search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல்மி X"

    ஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.




    ஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் ஒருவழியாக பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. 6.42 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED பானரோமிக் ஆர்க் ஸ்கிரீன், 19:5:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த கலர் ஓஎஸ் 5.1 வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், ஏஐ போர்டிரெயிட்கள், ஏஐ ஸ்கிரீன் ரெக்ஃனீஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 800 சீன்களை கண்டறியும், இதன் ஸ்லைடிங் அம்சம் சுமார் 3,00,000 முறைக்கும் மேல் சோதனை செய்யப்பட்டிருக்கிறது.

    இதன் 3D ஃபேஸ் அன்லாக் வசதி ஓ-ஃபேஸ் ரெக்ஃனீஷன் (O-Face Recognition) என அழைக்கப்படுகிறது. முகத்தில் உள்ள 15,000 முக நுனுக்கங்களை ஸ்கேன் செய்து இந்த தொழில்நுட்பம் இயங்குகிறது. இது வழக்கமான கைரேகை தொழில்நுட்பத்தை விட 20 மடங்கு வேகமாக வேலை செய்கிறது. இதன் 25 எம்பி செல்ஃபி கேமரா இயற்கையாக செல்ஃபிக்களை அழகாக்குகிறது. இத்துடன் 3D லைட்டிங் தொழில்நுட்பம் போர்டிரெயிட்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இத்துடன் ஆப்பிள் அனிமோஜி போன்று 3D ஓமோஜி தொழில்நுட்பம் முக பாவனங்களை பதிவு செய்யும்.



    ஒப்போ ஃபைன்ட் X சிறப்பம்சங்கள்:

    - 6.42 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED 19:5:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 8 ஜிபி ரேம்
    - 256 ஜிபி இன்டெர்னல் மெமகி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓஎஸ் 5.1
    - டூயல் சிம்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, OIS
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
    - 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, DSP மாட்யூல், NXP நாய்ஸ் ரிடக்ஷன்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3,730 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் போர்டாக்ஸ் ரெட் மற்றும் கிளேசியர் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் விலை 999 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.79,070) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாத வாக்கில் இதன் விற்பனை துவங்குகிறது. சீனாவில் ஜூன் 29-ம் தேதியும், ஜூலை 12-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் ஒன்று எல்சிடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X பயனர்களை கவர்ந்த ஸ்மார்ட்போனாக இருந்தாலும், சிலர் இதன் விலை பட்டியலை பார்த்து பதறவே செய்தனர். அதிக விலை குறித்து பல்வேறு கருத்துக்களை கேட்ட ஆப்பிள், ஒருவழியாக பயனர் விரும்பும் விலையில் ஐபோன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் வெளியான அமெரிக்க செய்தி தாள் ஒன்றில் புதிய ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் எல்சிடி டிஸ்ப்ளேக்களை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட சாதனங்கள் ஐபோன் விற்பனையை ஊக்குவிக்கும் என ஆப்பிள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் விலை குறைந்த ஐபோன் மாடல் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. விலை குறைந்த ஸ்மார்ட்போனாக 6.1 இன்ச் ஐபோன் மாடல் இந்தியா போன்று விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள் அதிக வரவேற்பை பெறும் சந்தைகளில் வெளியிடப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.


    கோப்பு படம்

    அந்த வகையில் இம்முறை வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் முன்பு எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையில் ஐபோன்களை தயாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அடுத்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் இதே டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஐபோன் X மாடல்களில் OLED பயன்படுத்திய திட்டம் ஆப்பிள் எதிர்பார்ப்புகளுக்கு முரணாக அமைந்தது. குறிப்பாக ஐபோன் X விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்பதோடு, எல்சிடி டிஸ்ப்ளேக்களை பயன்படுத்திய ஐபோன் 7 ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்கள் இருக்கின்றன.

    ஆப்பிளின் விலை உயர்ந்த ஐபோன் X விலை 999 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டதே விற்பனை குறைய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதே போன்று மற்ற ஐபோன்களின் விலை காரணமாகவே அவற்றின் விற்பனை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
    6.5 இன்ச் அளவு கொண்ட ஐபோன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய மாடல் பார்க்க ஐபோன் X போன்ற தோற்றம் கொண்டுள்ளது.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஐபோன் விவரங்கள் ஆன்லீக்ஸ் தளத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக 6.1 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் விவரங்கள் வெளியாகி இருந்த நிலையில், இம்முறை 6.5 இன்ச் ஐபோன் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

    6.5 இன்ச் அளவு கொண்ட புதிய ஐபோனில் OLED பேனல் மற்றும் ஐபோன் X போன்ற நாட்ச் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் புதிய 6.5 இன்ச் ஐபோன் மாடல் ஐபோன் X பிளஸ் ஆக அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கம் நாட்ச் கொண்டிருக்கும் இந்த ஐபோனில் மிக மெல்லிய பெசல்களும், டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.

    கேமராவுடன், ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்துக்கு தேவையான அனைத்து சென்சார்கள், செல்ஃபி கேமரா மற்றும் இயர்பீஸ் உள்ளிட்ட அம்சங்கள் முன்பக்க நாட்ச் கொண்டிருக்கும் படி காட்சியளிக்கிறது. புதிய புகைப்படங்களிலும் இந்த ஐபோனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை.


    புகைப்படம்: நன்றி OnLeaks

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 2018 ஐபோன்கள் முறையே 5.8 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.5 இன்ச் என மூன்று வித டிஸ்ப்ளே அளவுகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் மூன்று ஐபோன் மாடல்களிலும் OLED ஸ்கிரீன்களை பயன்படுத்த இருப்பதாக தென்கொரிய தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆப்பிள் பயன்படுத்த இருக்கும் ஸ்கிரீன்களில் 10% ஜப்பான் டிஸ்ப்ளே மூலம் தயாரிக்கப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது.

    2018 6.5 இன்ச் ஐபோனின் முதல் வீடியோவை கீழே காணலாம்..,


    சீனாவில் மே 16-ம் தேதி வெளியாக இருக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் நோக்கியா X6 என அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பீஜிங்:

    சீனாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஹெச்எம்டி குளோபல் சமீபத்தில் அறிவித்து ஸ்மார்ட்போனினை சேன்லிடன் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரில் காட்சிப்படுத்தியது.

    நோக்கியா TA-1099 ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்தது. தற்சமயம் நோக்கியா X6 என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன் ப்ளூடூத் சான்று பெற்றிருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.0 மற்றும் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் கொண்டுள்ளது.



    இதுதவிர நோக்கியா TA-1075, TA-1105 மற்றும் TA-1116 மூன்று மாடல்கள் ரஷ்யாவில் சான்றளிக்கப்பட்டுள்ளது. எனினும் புதிய ஸ்மார்ட்போன்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.



    நோக்கியா X6 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.8 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 3ஜிபி / 4ஜிபி / 6ஜிபி ரேம்
    - 32ஜிபி / 64ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், ஸ்மார்ட்போன் அறிமுக தினத்தில் முழு விவரங்களும் தெரியவரும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பு விவரங்கள் லீக் ஆகியுள்ளது.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், எஸ்இ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த ஆண்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் ஐபோன் எஸ்இ 2 அம்சங்கள், கான்செப்ட் மற்றும் ரென்டர்கள் லீக் ஆகிவருகின்றன.

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போன் ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இவ்விழாவில் புதிய ஐபோன் அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் ஸ்மார்ட்போன் ஐபோன் எஸ்இ (2018) என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் ஐபோன் எஸ்இ 2 ரென்டர்களில் புதிய ஸ்மார்ட்போன் பார்க்க ஐபோன் X போன்று காட்சியளிக்கிறது. புதிய ஐபோன் எஸ்இ 2 மாடலில் முன்பக்கம் நாட்ச் மற்றும் பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. 



    குறிப்பாக ஐபோன் எஸ்இ 2 மாடலில் ஹோம் பட்டன் நீக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஐபோன் எஸ்இ 2 மாடலிலும் ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் எஸ்இ 2 மாடலில் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. இது தற்போதைய எஸ்இ மாடலில் உள்ள ஏ9 பிராசஸரை விட 40% வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் புதிய மாடலில் கிளாஸ் பேக், வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.

    மேலும் புதிய எஸ்இ ஸ்மார்ட்போனில் டச் ஐடி தொழில்நுட்பம், 4 இன்ச் டிஸ்ப்ளே, முன்பக்க செல்ஃபி கேமரா, டச் ஐடி மற்றும் இயர்பீஸ் உள்ளிட்டவற்றை கொண்ட பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 7 டிரென்ட்-ஐ பின்பற்றும் வகையில் புதிய ஐபோன் எஸ்இ 2 மாடலிலும் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×