search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலக கோப்பை"

    • இன்றைய போட்டியில் அதிரடியாக ஆடிய விராட் கோலி 64 ரன்கள் குவித்தார்
    • ஜெயவர்தனே சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய விராட் கோலி 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    முன்னதாக நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லை (965) பின்னுக்கு தள்ளி கோலி 2-வது இடத்துக்கு (989 ரன்கள்) முன்னேறி இருந்தார். இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 11 ரன்களை கடந்த போது டி20 உலகக் கோப்பையில் ஆயிரம் ரன்களை அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை படைத்தார். அப்போது இந்த பட்டியலில் இலங்கை வீரர் ஜெயவர்தனே 1016 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

    இந்த நிலையில் இன்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, ஜெயவர்தனே சாதனையை முறியடித்து டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் 23 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 1065 ரன்கள் அடித்துள்ளார். 2-வது இடத்தில் ஜெயவர்தனே (1016 ரன்கள்- 31 போட்டிகள்) உள்ளார்.

    • டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • 16வது ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் 14 ரன்களே எடுக்க முடிந்தது

    டி20 உலகக்கோப்பையில் இன்றைய சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் கட்டாயம் வெற்றி வெறவேண்டிய நெருக்கடியுடன் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

    185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வங்காளதேசம் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்த நிலையில், திடீரென மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தடைபட்டது. அப்போது வங்காளதேசம் வெற்றிபெற 78 பந்துகளில் 119 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. லித்தன் தாஸ் 59 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    சில நிமிடங்களுக்கு பின் மழை நின்றதையடுத்து ஆட்டம் தொடங்கியது. அதேவேளை, மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டது. டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. வங்காளதேச அணி ஏற்கனவே 7 ஓவரில் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்னும் 54 பந்துகளில் 85 ரன்கள் எடுக்கவேண்டும்.

    அதேசமயம் இந்திய அணி வங்காளதேசத்தின் விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டிய கட்டாயத்தில் பந்துவீசத் தொடங்கியது. இலக்கை நோக்கி வங்காளதேச அணி அதிரடியாக ஆடியது. லித்தன் தாஸ் 60 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதன்பின்னர் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டம் பரபரப்பானது.

    ஹர்திக் வீசிய 15வது ஓவரில் 11 ரன்கள் எடுக்கப்பட்டது. எனவே, 16வது ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட தஷ்கின் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் சிக்சர் விளாசினார் நூருல். மூன்றாவது பந்தில் ரன் ஏதும் இல்லை. நான்காவது பந்தில் 2 ரன்களே எடுக்க முடிந்தது. 5வது பந்தில் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அந்த ஓவரில் மொத்தம் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

    16 ஓவர் முடிவில் வங்காளதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்ததால், இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் குரூப் பி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

    • விராட் கோலி 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
    • வங்காளதேசம் தரப்பில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    அதிரடியாக ஆடிய துவக்க வீரர் கே.எல்.ராகுல் 50 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி -சூர்யகுமார் யாதவ் இருவரும் நிதானமான விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

    சூர்யகுமார் யாதவ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார். மறுமுனையில் ஹர்திக் பாண்ட்யா 5 ரன்கள், தினேஷ் கார்த்திக் 7 ரன்கள், அக்சர் பட்டேல் 7 ரன்கள் என  வெளியேற, இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 64 ரன்களுடனும், அஸ்வின் 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    வங்காளதேசம் தரப்பில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட் கைப்பற்றினார். ஷாகிப் அல் அசன் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்குகிறது.

    • எனது அணியின் செயல்பாடு மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
    • நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் வலுவான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 


    முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது.பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. நேற்றைய போட்டியில் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா சிறப்பாக பந்து வீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து பாகிஸ்தான் அணியின் 3 விக்கெட்களை சாய்த்தார். 


    மற்றொரு வீரர் பிராட் எவன்ஸ் 2 விக்கெட்களை கைப்பற்றினார். 2வது போட்டியிலும் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசம் கூறியுள்ளதாவது: பேட்டிங் போது நாங்கள் முதல் ஆறு ஓவர்கள் மிக மோசமான நிலையில் இருந்தோம், ஆனால் ஷதாப் மற்றும் ஷான் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஷதாப் அவுட்டானார். 


    பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் மற்ற வீரர்களுக்கு பேட்டிங்கில் அழுத்தம் ஏற்பட்டது. பவுலிங் போது முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் புதிய பந்தை நன்றாகப் பயன்படுத்தவில்லை. பின்னர் நன்றாக செயல்பட்டோம். நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசி எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் வலுவான நிலைக்குத் திரும்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 130 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 129 ரன்களை மட்டுமே எடுத்தது.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது. சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டும், ஷதாப் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பாபர் அசாம் 4 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 15 ரன்னிலும் அவுட்டாகினர். இப்திகார் அகமது 5 ரன்னிலும், ஷதாப் கான் 17 ரன்னிலும் அவுட்டாகினர்.

    பொறுப்புடன் ஆடிய ஷான் மசூத் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹைதர் அலி டக் அவுட்டானார்.

    இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே திரில் வெற்றியை பதிவு செய்தது.

    ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது..
    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 130 ரன்களை எடுத்தது.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று நடைபெறும் 3வது போட்டியில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 42 ஆக இருந்தபோது கேப்டன் எர்வின் 19 ரன்னில் அவுட்டானார். மாதேவீர் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மில்டன் ஷம்பா 8 ரன்னிலும், சிக்கந்தர் ராசா 9 ரன்னிலும் அவுட்டாகினர். சீன் வில்லியம்ஸ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 31 ரன்கள் எடுத்தார். 14 மற்றும் 15வது ஓவரில் ஜிம்பாப்வே அணி தலா 2 விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்துள்ளது.

    பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டும், ஷதாப் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து,131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

    • முதல் ஆட்டத்தில் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
    • நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று மெல்போர்னில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின. மழையால் தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில், முதலில் ஆடிய அயர்லாந்து அணி 157 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இரண்டாவது ஆட்டத்தில் குரூப்-1ல் உள்ள நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுவதாக இருந்தது. டாஸ் போடுவதற்கு முன்பே மழை பெய்யத் தொடங்கியது. மழை விட்டதும் போட்டி தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இடைவிடாது மழை பெய்தது. எனவே, டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

    • இதை விட சிறப்பான கிரிக்கெட் போட்டி இதுவரை நடைபெற்றதில்லை.
    • விராட் கோலி உலகக் கோப்பையில் அவரது முத்திரையை பதித்தார்.

    மெல்போர்ன்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் விராட் கோலி எடுத்த 82 ரன்கள் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இது குறித்து மெல்போர்னில் பேசிய ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கூறியுள்ளதாவது: மெல்போர்னில் இதைவிட சிறப்பான கிரிக்கெட் போட்டி இதுவரை நடைபெற்றதில்லை .இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எப்போதுமே பார்க்க முடியாத நம்ப முடியாத ஒரு ஆட்டமாக அது இருந்தது. என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 


    இதற்கு பிறகு உலககோப்பையை கைப்பற்றும் எங்களது எண்ணத்தை அங்கேயே நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி வாழ்க்கையைப் பற்றி நினைக்கும் போது அவரது ஆட்டம் ஆச்சரியமாக இருக்கிறது.12 மாதங்கள் அவர் அலட்சியமாக இருந்துள்ளார். உலகக் கோப்பையில் அவரது முத்திரையை பதித்தார், இது பார்ப்பதற்கு நம்ப முடியாத ஒரு இன்னிங்ஸ். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்தது
    • இன்னும் ஒரு ஓவர் வீசப்பட்டிருந்தால் தென் ஆப்பிரிக்காவை குயின்டன் டி காக் வெற்றி பெற செய்திருப்பார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றில் இன்று ஹோபர்ட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி தொடங்க தாமதம் ஆனது. பின்னர் போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பவர் பிளே 3 ஓவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி, 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக வெஸ்லி 35 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார். மில்டன் ஷூம்பா 18 ரன்கள் அடித்தார்.

    அதன்பின்னர் மழை அச்சுறுத்தல் இருந்ததால், தென் ஆப்பிரிக்க அணி 7 ஓவர்களில் 64 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. துவக்க வீரர் குயின்டன் டி காக் பவுண்டரிகளாக விளாசி, ஜிம்பாப்வே பவுலர்களை திணறடித்தார். மறுமுனையில் இணைந்திருந்த பவுமாவுக்கு வாய்ப்பே கிடைக்காத அளவுக்கு குயின்டன் டி காக் ருத்ரதாண்டவம் ஆடினார்.

    3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. ஆடுகளம் கடுமையாக வழுக்கியதால் பந்துவீச முடியவில்லை. ஒரு பந்துவீச்சாளர் வழுக்கி விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    அப்போது குயின்டன் டி காக், 18 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 47 ரன்கள் சேர்த்திருந்தார். வெற்றி பெற 24 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இன்னும் ஒரு ஓவர் வீசப்பட்டிருந்தால் தென் ஆப்பிரிக்காவை குயின்டன் வெற்றி பெற செய்திருப்பார். ஆனால் மழை நீடித்ததால் ஆடுகளம் ஈரப்பதம் மேலும் அதிகமாகி பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 

    • முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.
    • 20 ஓவர் முடிவில் நெதர்லாந்து அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஹோபர்ட்:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஹோபர்ட்டில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஆபிப் உசைன் 38 ரன்கள் சேர்த்தார். நஜ்முல் உசைன் 25 ரன், மொசாடெக் உசைன் (20 நாட் அவுட்) ரன் சேர்த்தனர்.

    இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி, வங்காளதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. மறுமுனையில் அதிரடியாக ஆடிய கொலின் ஆக்கர்மேன், 48 பந்துகளில் 62 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார். ஆனால் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், அணியின் வெற்றி வாய்ப்பு நழுவியது.

    கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய பால் வேன் மீகரன், எதிரணியை சற்று மிரளச் செய்தார். ஆனால் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் 14 ரன்களே எடுத்தது. மீகரன் 14 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 24 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி பந்தில் அவுட் ஆனார்.

    20 ஓவர் முடிவில் நெதர்லாந்து அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. வங்காளதேச அணியின் தஷ்கின் அகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

    • டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • வங்காளதேச அணியில் அதிகபட்சமாக ஆபிப் உசைன் 38 ரன்கள் சேர்த்தார்.

    ஹோபர்ட்:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஹோபர்ட்டில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஆபிப் உசைன் 38 ரன்கள் சேர்த்தார். நஜ்முல் உசைன் 25 ரன், மொசாடெக் உசைன் (20 நாட் அவுட்) ரன் சேர்த்தனர். நெதர்லாந்து தரப்பில் பால் வேன் மீகரென் பாஸ் டி லீட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. 

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 112 ரன்களில் சுருண்டது.
    • இங்கிலாந்தின் சாம் கர்ரன் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

    பெர்த்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்று இன்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவரில் 112 ரன்களில் சுருண்டது. இப்ராகிம் சட்ரன் 32 ரன்களும், உஸ்மான் கனி 30 ரன்களும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரன் 5 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல் 19 ரன்னும், ஜோஸ் பட்லர் 18 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 2 ரன்னிலும் அவுட்டாகினர். டேவிட் மலான் 18 ரன்னிலும், புரூக் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து இறங்கிய லிவிங்ஸ்டோன் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 18.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. லிவிங்ஸ்டோன் 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    ×