search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா பாதிப்பு"

    • ஒரே நாளில் 10பேருக்கு தொற்று ஏற்பட்டது.
    • கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை,

    கோவை

    கோவை மாவட்டத்தில் கடந்த 2020 -ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த மருத்துவ மாணவிக்கு முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா 2 -வது அலையின்போது கோவை மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. அப்போது தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 700-க்குமேல் பதிவானது. அதன்பின் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கையின் காரணமாக நோய்த் தொற்றுப் பரவல் குறைந்தது.

    நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து நோய்த் தொற்று பரவல் குறைந்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்துக்கு வந்தது. தொடர்ந்து, கடந்த 6 மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே இருந்து வந்தது.

    இந்நிலையில், கோவையில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 105 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கொரோனா நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 441 பேர் கொரோனாவில் இருந்து குணம டைந்துள்ளனர்.

    2,617 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந் துள்ளனர். தற்போது 47 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

    • 6 நாட்களுக்குப் பிறகு ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
    • ஈரோடு மாவட்டத்தில் இரண்டு பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக 3-வது அலை ஏற்பட்டு தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியது.

    கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்தது. இருப்பினும், அவ்வப்போது தொற்று ஏற்பட்டு, குணமடைந்தனர். கடந்த ஏப்ரல் 27 ல் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவரும் மே 4-ல் குணமடைந்தார்.

    அதன்பின் தொற்று இல்லாத மாவட்டமானது ஈரோடு.இதன்பிறகு கடந்த, 17-ந் தேதி முதல் அடுத்தடுத்த நாளில் தொற்று ஏற்பட்டு 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இவர்கள் அடுத்தடுத்த நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த ஒருவரும் கடந்த மே மாதம் 30-ந் தேதியுடன் குணமடைந்து வீடு திரும்பினார்.

    இதையடுத்து மீண்டும் ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட 6 நாட்களுக்குப் பிறகு ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தற்போது வரை கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் இரண்டு பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1,05,691 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தினசரி  பாதிப்பு, குணமடைந்தோர், உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

    அதன்படி இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 8,774 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,481 பேர் குணமடைந்துள்ள நிலையில் 621 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் 82,86,058 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,21,94,71,134  டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

    தற்போது 1,05,691 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த எண்ணிக்கை கடந்த 543 நாட்களில் மிகவும் குறைவானதாகும்.

    கேரளாவில் தற்போது வரை 72,288 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக, அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    கேரளா மாநிலத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கேரளாவில் இன்று புதிதாக மேலும் 6,111 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,202 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கேரளாவில் இதுவரை 49,84,328 பேர் குணமடைந்துள்ள நிலையில் 36,847 பேர் உயிரிழந்துள்ளனர். 72,288  பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 7,916 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    மேற்கு வங்காள மாநில தினசரி கொரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 788 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 759 பேர் குணமடைந்த நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் இதுவரை 15,99,879 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,72,711 பேர் குணமடைந்துள்ளனர். 19, 252 பேர் உயிரிழந்துள்ளனர்.
    ×