search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூரில் பல்வேறு இடங்களில் கனமழை
    X

    சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    திருவாரூரில் பல்வேறு இடங்களில் கனமழை

    • நேற்று காலை முதல் அதிக வெப்பம் காணப்பட்ட நிலையில் மாலை மழை பெய்தது.
    • குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருவாரூர்:

    தமிழகத்தில் திருவாரூர் கோயமுத்தூர் நீலகிரி தஞ்சாவூர் மயிலாடுதுறை புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக திருவாரூரில் கடுமையான வெப்பம் நிலவி வந்து நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.

    மேலும் திருவாரூரில் நேற்று காலை முதல் அதிக வெப்பம் காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து குளிர் காற்று வீசத் தொடங்கியது அதனைத் தொடர்ந்து திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வண்டாம்பாளை கொடிக்கால்பாளையம் காட்டூர் பவித்ரமாணிக்கம், சேந்தமங்கலம் விளமல், நன்னிலம் கங்களாஞ்சேரி ஆண்டிப்பந்தல் ஸ்ரீவாஞ்சியம், மாப்பி ள்ளைக்குப்பம் போன்ற பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்தி ற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் பயிர்கள் கருகி வருவதாக வேதனை அடைந்தனர்.

    இந்த நிலையில் தற்போது பெய்து வரும் இந்த கனமழை நெற்பயிர்களுக்கு ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும் குளிச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துளள்ளனர்.

    Next Story
    ×