search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்க்"

    சேலம் மத்திய ஜெயில் சார்பாக ஏற்காடு சாலையில் பெட்ரோல் பங்கை கைதிகள் நடத்துகின்றனர்.

    சேலம்:

    சேலம் மத்திய ெஜயில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தண்டனை கைதிகள் உள்பட 812 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த ஜெயில் வளாகத்தில் கட்டில், சேர் தயாரிக்கும் பட்டறை, பேக்கரி கடை செயல்படுகிறது. பெருமாள் மலை அடிவாரம் அருகே விவசாய பணிகளையும் கைதிகள் மேற்கொள்கின்றனர்.

    பெட்ரோல் பங்க் கைதிகளுக்கு மேலும் வேலை வாய்ப்பை ஏற்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து ஏற்காடு பிரதான சாலை நீதிமன்றம் எதிரே ஜெயில் நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இப் பணியை 100 நாளில் முடித்து, வருகிற நவம்பர் மாதம் முதல் பங்க் செயல்படும். இதனால் ஜெயில் கைதிகள் 30 பேருக்கு வேலை கிடைக்கும் என ஜெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் கூறுகையில், சென்னை, வேலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டையில் கைதிகளால் பெட்ரோல் பங்க் நடத்தப்படுகிறது. 2-ம் கட்டமாக சேலம் உள்பட சில இடங்களில் பங்க் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகள் விரைவில் முடிந்து விடும் என்றார்.

    ×