search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே ஜவுளிக் கடை அதிபர் வீட்டில் 18 பவுன் நகைகள் கொள்ளை - வீடு புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை
    X

    இரணியல் அருகே ஜவுளிக் கடை அதிபர் வீட்டில் 18 பவுன் நகைகள் கொள்ளை - வீடு புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை

    • காலை சொக்கலிங்கம் தலக்குளத்தில் உள்ள உறவினர் திருமண வீட்டிற்கு சென்று விட்டார்.
    • வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது தனது தாயார் ராமலட்சுமி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகை அபேஸ் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அஜய்குமார் கணேஷ் அதிர்ச்சியடைந்தார்.

    கன்னியாகுமரி :

    இரணியல் சந்திப்பு அருகே தக்கலை ரோட்டை சேர்ந்தவர் அஜய்குமார் கணேஷ் (வயது 50). இவர் கன்னியாகுமரியில் துணிக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி கோவில்பட்டியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருவதால் 2 குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகிறார். அஜய் குமார் கணேஷ் தனது பெற்றோர் சொக்கலிங்கம் பிள்ளை- ராமலட்சுமி (77) ஆகியோருடன் இரணியலில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

    நேற்று காலை சொக்கலிங்கம் தலக்குளத்தில் உள்ள உறவினர் திருமண வீட்டிற்கு சென்று விட்டார். அஜய்குமார் கணேசும் வெளியே சென்றுவிட்டார். எனவே வீட்டில் ராமலட்சுமி மட்டும் தான் இருந்துள்ளார்.

    வெளியே சென்றிருந்த அஜய்குமார் கணேஷ் சிறிது நேரத்தில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டி இருந்துள்ளது. வீட்டின் பின் பக்கம் சென்று பார்க்கும் போது அங்கு கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது தனது தாயார் ராமலட்சுமி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகை அபேஸ் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அஜய்குமார் கணேஷ் அதிர்ச்சியடைந்தார். மேலும் பீரோவை திறந்து பார்த்தபோது அங்கிருந்த 5 பவுன் எடை கொண்ட நகை, தலா ஒரு பவுன் எடை கொண்ட 5 தங்க வளையல்கள் மற்றும் ஒரு பவுன் எடை கொண்ட கைச்செயின் என மொத்தம் 18 பவுன் தங்க நகைகள்மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து அஜய்குமார் கணேஷ் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதில்கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் என தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சம்பவ இடத்தில் இரணியல் பொறுப்பு இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது யாரோ மர்ம நபர்கள் அஜய்குமார் கணேஷ் மற்றும் சொக்கலிங்க ம்பிள்ளை வீட்டில் இல்லா ததை நோட்டமிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றி ருப்பது தெரிய வந்தது.

    Next Story
    ×