search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold medalist"

    • தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது லட்சியம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் பழனிராசு. இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவரது மனைவி இளஞ்சியம். இவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகளான நிவேதா, இந்தோ நேபாள் சர்வதேச விளையாட்டு போட்டியில் பங்கேற்று, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து ஊருக்கு திரும்பிய நிவேதிதாவை, போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அவரை க.கொ.க.கண்ணன் எம்.எல்.ஏ.வும் பாராட்டினார். இது குறித்து நிவேதிதா கூறுகையில், இந்த போட்டியில் பங்கேற்க சென்ற போதுதான் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், போட்டியில் இலக்கை 12.58 வினாடிகளில் கடந்து தங்க பதக்கம் வென்றதாகவும், இந்திய அணிக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது லட்சியம், என்றும் கூறினார்.

    • என்ஜினீயரிங் கல்லூரி மாணவி லக்‌ஷாதேவி பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து பட்டம் பெற்றார்.
    • மாணவி வீட்டிற்கு சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    உடுமலை :

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எஸ்.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரி மாணவி லக்‌ஷா தேவி பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து பட்டம் பெற்றார்.

    இதையடுத்து திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் மங்களம் ரவி உடுமலை நகர தலைவர் கண்ணாயிரம் ஆகியோர் மாணவி வீட்டிற்கு சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர்கள் வக்கீல் சீனிவாசன், சிவசங்கர், துணை தலைவர் குப்புசாமி, பொருளாளர் அய்யப்பசாமி, நிர்வாகிகள் கண்ணப்பன், ரஜினி பிரசாந்த், சித்தார்த்தன், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.   

    ×