search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திர சேகர ராவ்"

    • எப்போதும் தெலுங்கானாவை ஆதரிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
    • ராகுல் காந்தியால் தன்னைப் பற்றியே எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது.

    தெலுங்கானாவில் பா.ஜனதா விஜய சங்கல்ப யாத்திரை நடந்து வருகிறது. இதில் அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டு பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி எப்போதும், தெலுங்கு மொழியை நேசிக்கிறார். தெலுங்கானா வளர்ச்சிக்கு எப்போதும் ஆதரவளித்து வருகிறார். தெலுங்கு, தெலுங்கானா மீது அவருக்கு இருக்கும் பாசம் அது. அவர் எப்போதும் தெலுங்கானாவை ஆதரிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    ராகுல் காந்தியால் தன்னைப் பற்றியே எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. அதனால் காங்கிரஸ் கட்சியின் அனைத்து உத்தரவாதங்களும் நிறைவேற்றப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.-சந்திரசேகர ராவ்( பி.ஆர்.எஸ்) கட்சி கூட்டணி அமையாது. இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் அவர் தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதிகளை அவர் கிண்டல் செய்தார்.

    • சந்திர சேகர ராவ் பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
    • கடந்த ஒரே ஆண்டில் கட்சிக்கு ரூ.193 கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளது.

    சந்திர சேகர ராவ் பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற கட்சியை நடத்தி வருகிறார். இந்த கட்சியின் வரவு மற்றம் செலவு கணக்குகளை அவர் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளார். இதன் மூலம் மாநில கட்சிகளில் சந்திர சேகர ராவ் கட்சி அதிக சொத்துக்களுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த கட்சிக்கு தற்போதைய மதிப்பீட்டின் படி ரூ.512 கோடி அளவுக்கு செரத்துக்கள் இருந்தன. வங்கி கணக்குகளில் மட்டும் ரூ.451 கோடி உள்ளது.

    கடந்த ஒரே ஆண்டில் இந்த கட்சிக்கு ரூ.193 கோடிக்கு வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    ×