search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைவரிசை"

    • செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.
    • கோவிலை திறக்க வரும் போது கோவிலின் முன்புறம் உள்ள உண்டியல் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள கரும்பாறை புலியூர்குறிச்சி யில் விநாயகர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்த பிறகு பூசாரி, கோவிலை பூட்டி சென்று உள்ளார்.

    நேற்று மாலை அவர் கோவிலை திறக்க வரும் போது கோவிலின் முன்புறம் உள்ள உண்டியல் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி, கோவில் கமிட்டி தலைவர் வினுக்குமாருக்கு தகவல் கொடுத்தார்.

    அவர் உண்டியல் உடைப்பு குறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் காணிக்கை பெட்டியில் இருந்த ரூ.1500 திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதே நேரம் கோவி லுக்குள் இருந்த நகைகள் அதிர்ஷ்டவசமாக தப்பியது. பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணையில் ஈடு பட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த பள்ளியில் கம்ப்யூட்டர்களுக்கு தனியறை உள்ளது.
    • தலைமை ஆசிரியர் நாகமணி பள்ளி–யை பூட்டிவிட்டு சென்றார்.

    விழுப்புரம் 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கிளிய–னூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கிளியனூர் மற்றும் கிளியனூரை சுற்றி யுள்ள பகுதிகளில் உள்ள ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கம்ப்யூட்டர்களுக்கு தனியறை உள்ளது. நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்தவுடன் மாலையில் தலைமை ஆசிரியர் நாகமணி பள்ளியை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவு சமயம் அரசு பள்ளிக்கு வந்த மர்ம நபர்கள் பள்ளியின் பின்பக்கம் வழியாக பள்ளிக்குள் நுழைந்து கம்ப்யூட்டர் இருக்கும் அறை பூட்டை உடைத்து உள்ளே இருந்த பேட்டரிகளை திருடி சென்றுவிட்டனர்.இன்று காலை வழக்கம்போல் பள்ளியை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கம்ப்யூட்டர் அறை உடைக்கப்பட்டு அதிலிருந்து பேட்டரிகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் நாக மணி கிளியனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்கு பதிவு செய்து அரசு பள்ளியில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • நேற்றும் வழக்கம் போல் மாலை வீட்டிற்கு வந்து செடிகளுக்கு தண்ணீர் பாய்த்து விட்டு கதவை பூட்டிவிட்டு சென்றார்.
    • ட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 2 வெள்ளி குத்து விளக்குகளை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்.இவரது மனைவி ராமச்சந்திராள் (வயது 66).

    இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஸ்ரீதரன் இறந்துவிட்டார். 2மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்கள். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. அவர் பக்கத்தில் உள்ள தெருவில் வசித்து வந்தார். மருமகனும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    இதனால் ராமச்சந்திராள் தினமும் தனது மகள் வீட்டிற்கு தூங்க செல்வது வழக்கம். மாலை நேரத்தில் மட்டும் தனது வீட்டிற்கு வந்து செடிகளுக்கு தண்ணீர் பாய்த்து விட்டு செல்வார். நேற்றும் வழக்கம் போல் மாலை வீட்டிற்கு வந்து செடிகளுக்கு தண்ணீர் பாய்த்து விட்டு கதவை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப் பட்டு இருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ராமச்சந்தி ராளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார்.மேலும் கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரி விக்கப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் விஜயன் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 2 வெள்ளி குத்து விளக்குகளை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். ஒரு குத்துவிளக்கு ஒரு கிலோ எடை கொண்டதாகும். 2 கிலோ எடை கொண்ட வெள்ளி குத்துவிளக்குகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் கொண்டுவரப்பட்டது. வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு ஓட்டம் பிடித்த நாய் வீட்டை சுற்றி சுற்றி வந்தது.

    வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.கேமிரா கடந்த 7-ந் தேதி வரை மட்டுமே செயல்பட்டு உள்ளது. அதன் பிறகு சி.சி.டி.வி. கேமராக்கள் செயல் படாததால் எந்த காட்சிகளும் பதிவாகவில்லை.

    ராமச்சந்திராள் மகள் வீட்டில் தினமும் தங்குவதை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜி.எஸ்.டி. அதிகாரி போல் நடித்து முதியவரிடம் நூதன திருடப்பட்டது.
    • நகை வாங்கி வந்தவரிடம் மர்ம நபர் கைவரிசை காட்டியுள்ளனர்.

    மதுரை

    மதுரை நாராயணபுரம், ஜே.கே. நகரை சேர்ந்தவர் சூரியமூர்த்தி (வயது 68). இவர் இரவு மதுரை மேலமாசி வீதியில் உள்ள நகை கடையில், குடும்பத்தினர் இல்ல திருமண விழாவுக்காக நகைகள் வாங்கினார். அதன் பிறகு வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

    அப்போது அவரை மேல மாசி வீதி, மதனகோபாலசாமி கோவில் எதிரே, மர்ம நபர் ஒருவர் வழிமறித்தார். அவர் நான் ஒரு ஜி.எஸ்.டி அதிகாரி. உங்களின் நகைகளை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    அதனை நம்பிய சூரிய மூர்த்தியும் தான் வாங்கிய நகைகளை அவரிடம் கொடுத்தார். அவற்றை சரிபார்ப்பது போல் நடித்த அந்த நபர், மீண்டும் நகைகளை திருப்பிக் கொடுத்துவிட்டு சென்றார்.

    இதனை தொடர்ந்து சூரியமூர்த்தி வீட்டுக்கு வந்தார். அதன் பிறகு அவர் தான் வாங்கிய நகைகளை சரிபார்த்தார்.அப்போதுதான் ரூ.70 ஆயிரம் மதிப்புடைய 20 கிராம் தங்க நகைகள் இல்லாதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சூரியமூர்த்தி, இது பற்றி மதுரை தெற்கு வாசல் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை ஏமாற்றி எடுத்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • காலை சொக்கலிங்கம் தலக்குளத்தில் உள்ள உறவினர் திருமண வீட்டிற்கு சென்று விட்டார்.
    • வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது தனது தாயார் ராமலட்சுமி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகை அபேஸ் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அஜய்குமார் கணேஷ் அதிர்ச்சியடைந்தார்.

    கன்னியாகுமரி :

    இரணியல் சந்திப்பு அருகே தக்கலை ரோட்டை சேர்ந்தவர் அஜய்குமார் கணேஷ் (வயது 50). இவர் கன்னியாகுமரியில் துணிக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி கோவில்பட்டியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருவதால் 2 குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகிறார். அஜய் குமார் கணேஷ் தனது பெற்றோர் சொக்கலிங்கம் பிள்ளை- ராமலட்சுமி (77) ஆகியோருடன் இரணியலில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

    நேற்று காலை சொக்கலிங்கம் தலக்குளத்தில் உள்ள உறவினர் திருமண வீட்டிற்கு சென்று விட்டார். அஜய்குமார் கணேசும் வெளியே சென்றுவிட்டார். எனவே வீட்டில் ராமலட்சுமி மட்டும் தான் இருந்துள்ளார்.

    வெளியே சென்றிருந்த அஜய்குமார் கணேஷ் சிறிது நேரத்தில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டி இருந்துள்ளது. வீட்டின் பின் பக்கம் சென்று பார்க்கும் போது அங்கு கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது தனது தாயார் ராமலட்சுமி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகை அபேஸ் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அஜய்குமார் கணேஷ் அதிர்ச்சியடைந்தார். மேலும் பீரோவை திறந்து பார்த்தபோது அங்கிருந்த 5 பவுன் எடை கொண்ட நகை, தலா ஒரு பவுன் எடை கொண்ட 5 தங்க வளையல்கள் மற்றும் ஒரு பவுன் எடை கொண்ட கைச்செயின் என மொத்தம் 18 பவுன் தங்க நகைகள்மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து அஜய்குமார் கணேஷ் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதில்கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் என தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சம்பவ இடத்தில் இரணியல் பொறுப்பு இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது யாரோ மர்ம நபர்கள் அஜய்குமார் கணேஷ் மற்றும் சொக்கலிங்க ம்பிள்ளை வீட்டில் இல்லா ததை நோட்டமிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றி ருப்பது தெரிய வந்தது.

    2 பேர் வேகமாக பஸ்சில் ஏறி மேரியின் கைப்பையை கத்தியால் அறுத்து பையில் இருந்த 5 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்தனர்.

    விழுப்புரம்:

    தூத்துக்குடி மாவட்ட த்தை சேர்ந்தவர் மேரி (வயது 30) இவர் சென்னை கே.கே. நகரில் தங்கி அதே பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.நேற்று இரவு மேரி தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்திற்கு தனியார் பஸ்சில் சென்றார். அப்போது திண்டிவனம் அருகே சலவாதி பகுதியில் பஸ் வந்தபோது இரவு சாப்பிடுவதற்காக பஸ்சை சலவாதியில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் பஸ் டிரைவர் நிறுத்தினார்.

    அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி ஓட்டலுக்கு சென்ற போது கடைசியாக மேரி இறங்கினார். திடீரென்று ஒரு காரில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்களில் 2 பேர் வேகமாக பஸ்சில் ஏறி மேரியின் கைப்பையை கத்தியால் அறுத்து பையில் இருந்த 5 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்தனர்.இதைப் பார்த்த மேரி அதிர்ச்சி அைடந்து திருடன் திருடன் என கத்தினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த 2 பேரில் ஒருவன் தப்பி ஓடி விட்டான். மற்றொருவன் மேரியை தாக்கி விட்டு தப்பிஓட முயன்ற போது பொதுமக்கள் அவனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்த திண்டி வனம்போலீஸ் ஏ.எஸ்பி.அபிஷேக்குப்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று அந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டி வனம் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள்மத்திய பிரதே சம்மனவர் தாலுகா கர்வா பகுதியை சேர்ந்த விவேர்கான் (வயது 29) இவனது கூட்டாளி களும் அதே பகுதியை சேர்ந்த வர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலீசார் தப்பியோடிய 4 மற்றும் இவர்கள் வேறுஎங்கேயாவது கொலை, கொள்ளையில் ஈடுபட்டனரா? என்பது குறித்துபோலீசார் கிடுக்கிப்பிடிவிசாரணை செய்துள்ளனர்.

    ×