search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    பத்து எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் டொயோட்டா - இணையத்தில் வெளியான சூப்பர் தகவல்!
    X

    பத்து எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் டொயோட்டா - இணையத்தில் வெளியான சூப்பர் தகவல்!

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • 2022 ஆண்டில் மட்டும் டொயோட்டா நிறுவனம் 21 ஆயிரத்து 650 பேட்டரியால் இயங்கும் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.

    டொயோட்டா மோட்டார் நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கொஜி சடோ நேரலை நிகழ்வில் நேற்று உரையாற்றியுள்ளார். இதே நிகழ்வில் பேசிய துணை தலைவர் ஹிரோகி நகஜிமா, டொயோட்டா நிறுவனம் 2026 ஆண்டிற்குக்குள் பத்து புதிய எலெக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

    இதன் மூலம் ஆண்டிற்கு சுமார் 15 லட்சம் வாகனங்களை விற்பனை செய்யும் என தெரிகிறது. பல்வேறு பகுதிகளில் டொயோட்டா நிறுவனம், சாத்தியக்கூறுக்கு ஏற்ப எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கொஜி சடோ தெரிவித்தார். உலகளவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டொயோட்டா எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

    டொயோட்டா நிறுவனம் அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்காக விசேஷ பிரிவு ஒன்றை உருவாக்க இருக்கிறது. இதற்கான உற்பத்தி முதல் வியாபார பொறுப்பு வரை அனைத்திற்குமான தலைமை பொறுப்பு ஒருவருக்கு வழங்கப்பட இருக்கிறது. தலைமை பொறுப்புக்கான நபர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டார். இவர் அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

    2022 ஆண்டில் மட்டும் டொயோட்டா நிறுவனம் 21 ஆயிரத்து 650 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. இது சந்தையில் 0.3 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் 10 லட்சத்து 27 ஆயிரம் யூனிட்களையும், பிஒய்டி நிறுவனம் 8 லட்சத்து 10 ஆயிரத்து 600 யூனிட்களையும் விற்பனை செய்து இருந்தது.

    Next Story
    ×