search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டார்ஜிலிங்"

    டார்ஜிலிங்கில் சினிமா படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் காலா படத்திற்கு பின்னர், பிரபல டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை.

    இந்த படத்திற்கான படப்பிடிப்பு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்று இருந்தார். அவருடன் படப்பிடிப்பு குழுவினரும் சென்று இருந்தனர்.

    அங்கு சினிமா படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அவர் நேற்று இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

    சினிமா படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பியுள்ள ரஜினிகாந்த், வரும் நாட்களில் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்து வரும் நிலையில், அங்கு ரஜினி தங்கிய அறைக்கு ரஜினி பெயர் சூட்டப்பட்டது. #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங் மற்றும் அதை சுற்றி உள்ள மலை பிரதேசங்களில் நடந்து வருகிறது.

    30 நாட்கள் இந்த படத்துக்காக தனது தேதிகளை கொடுத்து இருக்கிறார் ரஜினி. இந்த படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் கடந்த 10 நாட்களாக குர்சியாங்கில் உள்ள அலிதா என்ற தனியார் விடுதியில் தங்கி இருக்கிறார். இந்த விடுதியில் உள்ள டைரக்டர்ஸ் பங்களா என்னும் இல்லத்தில் தங்கினார்.

    ரஜினி தங்கியதால் இந்த விடுதி பிரபலமாக மாறிவிட்டது. அவர் தங்கியதை நினைவு கூறும் வகையில் அந்த இல்லத்தின் பெயரையே ரஜினிகாந்த் வில்லா #3 என்று மாற்றி இருக்கிறார் விடுதியின் அதிபர்.



    இது குறித்து விடுதியின் இயக்குனர் மேகுல் பரேக் கூறும்போது ‘சூப்பர் ஸ்டார் எங்கள் விடுதியில் தங்கியது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம். அவரது நினைவாக ஒரு மரம் நட்டு, அதற்கு புதிதாக வண்ணம் பூச உள்ளோம். இனி அவர் தங்கிய அந்த விடுதி இல்லம் ரஜினிகாந்த் பெயரிலேயே அழைக்கப்படும்’ என்று கூறி இருக்கிறார்.

    ரஜினி தங்கி இருந்த நாட்களில் பருகிய தேநீருக்கு தலைவா ஸ்பெ‌ஷல் என்று பெயரிட்டு இருக்கிறார்கள். அந்த தேநீர், விடுதியின் வரவேற்பறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு டிரேயில் வைக்கப்பட்டுள்ளது. #Rajinikanth #RajinikanthVilla#3
    ×