search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy rainfall"

    • நேற்று காலை முதல் அதிக வெப்பம் காணப்பட்ட நிலையில் மாலை மழை பெய்தது.
    • குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருவாரூர்:

    தமிழகத்தில் திருவாரூர் கோயமுத்தூர் நீலகிரி தஞ்சாவூர் மயிலாடுதுறை புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக திருவாரூரில் கடுமையான வெப்பம் நிலவி வந்து நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.

    மேலும் திருவாரூரில் நேற்று காலை முதல் அதிக வெப்பம் காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து குளிர் காற்று வீசத் தொடங்கியது அதனைத் தொடர்ந்து திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வண்டாம்பாளை கொடிக்கால்பாளையம் காட்டூர் பவித்ரமாணிக்கம், சேந்தமங்கலம் விளமல், நன்னிலம் கங்களாஞ்சேரி ஆண்டிப்பந்தல் ஸ்ரீவாஞ்சியம், மாப்பி ள்ளைக்குப்பம் போன்ற பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்தி ற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் பயிர்கள் கருகி வருவதாக வேதனை அடைந்தனர்.

    இந்த நிலையில் தற்போது பெய்து வரும் இந்த கனமழை நெற்பயிர்களுக்கு ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும் குளிச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துளள்ளனர்.

    • கனமழை கடந்த சில நாட்களாக நின்று விட்டதால் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
    • கடலுக்கு செல்லாததால் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    விழுப்புரம்:

    மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்து வந்தது. இந்த கனமழையால் ஒரு வாரத்திற்கு மேலாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். இதுபோல் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவில் பாதிக்க ப்பட்டது. இப்பகுதியில் பெய்த கனமழை கடந்த சில நாட்களாக நின்று விட்டதால் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

    இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று காலை முதல் பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் அலைகளில் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இப்பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதனால் சிறிய வகை மீன்களின் விலையும் அதிகரித்து உள்ளது என்று பொதுமக்கள் கூறுகி ன்றனர்.

    • ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து.
    • நள்ளிரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து. நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு நகரில் பகுதியில் சுமார் 30 நிமிடம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நகரின் முக்கியப் பகுதிகளான பிரப் ரோடு, ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, காளைமாடு சிலை, முனிசிபல் காலனி, வீரப்பன் சத்திரம், குமலன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மாநகரில் தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த குழிகளில் மழை நீர் தேங்கி நின்றது.இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஈரோடு வீரப்பன் சத்திரம், ராஜாஜி வீதியில் பெய்த மழை காரணமாக மழை நீர், கழிவு நீருடன் சேர்ந்து தெருக்களில் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்த பகுதியில் உள்ள சாக்கடைகளை தூர் வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதேபோல, ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளான திண்டல், நசியனூர், வாய்க்கால்மேடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, பவானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    தொடர்ந்து இன்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு –-17, பெருந்துறை – 29, மொடக்குறிச்சி –-20, பவானி –-6, கவுந்தப்பாடி – 3.4, மாவட்டத்தின் மொத்த மழையளவு 75.4 மி.மீ.

    • அடுத்த 24 மணி நேரத்தில் அஜ்மீர், பரத்பூர், ஜெய்ப்பூர், கோட்டா மற்றும் உதய்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்.
    • அஜ்மீரில் உள்ள தொலைதூர பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிப்பு.

    ஜெய்ப்பூர்:

    கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானின் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த நிலையதில், கடந்த 24 மணி நேரத்தில் நாகௌர் மாவட்டத்தில் உள்ள மக்ரானா பகுதியில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து ரத்தன்கர் (சுரு) 8 செ.மீ மழையும், ஹனுமன்கரில் சங்கரியா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.

    பனேரா (பில்வாரா), கெர்வாடா (உதைபூர்), பதம்பூர், சதுல்ஷாஹர் (இரண்டும் கங்காநகரில்), மற்றும் நவா (நாகூர்) தலா 6 செ.மீ., நரைனா (ஜெய்ப்பூர்), பசேரி (தோல்பூர்), சஜ்ஜன்கர் (பன்ஸ்வாரா), தோல்பூரில் 5 செ.மீ., சோட்டிசாத்ரி (பிரதாப்கர்), அக்லேரா, அஸ்னாவர் (இரண்டும் ஜாலவாரில்), கர்ஹி (பன்ஸ்வாரா), துங்லா (சித்தோர்கர்), மற்றும் பாரி (தோல்பூர்) ஆகியவை பதிவாகியுள்ளன. 4 செ.மீ மற்றும் பல இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் 4 செ.மீட்டருக்கும் குறைவான மழை பெய்துள்ளது.

    மறுபுறம், ஸ்ரீகங்காநகரில் ஒரு நாள் முன்பு பெய்த கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தேங்கிய பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு குழாய்கள் மற்றும் பிற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    சுகாதியா மார்க், அசோக் நகர், மீரா சௌக், சுகாடியா சர்க்கிள், பூரணி அபாடி போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    அடுத்த 24 மணி நேரத்தில் அஜ்மீர், பரத்பூர், ஜெய்ப்பூர், கோட்டா மற்றும் உதய்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், அஜ்மீரில் உள்ள தொலைத்தூர பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • தெலுங்கானாவில் உள்ள 14 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.

    தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் பெண்ணும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.

    தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கொமரம் பீம் ஆசிபாபாத், மஞ்சேரியல், நிர்மல், நிஜாமாபாத், முழுகு, பத்ராத்ரி கொத்தகுடெம், மஹர்பூபாபாத், வாரங்கள் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    இந்நிலையில் மழை காரணமாக ஐதராபாத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தெற்கு ஒடிசா- வட ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அப்பால் வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள சூறாவளி சுழற்சியின் காரணமாக சராசரி கடல் மட்டத்தில் இருந்து 7.6 கி.மீ வரை நீண்டு தென்மேற்கு நோக்கி நகர்கிறது.

    மேலும், அண்டை மாநிலமான கர்நாடகாவின் 13 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கபுதார் மார்க்கெட் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கிய 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது  பலத்த காற்று வீசியதால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    இடியுடன் கூடிய மழையால் டெல்லியின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கார் மீது மரம் விழுந்ததில், அதில் சிக்கிய குழந்தை உட்பட 3 பேர் கொண்ட குடும்பம் மீட்கப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. கபுதார் மார்க்கெட் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    வடக்கு டெல்லியின் பல பகுதிகளில் 40 மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  மேலும் பலத்த காற்று காரணமாக டெல்லி ஜூம்மா மசூதியில் மாட பகுதி உடைந்து விழுந்தது. இதில் மூன்று  பேர் காயம் அடைந்ததாக டெல்லி இமாம் சையது அகமது புகாரி தெரிவித்துள்ளார்.  

    கனமழையால் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.


    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த பகுதி வலுவடையாமல் அதே நிலையில் நீடித்து வருவதால் வட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #IMD
    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டு இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த காற்றழுத்த பகுதி மேலும் வலுவடையாமல் அதே நிலையில் நீடித்து வருகிறது.

    இது மேலும் நிலப்பகுதியில் நிலவி வருவதால் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்கிறது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய கன மழை பெய்தது.

    வட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில் உருவான வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை மற்றும் புதுச்சேரிக்கு அருகில் நிலவி வருகிறது.

    இது நிலப்பகுதியில் நிலவுவதால் தொடர்ந்து மழை பெய்யக்கூடும். காற்று அதிகம் இல்லாமல் மழை நின்று பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.



    மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு மேல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி ஒன்றும் உள்ளது. இதன் காரணமாகவும் வட மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்.

    வட கடலோர பகுதிகளில் அநேக இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மழை விட்டு விட்டு பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.

    இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த மழை இன்றும் நீடித்து வருகிறது. சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெளியேற முடியாமல் வெள்ளம் போல் காட்சியளிக்கின்றன. காற்று இல்லாமல் மழை நின்று பெய்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

    ஒரே நேரத்தில் கன மழை பெய்து அந்த தண்ணீர் கடலுக்குள் வீணாக சேருவதை காட்டிலும் தற்போது பெய்து வரும் மழை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் 10 செ.மீ., சென்னை, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் 9 செ.மீ., தாம்பரம், திருத்தணி தலா 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. #Rain #IMD

    நெல்லை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார். #Rain #MeteorologicalDepartment
    சென்னை:

    தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை போதிய அளவுக்கு பெய்யவில்லை. இயல்பான அளவுக்கு சற்று குறைவாகவே பெய்துள்ளது. அதாவது 30 செ.மீ.க்கு பதில் 26 செ.மீ. மழைதான் பெய்துள்ளது.

    தேனி மாவட்டத்திலும், நெல்லை மாவட்டத்திலும் வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்துள்ளது. தேனி மாவட்டத்தில் இயல்பாக பெய்யவேண்டிய மழை 14 செ.மீ., ஆனால் 41 செ.மீ. மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 13 செ.மீ., ஆனால் 31 செ.மீ. மழை பெய்துள்ளது. 20 மாவட்டங்களில் குறைவாக மழை பெய்துள்ளது. 9 மாவட்டங்களில் இயல்பான அளவுக்கு பெய்துள்ளது.

    இந்த நிலையில் சென்னை வானிலை மைய அதிகாரி கூறுகையில், “வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். ஆனால் நெல்லை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்” என்றார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    கோபிசெட்டிபாளையம் 8 செ.மீ., சத்திரப்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்) 6 செ.மீ., உளுந்தூர்பேட்டை, தாளவாடி தலா 5 செ.மீ., அரண்மனை புதூர், ஆயிக்குடி, தாராபுரம், பொள்ளாச்சி, போடிநாயக்கனூர், காங்கேயம் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 35 இடங்களில் குறைந்த அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.  #Rain #MeteorologicalDepartment
    இமாசல பிரதேசத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 70-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கித்தவித்து வருகின்றனர். #HimachalRains #HeavyRainfall
    புதுடெல்லி:

    இமாசல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை மற்றும் வெள்ளத்தால் குலு மற்றும் காங்ரா உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    பீஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன. காங்ரா மாவட்டத்தின் லஸ்க்வாரா கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். குலு மாவட்டத்தின் பஜோரா கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியானார்.



    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. மாநிலத்தின் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    மழை மட்டுமல்லாது மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவும் சேர்ந்து மக்களை பாடாய் படுத்தி வருகிறது. மழை மற்றும் வெள்ளத்தால் மணாலி சுற்றுலாத்தலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இங்கு சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த பஸ் ஒன்று, நிலச்சரிவு காரணமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த பஸ் பீஸ் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தின் போது பஸ்சில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    இந்தநிலையில் தமிழகத்தின் ஓசூர், திருவண்ணாமலை மற்றும் திருச்சி பகுதிகளில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து கார் மற்றும் பஸ்களில் குலுமணாலிக்கு சுற்றுலா சென்றனர்.

    அவர்கள் தற்போது வெள்ளத்தின் பிடியில் சிக்கி தமிழகத்துக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் ஊரில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    வெள்ளநீர் வடிந்து நிலைமை சீராவதற்கு இன்னும் 4 நாட்கள் ஆகும் எனவும், அதுவரை விடுதிகளிலேயே தங்கியிருக்க நேரிடும் என்றும் அவர்கள் கூறியதாக தெரிகிறது. அவர்களுக்கு தேவையான உணவு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை இமாசல பிரதேச அரசு செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் 170 மி.மீ. மழை பதிவானது. சுற்றுலா பகுதியான மணாலியில் மட்டும் 121 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் பஞ்சாப், சத்தீஷ்கார், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களிலும் பலத்த மழை கொட்டியது. இதனால் அந்த மாநிலங்களும் பாதிக்கப்பட்டன.  #HimachalRains #HeavyRainfall 
    கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்தனர். #HeavyRain
    அரக்கோணம்:

    கேரளா மாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்பி வைக்க டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தை கேரளா அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து வேலூர் மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களை மீட்பு பணிக்கு செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர்.



    அதன்படி 4 குழுவாக மொத்தம் 100 வீரர்கள் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதளத்தில் இருந்து தனி விமானத்தில் கேரளாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். மேலும் சாலை வழியாக 60 வீரர்கள் கேரளா புறப்பட்டனர்.

    மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், உயிர்காக்கும் கருவிகள், முதலுதவி பொருட்கள், மரம் அறுக்கும் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், நீளமான கயிறுகள் உள்ளிட்ட மீட்பு பொருட்களை உடன் எடுத்து சென்றனர். மறு அறிவிப்பு வரும் வரை வீரர்கள் கேரளாவில் தங்கி மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
    நெல்லை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. #HeavyRain
    சென்னை:

    தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தான் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்யும். மற்ற மாவட்டங்களில் அதிக அளவில் மழையை எதிர்பார்க்க முடியாது.

    இந்நிலையில் தென்மேற்கு பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

    தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    வால்பாறை 17 செ.மீ., சின்னகல்லார் 12 செ.மீ., பெரியாறு 11 செ.மீ., தேவலா 10 செ.மீ., பொள்ளாச்சி 7 செ.மீ., குந்தாபாலம், குழித்துறை தலா 4 செ.மீ, போடிநாயக்கனூர், உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், திருக்கோவிலூர் தலா 3 செ.மீ., மயிலம், ஊட்டி, பூதப்பாண்டி, தக்கலை, கூடலூர், பாபநாசம், செங்கோட்டை, ராதாபுரம், இரணியல், பண்ருட்டி, வந்தவாசி தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

    மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. 
    தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய வானிலை மையம், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. #TNRain #Rain
    சென்னை:

    தமிழ்நாட்டில் சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது. சென்னையில் வெயில் சுட்டெரித்தாலும் மாலையில் கடல் காற்று வீசச் தொடங்கியதும் வெப்பம் தணிகிறது. மற்ற மாவட்டங்களில் அவ்வப்போது இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளத்தில் 12 செ.மீ. மழை பதிவானது.

    அதே போல் தமிழ்நாட்டில் அதிபட்சமாக திருத்தணியில் 107.6 டிகிரி வெயில் கொளுத்தியது. வெப்பம் கடுமையாக நிலவியது. மக்கள் சாலையில் நடமாட முடியாமல் அவதிப்பட்டார்கள்.

    இதற்கிடையே வடக்கு மற்றும் தெற்கு திசையில் பரவியுள்ள மேக கூட்டங்களாலும், வடக்கு உள் கர்நாடகத்தில் இருந்து தெற்கு தமிழ்நாடு வரை மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கோடை மழை நீடிக்கும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழகத்தில் பல இடங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் கோடை வெப்பத்தில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

    வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இப்போதைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை. மழைக்கு இன்னும் காத்து இருக்க வேண்டும்

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. மார்ச் 1-ந்தேதியில் இருந்து இயல்பான அளவை தாண்டி மழை பெய்துள்ளது.

    இந்த கால கட்டத்தில் சராசரியாக 79.5 மி.மீ. மழை தான் கிடைக்கும். ஆனால் இந்த முறை 86 மி.மீ. மழை பெய்து கூடுதலாக 8 சதவீத மழை கிடைத்துள்ளது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதிக்கு முன்பே தொடங்கும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக புனே வானிலை மையம் ஆய்வு செய்து தெரிவித்ததும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் இருந்து தென் தமிழகம் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காணப்படுகிறது.

    இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. #TNRain #Rain
    ×