search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Steal money"

    • மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    • இது குறித்து கடத்தூர் போலீசில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குழி பகுதியை சேர்ந்தவர் யாசிக் (வயது 36). இவர் கோவை பிரிவு ரோட்டில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்து கொண்டு கடையை வீட்டி விட்டு சென்று விட்டார்.

    மறுநாள் காலை பேக்கரி கடையை திறக்க வந்தார். அபபோது கடையின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதை தொடர்ந்து அவர் கடை உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைத்து இருந்து ரூ.45 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    யாரோ மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து யாசிக் கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் கணக்கிடப்படுவது வழக்கம்.
    • கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து கொள்ளையடித்த திருடர்களை தேடி வருகின்றனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த பொகலூர் அருகே சொக்கட்டாம்பள்ளி கிராமத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் கணக்கிடப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி வழக்கம் போல கோவிலில் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டி சென்றார். மறுநாள் மதியம் கோவிலை மீண்டும் திறக்க பூசாரி வந்தார்.

    அப்போது உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் இருந்த உண்டியல் திருட்டு போயிருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவிலுக்கு வெளியே வந்து பார்த்தார்.

    அங்கு உடைக்கப்பட்ட நிலையில் உண்டியல் கிடந்தது. இதுகுறித்து பூசாரி சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கோவிலுக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து கொள்ளையடித்த திருடர்களை தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து திருட்டு போன சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜி.எஸ்.டி. அதிகாரி போல் நடித்து முதியவரிடம் நூதன திருடப்பட்டது.
    • நகை வாங்கி வந்தவரிடம் மர்ம நபர் கைவரிசை காட்டியுள்ளனர்.

    மதுரை

    மதுரை நாராயணபுரம், ஜே.கே. நகரை சேர்ந்தவர் சூரியமூர்த்தி (வயது 68). இவர் இரவு மதுரை மேலமாசி வீதியில் உள்ள நகை கடையில், குடும்பத்தினர் இல்ல திருமண விழாவுக்காக நகைகள் வாங்கினார். அதன் பிறகு வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

    அப்போது அவரை மேல மாசி வீதி, மதனகோபாலசாமி கோவில் எதிரே, மர்ம நபர் ஒருவர் வழிமறித்தார். அவர் நான் ஒரு ஜி.எஸ்.டி அதிகாரி. உங்களின் நகைகளை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    அதனை நம்பிய சூரிய மூர்த்தியும் தான் வாங்கிய நகைகளை அவரிடம் கொடுத்தார். அவற்றை சரிபார்ப்பது போல் நடித்த அந்த நபர், மீண்டும் நகைகளை திருப்பிக் கொடுத்துவிட்டு சென்றார்.

    இதனை தொடர்ந்து சூரியமூர்த்தி வீட்டுக்கு வந்தார். அதன் பிறகு அவர் தான் வாங்கிய நகைகளை சரிபார்த்தார்.அப்போதுதான் ரூ.70 ஆயிரம் மதிப்புடைய 20 கிராம் தங்க நகைகள் இல்லாதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சூரியமூர்த்தி, இது பற்றி மதுரை தெற்கு வாசல் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை ஏமாற்றி எடுத்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ×