search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டொயோட்டா"

    • டொயோட்டா நிறுவனத்தின் ஹைகிராஸ் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இந்தியாவில் இன்னோவா ஹைகிராஸ் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் என இருவித வெர்ஷன்களில் மட்டுமே கிடைக்கிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் G-Slf, GX, VX ஹைப்ரிட், VX(O) ஹைப்ரிட், ZX ஹைப்ரிட் மற்றும் ZX(O) ஹைப்ரிட் என மொத்தம் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் விலை ரூ. 18 லட்சத்து 55 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. அறிமுகம் செய்யப்பட்டதும் அதிக பிரபலமடைந்த இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி-யின் காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அதன்படி புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை வாங்குவோர் அதன் ஹைப்ரிட் வெர்ஷன்களை டெலிவரி எடுக்க 100 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் பெட்ரோல் வெர்ஷன்களை பெற முன்பதிவு செய்ததில் இருந்து 30 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

    இதனிடையே மாருதி சுசுகி நிறுவனம் ஹைகிராஸ் மாடலை சார்ந்து புதிய எம்பிவி மாடலை உருவாக்கி இருக்கிறது. மாருதி சுசுகி எம்பிவி மாடல் இன்விக்டோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு அடுத்த வாரம் துவங்குகிறது. விலை மற்றும் வினியோக விவரங்கள் ஜூலை 5-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

    • டொயோட்டா கிரவுன் செடான் கான்செப்ட் மாடலில் சாலிட் ஸ்டேட் பேட்டரி தொழில்நுட்பம் அறிமுகம்.
    • சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் குறைந்த செலவில், அதிக ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.

    டொயோட்டா நிறுவனம் தனது கிரவுன் EV ப்ரோடோடைப் மாடல் விவரங்களை அறிவித்து இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் அடுத்த பெரிய பேசுபொருளாக பைபோலார் சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் இருக்கும் என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    வாகனங்களின் ரேன்ஜ் பற்றி எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்த போதிலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. அதிநவீன பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் ஏரோ திறன் தற்போது இருப்பதை விட பலமடங்கு எல்லைகளை கடக்க வேண்டியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் குறைந்த செலவில், அதிக ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.

     

    சாலிட் ஸ்டேட் பேட்டரிகளை பயன்படுத்துவதில் முன்னணியில் இருக்க டொயோட்டா விரும்புகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் தாமதமாக களமிறங்கியதற்காக சந்தையில் பல்வேறு கேள்விகளுக்கு ஆளான நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் வியாபாரம் மிக முக்கியமானது என்பதை டொயோட்டா நிறுவனம் வெளிக்காட்டி இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் கிரவுன் செடான் கான்செப்ட் மாடலில் அறிமுகம் செய்து இருக்கும் சாலிட் ஸ்டேட் பேட்டரி தொழில்நுட்பம் முழு சார்ஜ் செய்தால் 1353 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் எலெக்ட்ரிக் வாகன துறையில் தனது எதிர்கால திட்டம் பற்றிய தகவல்களை டொயோட்டா அறிவித்து இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் குறைந்த விலை மற்றும் டாப் எண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தனது புதிய அடுத்த தலைமுறை பேட்டரியை BZ4X மற்றும் டொயோட்டா விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் வாகனத்துடன் ஒப்பிடுகிறது. அதன்படி அதிக செயல்திறன் கொண்ட வெர்ஷன்களில் டொயோட்டா நிறுவனம் மோனோபோலார் பேட்டரிகளை பயன்படுத்த இருக்கிறது.

    டொயோட்டாவின் அடுத்த தலைமுறை பேட்டரி 2026 வாக்கில் சந்தையில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. இதன் விலை தற்போதைய BZ4X மாடலில் உள்ள பேட்டரியை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும். இதனை 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 20 நிமிடங்களே ஆகும். 

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • 2022 ஆண்டில் மட்டும் டொயோட்டா நிறுவனம் 21 ஆயிரத்து 650 பேட்டரியால் இயங்கும் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.

    டொயோட்டா மோட்டார் நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கொஜி சடோ நேரலை நிகழ்வில் நேற்று உரையாற்றியுள்ளார். இதே நிகழ்வில் பேசிய துணை தலைவர் ஹிரோகி நகஜிமா, டொயோட்டா நிறுவனம் 2026 ஆண்டிற்குக்குள் பத்து புதிய எலெக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

    இதன் மூலம் ஆண்டிற்கு சுமார் 15 லட்சம் வாகனங்களை விற்பனை செய்யும் என தெரிகிறது. பல்வேறு பகுதிகளில் டொயோட்டா நிறுவனம், சாத்தியக்கூறுக்கு ஏற்ப எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கொஜி சடோ தெரிவித்தார். உலகளவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டொயோட்டா எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

     

    டொயோட்டா நிறுவனம் அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்காக விசேஷ பிரிவு ஒன்றை உருவாக்க இருக்கிறது. இதற்கான உற்பத்தி முதல் வியாபார பொறுப்பு வரை அனைத்திற்குமான தலைமை பொறுப்பு ஒருவருக்கு வழங்கப்பட இருக்கிறது. தலைமை பொறுப்புக்கான நபர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டார். இவர் அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

    2022 ஆண்டில் மட்டும் டொயோட்டா நிறுவனம் 21 ஆயிரத்து 650 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. இது சந்தையில் 0.3 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் 10 லட்சத்து 27 ஆயிரம் யூனிட்களையும், பிஒய்டி நிறுவனம் 8 லட்சத்து 10 ஆயிரத்து 600 யூனிட்களையும் விற்பனை செய்து இருந்தது.

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல், 2.0 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் முன்பதிவு நிறுத்தப்பட்டு விட்டது. இன்னோவா ஹைகிராஸ் ZX மற்றும் ZX (O) வேரியண்ட்களின் முன்பதிவு நிறுத்தப்பட்டது. புதிய தலைமுறை இன்னோவா ஹைகிராஸ் மாடல் நவம்பர் 2022 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், ஸ்டிராங் ஹைப்ரிட் ஆப்ஷனில் வழங்கப்படுகிறது. புதிய காருக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், வினியோக சிக்கல் காரணமாக முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.

     

    இரு வேரியண்ட்கள் தவிர இன்னோவா ஹைகிராஸ் மாடலின் மற்ற வேரியண்ட்களுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. "வினியோக சிக்கல் காரணமாக இன்னோவா ஹைகிராஸ் ZX மற்றும் ZX (O) வேரியண்ட்களின் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். முன்பதிவு நிறுத்தம் ஏப்ரல் 8 ஆம் தேதி அமலுக்கு வருகிறது."

    "இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரிட் மாடலின் இதர வேரியண்ட்களுக்கு தொடர்ந்து முன்பதிவு நடைபெறும். மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வேரியண்ட்களுக்கு விரைவில் முன்பதிவை துவங்குவதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்." என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    • டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் ஸ்டாண்டர்டு 4x4 MT வேரியண்ட் விலை அதிரடியாக மாற்றப்பட்டது.

    டொயோட்டா இந்தியா நிறுவனம் ஹிலக்ஸ் பிக்கப் டிரக் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. ஹிலக்ஸ் ஸ்டாண்டர்டு மற்றும் ஹை வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் ஸ்டாண்டர்டு MT வேரியண்ட் விலை ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஹை MT மற்றும் ஹை AT வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    விலை மாற்றத்தின் படி டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் துவக்க விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என மாறி இருக்கிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஹிலக்ஸ் மாடலின் இரண்டாவது கட்ட யூனிட்களுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய சந்தையில் ஹிலக்ஸ் மாடல் இசுசு டி மேக்ஸ் வி கிராஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இதில் டபுள் கேபின், மஸ்குலர் முன்புறம், க்ரோம் ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

     

    ஹிலக்ஸ் மாடலில் ஃபார்ச்சூனரில் வழங்கப்பட்டு இருக்கும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 210 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. ஹிலக்ஸ் மாடல் 4-வீல் டிரைவ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    டொயோட்டா ஹிலக்ஸ் ஸ்டாண்டர்டு 4x4 MT ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம்

    டொயோட்டா ஹிலக்ஸ் ஹை 4x4 MT ரூ. 37 லட்சத்து 15 ஆயிரம்

    டொயோட்டா ஹிலக்ஸ் ஹை 4x4 AT ரூ. 37 லட்சத்து 90 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடல் நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய இன்னோவா க்ரிஸ்டா டீசல் மாடலில் 2.4 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட GD சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கான முன்பதிவுகளை சில நாட்களுக்கு முன் துவங்கியது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய இன்னோவா க்ரிஸ்டா டீசல் மாடல் G, GX, VX மற்றும் ZX என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 19 லட்சத்து 13 ஆயிரம் என துவங்குகிறது. இன்னோவா க்ரிஸ்டா GX வேரியண்ட் விலை ரூ. 19 லட்சத்து 99 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள 2.4 லிட்டர் டீசல் என்ஜின் 150பிஎஸ் பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் E20 ரக எரிபொருளில் இயங்கும் வசதியும், RDE விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த காரில் 8 இன்ச் டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இந்த எம்பிவி மாடலில் 8 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒட்டுனர் இருக்கை, டிஜிட்டல் டிஸ்ப்ளே ரியர் ஆட்டோ ஏசி, சீட் பேக் டேபில் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் உள்ளது. இத்துடன் ஏழு ஏர்பேக், ஏபிஎஸ், பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    • டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெல்ஃபயர் மாடலை சிபியு வகையில் விற்பனை செய்கிறது.
    • டொயோட்டா வெல்ஃபயர் மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெல்ஃபயர் மாடல் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது. இந்திய சந்தையில் சிபியு மாடலாக விற்பனை செய்யப்படும் வெல்ஃபயர் எம்பிவி மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டா வெல்ஃபயர் ஒற்றை, ஃபுல்லி லோடட் ஹைப்ரிட் வேரியண்ட் வடிவில் விற்பனை செய்யப்டுகிறது.

    விலை உயர்வின் படி டொயோட்டா வெல்ஃபயர் விலை தற்போது ரூ. 96 லட்சத்து 55 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2020 பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா வெல்ஃபயர் 7 சீட்டர் எம்பிவி வடிவில் கிடைக்கிறது. இதுவரை வெல்ஃபயர் மாடலின் விலை ரூ. 17 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     

    ஸ்லைடிங் ரியர் கதவுகளை கொண்ட டொயோட்டா வெல்ஃபயர் மாடலில் இரண்டாம் அடுக்கு இருக்கைகள் ரிக்லைனிங், ஹீடிங் மற்றும் கூலிங் வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 16 நிற ரூஃப் லைட்கள், டுவின் சன்ரூஃப், ஹீடெட் ஸ்டீரிங் வீல், ரியர் எண்டர்டெயின்மெண்ட் ஸ்கிரீன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    டொயோட்டா வெல்ஃபயர் மாடலில் 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பெட்ரோல் என்ஜின் 115 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. முன்புறம் மற்றும் ஆக்சிலில் பொருத்தப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார்கள் முறையே 140 ஹெச்பி மற்றும் 67 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்றன.

    • டொயோட்டா ஹைகிராஸ் புதிய வேரியண்ட் VX மற்றும் ZX வேரியண்ட்களின் இடையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.
    • இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இன்னோவா ஹைகிராஸ் மாடலின் புதிய வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் இன்னோவா ஹைகிராஸ் VX (O) என அழைக்கப்படுகிறது. இது VX மற்றும் ZX வேரியண்ட்களின் இடையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹைகிராஸ் VX (O) 7 சீட்டர் விலை ரூ. 26 லட்சத்து 73 ஆயிரம் என்றும் 8 சீட்டர் விலை ரூ. 26 லட்சத்து 78 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இன்னோவா ஹைகிராஸ் VX (O) மாடலின் 7-சீட்டர் மற்றும் 8-சீட்டர் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

    இன்னோவா ஹைகிராஸ் VX வேரியண்டில் உள்ள அனைத்து அம்சங்களுடன் புதிய VX (O) வேரியண்டில் பானரோமிக் சன்ரூஃப், மூட் லைட்டிங், எல்இடி ஃபாக் லேம்ப்கள், 10 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆறு ஏர்பேக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹைகிராஸ் VX (O) வேரியண்டில் 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 111 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டதோடு, இன்னோவா ஹைகிராஸ் விலை ரூ. 75 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் விலை அறிவிக்கப்பட்டது.

    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது அர்பன் குரூயிசர் ஹைரைடர் ஹைப்ரிட் மாடல் விலையை ரூ. 50 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. இந்த விலை உயர்வு காரின் மூன்று வேரியண்ட்களுக்கும் பொருந்தும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் விலை அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்த காரின் முதல் விலை உயர்வு இது ஆகும்.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷ்களில் கிடைக்கிறது. இதுதவிர இந்த காரின் CNG வேரியண்ட் விலைகளும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல்- E, S, G மற்றும் V என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 11 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த விலை ரூ. 15 லட்சத்து 61 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஹைரைடர் ஸ்டிராங் ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 91 ஹெச்பி பவர், 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும், எலெக்ட்ரிக் மோட்டார் 79 ஹெச்பி பவர், 141 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் இ-டிரைவ் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்டிராங் ஹைப்ரிட் எஸ்யுவி லிட்டருக்கு 27.97 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டொ தெரிவித்துள்ளது.

    • டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய இன்னவோ ஹைகிராஸ் வினியோகம் பற்றிய தகவல் வெளியானது.
    • புது இன்னோவா ஹைகிராஸ் மாடல் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஹைப்ரிட் மோட்டார் கொண்டிருக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் தனது புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை விவரங்களை வெளியிட்டது. புது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை ரூ. 18 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என ஆகும். முன்பதிவு டொயோட்டா அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் மேற்கொள்ளலாம்.

    இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் - சூப்பர் வைட், பிளாட்டினம் வைட் பியல், சில்வர் மெட்டாலிக், ஆடிட்யூட் பிளாக் மைகா, ஸ்பார்க்லிங் பிளாக் பியல் க்ரிஸ்டல் ஷைன், அவாண்ட் கிரேடு பிரான்ஸ் மெட்டாலிக் மற்றும் பிளாகிஷ் அகெஹா கிளாஸ் ஃபிளேக் என ஏழு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதோடு G, GX, VX, ZX மற்றும் ZX(O) என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் 172 ஹெச்பி பவர், 187 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜினுடன் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

    ஹைப்ரிட் யூனிட் 111 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய ஹைகிராஸ் மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படவில்லை.

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஹைரைடர் CNG மாடல் 26.06 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
    • புதிய டொயோட்டா ஹைரைடர் CNG மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடல் மாடலின் CNG வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது அர்பன் குரூயிசர் CNG மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 23 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் ஹைரைடர் CNG மாடல் S மற்றும் G என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 15 லட்சத்து 29 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய டொயோட்டா ஹைரைடர் CNG மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட K சீரிஸ் என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 102 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 26.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் CNG மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஆறு ஏர்பேக், 9 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், டொயோட்டா i-கனெக்ட், ஆட்டோ-ஃபோல்டிங் ORVM-கள், ஆட்டோ டிம்மிங் IRVM, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.

    • டொயோட்டா நிறுவனத்தின் 2023 இன்னோவா க்ரிஸ்டா 2.4 லிட்டர் டீசல் என்ஜின் உடன் கிடைக்கிறது.
    • புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டொயோட்டா இந்தியா நிறுவனம் தனது இன்னோவா க்ரிஸ்டா மாடலை மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹைகிராஸ் உடன் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    இந்த மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின், நான்கு வேரியண்ட்கள், இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. 2023 இன்னோவா க்ரிஸ்டா மாடலின் முன்புறம் மாற்றப்பட்டு, அதிகளவு க்ரோம் ஹைலைட்களை பெற்று இருக்கிறது. இதன் முன்புற கிரில் பகுதியில் கிடைமட்டமான க்ரம் ஸ்டிரைப், பம்ப்பரில் க்ரோம் இன்சர்ட், ஃபாக் லேம்ப் ஹவுசிங் கொண்டிருக்கிறது.

    இவை தவிர புதிய க்ரிஸ்டா மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த கார் G, GX, VX மற்றும் ZX என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காரின் கேபின் பகுதியில் பவர்டு டிரைவர் சீட், ரியர் ஏசி வெண்ட்கள், டிஜிட்டல் டிஸ்ப்ளே, செட்பேக் டேபிள், லெதர் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த கார் ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. 2023 இன்னோவா மாடலில் ஏழு ஏர்பேக், முன்புறம் மற்றும் பின்புற பார்கிங் சென்சர்கள், பிரேக் அசிஸ்ட் மற்றும் 3-பாயிண்ட் சீட் பெல்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய க்ரில்சா மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 148 ஹெச்பி பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. வரும் வாரங்களில் இந்த மாடலுக்கான விலை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது.

    ×