என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deep depression"

    • புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைப்பு.
    • 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைகிறது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தகவலகள் தெரிவித்துள்ளன. இதையொட்டி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


    வரும் நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். இது வலுப்பெற்று டிசம்பர் 8ம் தேதி புயலாக மாற உள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது. இதனால் 8 மற்றும் 9 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

    நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஏற்கன கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • இரண்டு நாட்களில் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கள் என வானிலை மையம் தகவல்.

    வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை- தமிழக கடலோர பகுதிகளை இரண்டு நாட்களில் நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் மழை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    • வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்தது.
    • தற்காலிக புயலாக மாறும் எனத் தெரிவித்த நிலையில் புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்தது.

    கடந்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வரும் 30ம் தேதி காரைக்கால்- மாமல்லபுரம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

    தற்காலிக புயலாக மாறும் எனத் தெரிவித்த நிலையில் புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
    • ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டுள்ளது.

    அதன்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் வழியாக மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

    அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    • காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாளை மறுநாள் மழை தீவிரமாகும்.
    • தமிழக கடலோரத்தை நோக்கி வேகமாக நகர்வதாக வானிலை ஆய்வாளர்கள் தகவல்.

    தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இதன் தாக்கத்தால் அங்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

    இது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய உள்ளது.

    நாளை அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வடமேற்கில் நகரும். எதிர்பார்த்ததை போல் அது தமிழக கடலோரத்தை நோக்கி வேகமாக நகர்வதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

    11-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

    இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் மழை தீவிரமாகும்.

    10-ந்தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், வருகிற 11-ந்தேதி மேற்கண்ட மாவட்டங்கள் (ராமநாதபுரம் நீங்கலாக) மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வருகிற 12-ந்தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    வருகிற 13-ந்தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழக மீனவர்கள் வருகிற 11-ந்தேதி வரை ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    • பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தன.

    தஞ்சாவூர்:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதற்கு முன்னர் கனமழை கொட்டியது. அதன்பிறகு ஒரு வாரமாக மழை இன்றி காணப்பட்டது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

    நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இரவிலும் இதே நிலை நீடித்தது. ஆனால் இன்று அதிகாலையில் இருந்து கனமழையாக மாறி கொட்டியது. நள்ளிரவு 1 மணி முதல் காலை 7 மணி வரை கனமழையாக வெளுத்து வாங்கியது.

    தஞ்சையில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    இதேபோல் வல்லம், பூதலூர், ஒரத்தநாடு, நெய்வாசல்தென்பாதி, கும்பகோணம், திருவிடைமருதூர், கீழணை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    தொடர்ந்து பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தன. மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 73.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஒரே நாளில் 795.80 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.

    ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கி பாதிப்படைந்திருந்தன.

    அதன் பின்னர் மழை ஓய்ந்ததால் வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருவதால் பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தற்பொழுது வரை 24 மணி நேரத்தை கடந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக திருவாரூர், கமலாபுரம், வடபாதிமங்கலம், மாங்குடி, நன்னிலம், குடவாசல், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

    இந்த கனமழையின் காரணமாக விக்கிரபாண்டியம். புழுதிகுடி. கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, பொறையாறு, திருக்கடையூர், செம்பனார்கோவில், சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது.

    நேற்று இரவு விடிய,விடிய பரவலாக மழை பெய்த நிலையில் அதிகாலை முதல் தொடர்ந்து கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    கடலோர பகுதி பழையாறு, பூம்புகார், திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி பழையாறு துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க செல்லும் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை மீன் பிடித்துறை முகம் அருகே பக்கிங்காம் கால்வாய் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதேபோல் திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி பகுதி மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 10,000 க்கு மேற்பட்ட மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, சாட்டியக்குடி, திருக்குவளை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், காமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    நாகை நகராட்சிக்குட்பட்ட வடக்கு பால் பண்ணை சேரி வாட்டர் டேங்க் சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் வீடுகளுக்குள் மழை நீர் புகும் அபாயம் இருப்பதுடன், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    மின்வளத்துறையினர் எச்சரிக்கை காரணமாக வேதாரண்யம் தாலுகாவில் 5 ஆயிரம் மீனவர்கள் 2-ம் நாளாகமீன்பிடிக்க செல்லாமல் ஆயிரத்துக்கு மேற்பட்ட பைபர்படகுகளை பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் வேதாரண்யம் தாலுகாவில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    இடைவிடாது பெய்து வரும் கனமழையால் தஞ்சை பெரியகோவில், சிவகங்கைபூங்கா, மனோரா, வேளாங்கண்ணி கடற்கரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை, முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று வழக்கத்தை விட குறைந்தளவே சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டதால் அவைகள் வெறிச்சோடின.

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தை நெருங்கியது.
    • மேலும் நகர்ந்து தற்போது வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கியது.

    சென்னை:

    வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தை நெருங்கியது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலை சென்னைக்கு கிழக்கே 500 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடல் பகுதிக்கு இடையே நிலை கொண்டிருந்தது. அது மேலும் நகர்ந்து தற்போது வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கியது.

    இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வருகிற 26-ந்தேதி காலை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அதிகாலையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும்.

    வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு குளிர் காற்றே அதிக அளவில் வருவதால் தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஆனாலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால் இன்று முதல் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்து வருகிற 26-ந்தேதி டெல்டா மாவட்டங்களுக்கு அருகே கரையை கடந்து தமிழக நிலப்பரப்பு வழியாக அரபிக்கடலுக்கு செல்லும்.

    இதன் காரணமாக வருகிற 26 மற்றும் 27-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 28-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×