search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    1353 கிமீ ரேன்ஜ் வழங்கும் புதிய பேட்டரி தொழில்நுட்பம் அறிமுகம் செய்த டொயோட்டா!
    X

    1353 கிமீ ரேன்ஜ் வழங்கும் புதிய பேட்டரி தொழில்நுட்பம் அறிமுகம் செய்த டொயோட்டா!

    • டொயோட்டா கிரவுன் செடான் கான்செப்ட் மாடலில் சாலிட் ஸ்டேட் பேட்டரி தொழில்நுட்பம் அறிமுகம்.
    • சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் குறைந்த செலவில், அதிக ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.

    டொயோட்டா நிறுவனம் தனது கிரவுன் EV ப்ரோடோடைப் மாடல் விவரங்களை அறிவித்து இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் அடுத்த பெரிய பேசுபொருளாக பைபோலார் சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் இருக்கும் என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    வாகனங்களின் ரேன்ஜ் பற்றி எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்த போதிலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. அதிநவீன பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் ஏரோ திறன் தற்போது இருப்பதை விட பலமடங்கு எல்லைகளை கடக்க வேண்டியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் குறைந்த செலவில், அதிக ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.

    சாலிட் ஸ்டேட் பேட்டரிகளை பயன்படுத்துவதில் முன்னணியில் இருக்க டொயோட்டா விரும்புகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் தாமதமாக களமிறங்கியதற்காக சந்தையில் பல்வேறு கேள்விகளுக்கு ஆளான நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் வியாபாரம் மிக முக்கியமானது என்பதை டொயோட்டா நிறுவனம் வெளிக்காட்டி இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் கிரவுன் செடான் கான்செப்ட் மாடலில் அறிமுகம் செய்து இருக்கும் சாலிட் ஸ்டேட் பேட்டரி தொழில்நுட்பம் முழு சார்ஜ் செய்தால் 1353 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் எலெக்ட்ரிக் வாகன துறையில் தனது எதிர்கால திட்டம் பற்றிய தகவல்களை டொயோட்டா அறிவித்து இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் குறைந்த விலை மற்றும் டாப் எண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தனது புதிய அடுத்த தலைமுறை பேட்டரியை BZ4X மற்றும் டொயோட்டா விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் வாகனத்துடன் ஒப்பிடுகிறது. அதன்படி அதிக செயல்திறன் கொண்ட வெர்ஷன்களில் டொயோட்டா நிறுவனம் மோனோபோலார் பேட்டரிகளை பயன்படுத்த இருக்கிறது.

    டொயோட்டாவின் அடுத்த தலைமுறை பேட்டரி 2026 வாக்கில் சந்தையில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. இதன் விலை தற்போதைய BZ4X மாடலில் உள்ள பேட்டரியை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும். இதனை 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 20 நிமிடங்களே ஆகும்.

    Next Story
    ×