா தேவி கோப்பைகள் வழங்கி பாராட்டினார்.

    • சர்வதேசப் போட்டியில் மேலூர் மாணவி தங்கப்பதக்கம் வென்றார்.
    • சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் கால் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி, விவசாயி. இவரது மனைவி கவிதா. இவர்களது மகள் வர்ஷினி டெல்லியில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற அவர் தனது சொந்த கிராமத்திற்கு இன்று வந்தார். அவரை வெள்ளரிப்பட்டி டோல்கேட்டில் கிராம மக்கள் வரவேற்றனர்.

    அப்போது பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து, அவருக்கு மாலை அணிவித்தனர். வர்ஷினி அரசு பள்ளியில் படித்த மாணவி ஆவார். அவர் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மேலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். தற்போது அவர் மதுரை மீனாட்சி கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் கால் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும், பயிற்சியளித்த ரஞ்சித் மற்றும் பிரேம் ஆகியோருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள்.
    • ரூ. 5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக " சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது " 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ஐந்து லட்சம் ) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.

    2022-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

    எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம்.

    தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    2022 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2022 ஆகும்.

    மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநில அளவிலான தடகளப் போட்டியில் சாதனை
    • ஆசிரியர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே எல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மகள் கீர்த்திகா (வயது 16). இவர் நாட்டறம்பள்ளியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார் .

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 17 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 35வது மாநில அளவிலான ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

    இதில் ஈட்டி எறிதல் போட்டியில் நாட்டறம்பள்ளி மாணவி கீர்த்திகா பங்கேற்று 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

    இந்நிலையில் அவர் பயிற்சி பெற்ற நாட்டறம்பள்ளியில் உள்ள எஸ்கே விஎஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நிர்வாகி மதன் குமார் தலைமையில் தங்க பதக்கம் பெற்ற மாணவிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

    • தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது லட்சியம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் பழனிராசு. இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவரது மனைவி இளஞ்சியம். இவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகளான நிவேதா, இந்தோ நேபாள் சர்வதேச விளையாட்டு போட்டியில் பங்கேற்று, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து ஊருக்கு திரும்பிய நிவேதிதாவை, போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அவரை க.கொ.க.கண்ணன் எம்.எல்.ஏ.வும் பாராட்டினார். இது குறித்து நிவேதிதா கூறுகையில், இந்த போட்டியில் பங்கேற்க சென்ற போதுதான் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், போட்டியில் இலக்கை 12.58 வினாடிகளில் கடந்து தங்க பதக்கம் வென்றதாகவும், இந்திய அணிக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது லட்சியம், என்றும் கூறினார்.

    • என்ஜினீயரிங் கல்லூரி மாணவி லக்‌ஷாதேவி பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து பட்டம் பெற்றார்.
    • மாணவி வீட்டிற்கு சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    உடுமலை :

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எஸ்.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரி மாணவி லக்‌ஷா தேவி பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து பட்டம் பெற்றார்.

    இதையடுத்து திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் மங்களம் ரவி உடுமலை நகர தலைவர் கண்ணாயிரம் ஆகியோர் மாணவி வீட்டிற்கு சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர்கள் வக்கீல் சீனிவாசன், சிவசங்கர், துணை தலைவர் குப்புசாமி, பொருளாளர் அய்யப்பசாமி, நிர்வாகிகள் கண்ணப்பன், ரஜினி பிரசாந்த், சித்தார்த்தன், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.   

    • கிருஷ்ண ரேகா உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 3 முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்) ஆகிய தடகள போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
    • தடகள போட்டி நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    சர்வதேச அளவிலான காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டி நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் இந்தியாவில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல குமரி மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் எட்டாக பணியாற்றி வரும் கிருஷ்ண ரேகா என்பவரும் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த 25-ந் தேதி உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

    இந்த நிலையில் நேற்று 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 3 முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்) ஆகிய தடகள போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற கிருஷ்ண ரேகா 2 போட்டிகளிலும் முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். தங்க பதக்கம் வென்ற தகவல் அறிந்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உடன டியாக கிருஷ்ண ரேகாவை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டுகளை தெரிவித்தார்.

    இந்த வெற்றியானது குமரி மாவட்ட காவல் துறைக்கு பெருமையை சேர்த்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×