search icon
என் மலர்tooltip icon

    கார்

    டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் இந்திய வினியோகம் துவக்கம்
    X

    டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் இந்திய வினியோகம் துவக்கம்

    • டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய இன்னவோ ஹைகிராஸ் வினியோகம் பற்றிய தகவல் வெளியானது.
    • புது இன்னோவா ஹைகிராஸ் மாடல் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஹைப்ரிட் மோட்டார் கொண்டிருக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் தனது புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை விவரங்களை வெளியிட்டது. புது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை ரூ. 18 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என ஆகும். முன்பதிவு டொயோட்டா அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் மேற்கொள்ளலாம்.

    இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் - சூப்பர் வைட், பிளாட்டினம் வைட் பியல், சில்வர் மெட்டாலிக், ஆடிட்யூட் பிளாக் மைகா, ஸ்பார்க்லிங் பிளாக் பியல் க்ரிஸ்டல் ஷைன், அவாண்ட் கிரேடு பிரான்ஸ் மெட்டாலிக் மற்றும் பிளாகிஷ் அகெஹா கிளாஸ் ஃபிளேக் என ஏழு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதோடு G, GX, VX, ZX மற்றும் ZX(O) என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் 172 ஹெச்பி பவர், 187 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜினுடன் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

    ஹைப்ரிட் யூனிட் 111 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய ஹைகிராஸ் மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படவில்லை.

    Next Story
    ×