search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயின்"

    • நாமக்கல்லில், சேலம் ரோடு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில், சேலம் ரோடு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.

    இதையடுத்து அந்த பெண் கூச்சலிட்டார். இதை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்தனர். உடனே மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து அந்த பெண் நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தார். அவர் சொன்ன அடையா ளங்களை வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிய 2 பெண்களிடம் செயின் பறிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற சம்பவம் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே வழிப்பறிக் கொள்ளையர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • நாமக்கல் போதுப்பட்டி லட்சுமி நகரில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றனர்.
    • வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துக் சென்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் போதுப்பட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). இவர் பெங்களூரில் ரிக் வண்டியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நவீனா (26). இவர் தனது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், நவீனா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றனர். அதேபோல் போதுப்பட்டி சரவணன் நகரை சேர்ந்தவர் அருண்குமார். இவர் முட்டை ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (32). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துக் சென்றனர்.

    கண்காணிப்பு கேமரா

    இந்த தொடர் திருட்டு குறித்து நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், எஸ்.ஐ.க்கள் முருகன், சங்கீதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், அதில் பதிவாகியுள்ள உருவங்களை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பழைய கொள்ளையர்களின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஓரீரு நாளில் கொள்ளை யர்கள் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை அறுத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை

    கன்னியாகுமரி:

    ஆண்டார்குளத்தை சேர்ந்த சுந்தர் சிங் என்பவரது மனைவி ஜோதி ரோஸ்லின் (வயது 53). இவர் ஆண்டார்குளத்தில் இருந்து சாந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் இரவு 8 மணி அளவில் ஆண்டார்குளம் செல்வ தற்காக சாந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கண் இமைக்கும் நேரத்தில் ஜோதி ரோஸ்லின் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை அறுத்தனர்.

    உடனடியாக ஜோதி ரோஸ்லின் கூச்சலிடவே பக்கத்தில் இருந்த நபர்கள் வருவதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி மறைந்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து ஜோதி ரோஸ்லின் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரினை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 4-வது வார்டு எல்லப்பா தெரு பகுதியில் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பட்ட பகலில் பெண்ணிடம் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 4-வது வார்டு எல்லப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் அம்பேத்கர். இவரது மனைவி வளர்மதி (வயது 54). இவர் சேலை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று பகல் நேரத்தில் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், வளர்மதியிடம் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் வழியை கேட்டு சென்றார். பின்னர் அந்த நபர் மீண்டும் திரும்பி வந்தார். அப்போது வளர்மதி செல்போன் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.

    இதையடுத்து அந்த நபர், வளர்மதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ராசி புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பட்ட பகலில் பெண்ணிடம் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சங்கிலியை பறித்த.உடன் பெண் கூச்சல் போட்டதால் செயினை பறித்த மர்ம நபர் தப்பி ஓடி விட்டார்.
    • போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே அஞ்சாலியை சேர்ந்தவர் சுஜின்குமார். இவரது மனைவி ராதிகா (வயது 31). கோணங்காட்டில் ஆலய திருவிழா நடந்து வருகிறது. ராதிகா ஆலய விழாவிற்கு சென்றார். ஆலய வழிபாடு முடிந்து இரவு அவர் வீடு திரும்பினார்.

    ராதிகா வீட்டு முன் வரும்போது மர்ம நபர் ஒருவர் ராதிகாவின் கழுத்தில் கிடந்த 13 பவுன் தாலி சங்கிலியை பறித்தான்.உடனே ராதிகா கூச்சல் போட்டார். இதனால் மர்ம நபர் தப்பி ஓடி விட்டான். இது குறித்து ராதிகா குளச்சல் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பறிக்கப்பட்ட செயின் வீட்டின் அருகே கிடந்தது. இதனை போலீசார் கண்டு பிடித்து மீட்டனர். போலீஸ் வருவதை அறிந்த மர்ம நபர் பயந்து செயினை வீசிவிட்டு சென்றாரா? அல்லது ராதிகாவிடமிருந்து செயினை பறிக்கும்போது அவர் சத்தமிட்டதால் மர்ம நபர் தப்பும்போது தவறி கீழே விழுந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கோவிலில் பொங்கல் வைத்து அன்னதானம் செய்வ தற்காக வந்துள்ளதாகவும், அதற்காக வாழை இலை தேவைப்படுவதாகவும் கூறினார்.
    • இதையடுத்து மூதாட்டி பாப்பாயி, தண்ணீர் மற்றும் வாழை இலை எடுத்து வந்து கொடுத்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி போலீஸ் நிலை யத்திற்கு உட்பட்ட ராசாம்பாளையம் சுங்க சாவடி அருகில் உள்ள புலவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி.இவரது மனைவி பாப்பாயி (வயது 65). ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டார்.இவரது மகன் ரவி நாமக்கல்லில் வசித்து வருவதால் பாப்பாயி மட்டும் புலவர்பாளையம் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று பாப்பாயி வீட்டிற்கு காரில் வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், வீட்டின் அருகே காரை நிறுத்தி விட்டு அவரிடம் தண்ணீர் கொடுக்கும்படி கேட்டுள்ளார். மேலும் தான், அருகில் உள்ள கோவிலில் பொங்கல் வைத்து அன்னதானம் செய்வ தற்காக வந்துள்ளதாகவும், அதற்காக வாழை இலை தேவைப்படுவதாகவும் கூறினார்.

    இதையடுத்து மூதாட்டி பாப்பாயி, தண்ணீர் மற்றும் வாழை இலை எடுத்து வந்து கொடுத்தார். இதனை தொடர்ந்து மூதாட்டியின் வீட்டில் உள்ளவர்கள் நலமாக இருக்க வீட்டில் மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு மூதாட்டி மறுப்பு தெரிவிக்கவே கட்டாயப்படுத்தி அந்த பெண் பூஜை நடத்தினார்.

    அப்போது வீட்டில் உள்ள தங்க நகைகளை பூஜையில் வைக்கவேண்டும் என கூறியதை அடுத்து மூதாட்டி தனது 4 பவுன் தங்க சங்கிலியை பூஜையில் வைத்துள்ளார். பூஜை முடிந்ததும் பூஜையில் வைத்த எலுமிச்சம்பழங்களை வீட்டின் 4 மூலைகளிலும் போட்டுவிட்டு வருமாறு பாப்பாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து பாப்பாயி எலுமிச்சம் பழத்தை வீட்டின் 4 மூலைகளிலும் போடுவதற்காக வெளியே சென்றார். இதை பயன்படுத்தி பூைஜயில் வைத்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு அந்த பெண் காரில் ஏறி தப்பி சென்றார். இதனை பார்த்த பாப்பாயி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துள்ளார். அதற்குள் அந்த மர்ம பெண் காரில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் பாப்பாயி புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் மூதாட்டியிடம் மாந்திரீக பூஜை செய்வதாக கூறி நூதன முறையில் 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மூதாட்டியிடம் இருந்து நூதன முறையில் தங்க நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×