search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிராகன் பழம்"

    • நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் வழிவகுக்கின்றன.
    • உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க துணைபுரியும்.

    கவர்ச்சிகரமான பழ இனங்களுள் ஒன்றாக காட்சி அளிக்கும் டிராகன் பழத்தின் பூர்வீகமாக மெக்சிகோ அறியப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா முழுவதும் பரவி இப்போது உலகம் முழுவதும் விளைவிக்கப்படுகிறது. இந்தியாவிலும் இதனை பலர் விரும்பி ருசிக்க பழகிவிட்டார்கள். டிராகன் பழத்தை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்வோம்.

    * டிராகன் பழத்தில் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை உடலில் செல்களை சேதப்படுத்தும் ப்ரீரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் வழிவகுக்கின்றன.

    * டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தக்கூடியது. நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடி உடல் பலவீனம் அடைவதை தடுக்கக்கூடியது.

    * டிராகன் பழத்தில் உள்ளடங்கி இருக்கும் நார்ச்சத்து செரிமான செயல்பாடுகளையும், குடல் இயக்கங்களையும் மேம்படுத்த உதவும்.

    * இதில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து சருமத்தை பாதுகாக்க வழிவகை செய்யும். விரைவிலேயே வயதான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தடுக்கும்.

    *டிராகன் பழத்தில் உள்ள நார்ச்சத்துகள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆரோக்கியமான கொழுப்பின் செயல்பாடுகளை ஊக்குவிக்க உதவும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதய நோய் அபாயங்களையும் குறைக்கும்.

    * டிராகன் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் வெப்பமான காலநிலையின்போது உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க துணைபுரியும். உடற்பயிற்சி செய்த பிறகு உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கும் டிராகன் பழம் சிறந்த தேர்வாக அமையும்.

    * டிராகன் பழத்தில் கலோரிகள் குறைவு. ஆனால் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

    • அன்னமய்யா மாவட்டத்தில் டிராகன் பழ சாகுபடியை நோக்கி விவசாயிகள் திரும்பி வருகின்றனர்.
    • ஆந்திராவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நிலப்பகுதி டிராகன் பழம் உற்பத்திக்கு தகுதியாக உள்ளன.

    திருப்பதி:

    டிராகன் பழம் ஒரு காலத்தில் கடைகளில் கிடைப்பது அரிதான ஒன்றாக இருந்து வந்தது. இப்போது, எளிதாக அங்காடிகளில் கிடைக்கிறது.

    பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும் டிராகன் பழம், உலகில் வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டிராகன் பழம் தற்போது ஆந்திராவிலும் விளைச்சலை தொடங்கியுள்ளது.

    பாரம்பரிய பயிர்களை பயிரிடுவதில் குறைந்த அல்லது லாபம் இல்லாததால், ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தின் பல ஆர்வமுள்ள விவசாயிகள், அயல்நாட்டு டிராகன் பழத்தின் சாகுபடியை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அது நல்ல லாபம் ஈட்டி வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி, வெளிச்சந்தையில் ஒரு டன் பழத்தின் விலை ரூ.1.50 லட்சத்தை நெருங்குகிறது.

    அன்னமய்யா மாவட்டத்தில் டிராகன் பழ சாகுபடியை நோக்கி விவசாயிகள் திரும்பி வருகின்றனர். இதனால் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    இப்பகுதியில் இருந்து கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    டிராகன் பழத்தின் பூக்கள் மற்றும் பழங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் நவம்பர் வரை மூன்று முதல் 5 முறை நிகழ்கின்றன, இது பருவமழையுடன் ஒத்துப்போகிறது, மேலும் பூக்கும் நிலைக்குப் பிறகு அறுவடை செய்ய கிட்டத்தட்ட 35 நாட்கள் ஆகிறது.

    "பெரும்பாலான விவசாயிகள் இயற்கை விவசாயம் மூலம் பயிர் செய்கிறார்கள். முதன்முறையாக 7.5 ஏக்கரில் பயிர் செய்து 500 கிலோ மகசூல் பெற்றுள்ளேன். இந்த ஆண்டு, 15-20 டன் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என, விவசாயி ஒருவர் கூறினார்.

    ஆந்திராவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நிலப்பகுதி டிராகன் பழம் உற்பத்திக்கு தகுதியாக உள்ளன. அந்த பகுதிகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய மானியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

    • ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட டிராகன் பழங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் பலரும் இந்த பழங்களை தவிர்க்கும் நிலை உள்ளது.
    • ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட டிராகன் பழங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் பலரும் இந்த பழங்களை தவிர்க்கும் நிலை உள்ளது.

    குடிமங்கலம்:

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நகரப் பகுதிகளிலுள்ள பழ அங்காடிகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த டிராகன் பழங்கள் தற்போது குடிமங்கலம் பகுதி கிராமப்புற ரோட்டோரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் நமது கிராம விவசாயிகளும் டிராகன் பழங்களின் சாகுபடியைத் தொடங்கியிருப்பதே ஆகும். இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் டிராகன் பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் விருதுநகர், ஈரோடு, மதுரை, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் சிறிய அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் உடுமலை, குடிமங்கலம் பகுதிகளிலும் ஒருசில விவசாயிகள் டிராகன் பழங்கள் சாகுபடி செய்து வருகின்றனர். கள்ளி வகையைச் சேர்ந்த டிராகன் பழம் வெப்ப மண்டலப் பயிர் ஆகும். களிமண் தவிர்த்த, வடிகால் வசதியுடைய அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது. குறைந்த அளவு நீர்த் தேவை உள்ள பயிராக இருப்பதால் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற பயிராகும். செடிகள் நடவு செய்து 1½ முதல் 2 ஆண்டுகளில் மகசூல் கொடுக்கத் தொடங்கும். ஆனாலும் முழுமையான மகசூல் ஈட்டுவதற்கு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். முதல் அறுவடையில் ஆண்டுக்கு வெறும் 1 முதல் 1 ½ டன் மட்டுமே மகசூல் கிடைக்கும் நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 8 முதல் 10 டன்கள் வரை மகசூல் கிடைக்கும். ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட டிராகன் பழங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் பலரும் இந்த பழங்களை தவிர்க்கும் நிலை உள்ளது.

    விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை கொள்முதல் செய்யப்படும் டிராகன் பழங்கள் வெளிச்சந்தையில் கிலோ ரூ.350-க்கு மேல் விற்கப்படுகிறது. ஒவ்வொரு பழமும் 400 கிராம் முதல் 700 கிராம் வரை எடை கொண்டதாக உள்ளது. இதனால் ஒரு பழம் ரூ.200 அளவுக்கு விற்பனை செய்யப்படுவதால் இது பணக்காரர்கள் சாப்பிடும் பழமாக உள்ளது.

    அத்துடன் டிராகன் பழங்களின் அழகிய இளஞ்சிவப்பு நிறம் குழந்தைகளை பெருமளவில் கவர்ந்து இழுத்தாலும் அதன் சுவை பெரிய அளவில் ரசிக்கப்படுவதில்லை. இதன் மருத்துவ குணங்களை கருத்தில் கொண்டே சிலர் இதனை வாங்கி சாப்பிடுகின்றனர். மேலும் டிராகன் பழம் உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க உதவுவதால், இறந்த தேவையற்ற செல்களால் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. அத்துடன் ரத்தக் குழாய்கள் விறைப்புத் தன்மையுடன் இருப்பதை குறைக்க உதவுகிறது. எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பழமாக டிராகன் பழங்கள் கருதப்படுகிறது. மேலும் புற்று நோய்களைக் கட்டுப்படுத்த உதவுவதுடன் வயிறு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் உடல் எடை மேலாண்மையிலும் டிராகன் பழங்கள் சிறந்த பங்கு வகிக்கின்றன. ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்த சோகையை சரி செய்கிறது. கண் பார்வையை மேம்படுத்த, பசி உணர்வை அதிகரிக்க, உடல் செல்களை பழுது பார்க்க என பல வகைகளில் மனிதனின் ஆரோக்கிய மேம்பாட்டுக்கு டிராகன் பழங்கள் உதவுகிறது. குறைந்த நீரில் சாகுபடி செய்து அதிக மகசூல் ஈட்டி சிறந்த வருமானம் தரும் டிராகன் பழங்களை சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறையினர் வழிகாட்டல்கள் மற்றும் உதவிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • டிராகன் பழத்தில் மருத்துவ குணம் நிறைந்த இப்பழத்தில் மூன்று வகை உள்ளன.
    • டிராகன் பழம் இதய நோய், ரத்த அழுத்தம், குடல் இறக்க நோய்களை கட்டுப்படுத்தி உடலுக்கு வலிமை தரும்.

    உடுமலை :

    உடுமலையில் டிராகன் பழம் கிலோ ரூ.180 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டிராகன்எனும் மருத்துவ குணம் நிறைந்த இப்பழத்தில் மூன்று வகை உள்ளன. தோல் பிங்க் நிறத்தில் வாழைப் பூ போன்றும், சதைப்பகுதி கொழகொழப்புடன் வெள்ளை நிறத்திலும், மற்றொரு வகையில் தோல் மஞ்சள் நிறத்திலும், இன்னொரு வகையில் சதை பகுதி சிவப்பு நிறத்திலும் காணப்படும்.

    இப்பழத்தில் சிறிய அளவில் பல நூறு விதைகள் இருக்கும்.இப் பழத்தினுள் சிறிய அளவில் நிறைய விதைகள் இருக்கும். அவற்றுடன் சேர்த்தே இப் பழத்தை உண்ண வேண்டும். இதய நோய், ரத்த அழுத்தம், குடல் இறக்க நோய்களை கட்டுப்படுத்தி உடலுக்கு வலிமை தரும். செரிமான சக்தியை அதிகரிக்க செய்து, மலச்சிக்கலை இப்பழம் நீக்குகிறது. இப்பழத்தில் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளன. சர்க்கரை நோயாளிகள் நேரடியாகவும், மற்றவர்கள் நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடலாம். ஐஸ்கிரீமுடன் சேர்த்தோ, காய்ச்சிய பாலோடு சேர்த்து 'ஜூஸ்' தயாரித்தோ சாப்பிடலாம். தற்போது அதிக அளவு கிடைக்கும் பழங்களை கிலோ ரூ.180க்கு விற்பனையாகிறது .ஒரு பழம் 200 முதல் 400 கிராம் எடையுடன் உள்ளது. இப்பழம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அறிந்தவர்களே வாங்கி செல்கின்றனர். ஆண்டு முழுவதும் இப்பழம் கிடைக்கிறது.

    தற்போது இந்த பழம் உடுமலையில் அண்ணா குடியிருப்பில் உள்ள வேலுச்சாமி என்பவர் வீட்டில் காய்த்துள்ளது. இப்பழத்தை இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

    ×