search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலையில்"

    • ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து.
    • நள்ளிரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து. நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு நகரில் பகுதியில் சுமார் 30 நிமிடம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நகரின் முக்கியப் பகுதிகளான பிரப் ரோடு, ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, காளைமாடு சிலை, முனிசிபல் காலனி, வீரப்பன் சத்திரம், குமலன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மாநகரில் தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த குழிகளில் மழை நீர் தேங்கி நின்றது.இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஈரோடு வீரப்பன் சத்திரம், ராஜாஜி வீதியில் பெய்த மழை காரணமாக மழை நீர், கழிவு நீருடன் சேர்ந்து தெருக்களில் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்த பகுதியில் உள்ள சாக்கடைகளை தூர் வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதேபோல, ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளான திண்டல், நசியனூர், வாய்க்கால்மேடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, பவானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    தொடர்ந்து இன்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு –-17, பெருந்துறை – 29, மொடக்குறிச்சி –-20, பவானி –-6, கவுந்தப்பாடி – 3.4, மாவட்டத்தின் மொத்த மழையளவு 75.4 மி.மீ.

    சேலம் மத்திய ஜெயில் சார்பாக ஏற்காடு சாலையில் பெட்ரோல் பங்கை கைதிகள் நடத்துகின்றனர்.

    சேலம்:

    சேலம் மத்திய ெஜயில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தண்டனை கைதிகள் உள்பட 812 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த ஜெயில் வளாகத்தில் கட்டில், சேர் தயாரிக்கும் பட்டறை, பேக்கரி கடை செயல்படுகிறது. பெருமாள் மலை அடிவாரம் அருகே விவசாய பணிகளையும் கைதிகள் மேற்கொள்கின்றனர்.

    பெட்ரோல் பங்க் கைதிகளுக்கு மேலும் வேலை வாய்ப்பை ஏற்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து ஏற்காடு பிரதான சாலை நீதிமன்றம் எதிரே ஜெயில் நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இப் பணியை 100 நாளில் முடித்து, வருகிற நவம்பர் மாதம் முதல் பங்க் செயல்படும். இதனால் ஜெயில் கைதிகள் 30 பேருக்கு வேலை கிடைக்கும் என ஜெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் கூறுகையில், சென்னை, வேலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டையில் கைதிகளால் பெட்ரோல் பங்க் நடத்தப்படுகிறது. 2-ம் கட்டமாக சேலம் உள்பட சில இடங்களில் பங்க் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகள் விரைவில் முடிந்து விடும் என்றார்.

    ×