search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோமாதா பூஜை"

    • பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும்.
    • பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம்.

    இந்த நாளில் கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும். பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம். பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பார்கள் என்கிறது வேதம். கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. செல்வ வளம் தரும் மகாலட்சுமி அதன் பின்பாகத்தில் வசிக்கிறாள்.

    மாடுகளைப் போற்றி வளர்க்கும் இல்லங்களில், மகாலட்சுமி மகிழ்ந்துறைவாள். அவற்றை கொடுமைப்படுத்தினால், பெரும் பாபத்தை அடைந்து, பிறவிகளில் பெருந்துயரை அனுபவிக்க நேரிடும்.

    பஞ்சகவ்யம் (பால்,தயிர், நெய்,சாணம், கோமூத்திரம்) அபிஷேகத்துக்கு உகந்தது; மருந்தாகவும் செயல்பட்டு பிணியை அகற்றும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் காலடி பட்ட இடம் பரிசுத்தமாகும். மேய்ந்து, வீடு திரும்பும் பசுமாடுகளின் குளம்படி பட்டு தூசி மேலே கிளம்பும் வேளையை, நல்லதொரு வேளையாக `முகூர்த்த சாஸ்திரம்' சொல்கிறது. அதேபோல், நாம் செய்த பாவங்கள் அகல, `கோ' தானம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.

    • பொதுமக்கள் ஒன்று கூடி தலைவாசல் அமைக்கும் பணியை தொடங் கினார்கள்.
    • விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த சின்னவாளவாடி கிராமத்தில் நாககாமாட்சியம்மன் கோவில் உள்ளது.கோவில் வளாகத்தில் விநாயகர், கன்னிமார்கள், பதினெட்டாம்படி கருப்பராயன் ஆகிய கடவுள்கள் என தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் தலைவாசல் அமைக்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில் பொதுமக்கள் ஒன்று கூடி தலைவாசல் அமைக்கும் பணியை தொடங்கினார்கள். பணி நிறைவடைந்த நிலையில் தலைவாசல் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து சின்ன வாளவாடி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உலக நலன் வேண்டியும், விவசாயம் செழித்திடவும், உலக மக்கள் நோய் நொடி இன்றி வாழ்ந்திடவும் 108 கோமாதா பூஜையும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மாடுகளை கொண்டு வந்து பூஜையில் கலந்து கொண்டனர். அக்னி குண்டத்தின் முன்பாக கூடியிருந்த மாடுகளுக்கு தனித்தனியாக மந்திரங்கள் ஓதி பூஜை நடத்தப்பட்டது. இந்த விழாவில் சின்னவாளவாடி, பெரியவாளவாடி, பழையூர் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு சார்பில் மோடியின் பெயரில் ஊர் தலைவர் முருகேசன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • கோமாதா பூஜை தொழிலதிபர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    நவ கைலாய தலமான தென்திருப்பேரை கைலாச நாதர் கோவிலில் பிரதமர் மோடியின் 72- வது பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு சார்பில் மோடியின் பெயரில் ஊர் தலைவர் முருகேசன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    தென்திருப்பேரை சுற்று வட்டார தேவேந்திர குல வேளாளர் ஆன்மீக அறக்கட்டளை துணைத் தலைவர்கள் சவுந்திர ராஜன், இசக்கித் துரை முன்னிலையில் சிறப்பு அர்ச்சனை மற்றும் கோமாதா பூஜை தொழிலதிபர், அரசு ஒப்பந்ததாரர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரிதுரைசாமி, விவசாய அணி மாநில திட்ட பொருப்பாளர் தமிழ் செல்வி, பொருளாளர் மகாதேவன், நிர்வாகி கோமதி ராஜ், மண்டல துணைத் தலைவர் கோவிந்த ராஜன், மாவட்ட துணைத்தலைவர் ரேவதி கண்ணன், மண்டல கூட்டுறவு பிரிவு தலைவர் ஜெயசிங், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கரும்பன், வெங்கடேஸ்வர செல்வராஜ், நல வாரிய மாவட்ட தலைவர் குமார், கலை, கலாச்சார பிரிவு மாவட்ட செயலாளர் முத்துமாரி செல்வி, பேரவை நகர செயலாளர் பெருமாள் என்ற குமார், பிரச்சார பிரிவு ஒன்றிய செயலாளர் முருக பெருமாள், மண்டல மகளிரணி தலைவி காமினி உள்பட பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடு களை கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் மாரி துரைசாமி, நிர்வாகி கோமதி ராஜ் செய்திருந்தனர்.

    • காகன்னை ஈஸ்வரர் கோவிலில் 51- நாள் கோமாதா பூஜை தொடங்கியது
    • உலக நன்மைக்காக நடைபெறுகிறது


    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக 51 நாள் கோமாதா பூஜை நேற்று தொடங்கியது.

    எளம்பலூர் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் உலக மக்கள் நலன் கருதியும், மாதம் முறையாக மழை பொழியவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், தர்ம சிந்தனையுடைய மக்கள் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று, குபேரலட்சுமி கடாக்ஷம் பெற்று வாழ ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து 51 நாட்கள் கோமாதா பூஜை நடைபெற்று வருகிறது.

    இதன்படி இந்தாண்டு கோமாதா பூஜை நேற்று தொடங்கியது. இதையொட்டி பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள அன்னை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபாதணையும், கோமாதா பூஜையும் நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி தலைமை வகித்தார். தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள் ஆகியோர் முன்னின்று பூஜைகளை நடத்தினர். இதில் ராதா மாதாஜி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    ×