search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SAvZIM"

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்தது
    • இன்னும் ஒரு ஓவர் வீசப்பட்டிருந்தால் தென் ஆப்பிரிக்காவை குயின்டன் டி காக் வெற்றி பெற செய்திருப்பார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றில் இன்று ஹோபர்ட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி தொடங்க தாமதம் ஆனது. பின்னர் போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பவர் பிளே 3 ஓவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி, 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக வெஸ்லி 35 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார். மில்டன் ஷூம்பா 18 ரன்கள் அடித்தார்.

    அதன்பின்னர் மழை அச்சுறுத்தல் இருந்ததால், தென் ஆப்பிரிக்க அணி 7 ஓவர்களில் 64 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. துவக்க வீரர் குயின்டன் டி காக் பவுண்டரிகளாக விளாசி, ஜிம்பாப்வே பவுலர்களை திணறடித்தார். மறுமுனையில் இணைந்திருந்த பவுமாவுக்கு வாய்ப்பே கிடைக்காத அளவுக்கு குயின்டன் டி காக் ருத்ரதாண்டவம் ஆடினார்.

    3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. ஆடுகளம் கடுமையாக வழுக்கியதால் பந்துவீச முடியவில்லை. ஒரு பந்துவீச்சாளர் வழுக்கி விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    அப்போது குயின்டன் டி காக், 18 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 47 ரன்கள் சேர்த்திருந்தார். வெற்றி பெற 24 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இன்னும் ஒரு ஓவர் வீசப்பட்டிருந்தால் தென் ஆப்பிரிக்காவை குயின்டன் வெற்றி பெற செய்திருப்பார். ஆனால் மழை நீடித்ததால் ஆடுகளம் ஈரப்பதம் மேலும் அதிகமாகி பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 

    வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தென்ஆப்பிரிக்காவின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். #DaleSteyn
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் டேல் ஸ்டெயின். கடந்த 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஓய்வில் இருந்தார்.

    இந்த வருடம் தொடக்கத்தில் இந்தியாவிற்கு எதிரான தொடரில் களம் இறங்கினார். ஆனால் காலில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. சமீபத்தில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடும்போதும் கூட காயத்தில் அவதிப்பட்டார்.



    இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா ஜிம்பாப்வேயிற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டேல் ஸ்டெயின் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் சுமார் இரண்டு வருடத்திற்குப் பிறகு ஒருநாள் அணியில் விளையாடுகிறார்.
    ×