search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    விலை குறைந்த ஐபோன் வெளியிட ஆப்பிள் திட்டம்?

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் ஒன்று எல்சிடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X பயனர்களை கவர்ந்த ஸ்மார்ட்போனாக இருந்தாலும், சிலர் இதன் விலை பட்டியலை பார்த்து பதறவே செய்தனர். அதிக விலை குறித்து பல்வேறு கருத்துக்களை கேட்ட ஆப்பிள், ஒருவழியாக பயனர் விரும்பும் விலையில் ஐபோன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் வெளியான அமெரிக்க செய்தி தாள் ஒன்றில் புதிய ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் எல்சிடி டிஸ்ப்ளேக்களை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட சாதனங்கள் ஐபோன் விற்பனையை ஊக்குவிக்கும் என ஆப்பிள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் விலை குறைந்த ஐபோன் மாடல் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. விலை குறைந்த ஸ்மார்ட்போனாக 6.1 இன்ச் ஐபோன் மாடல் இந்தியா போன்று விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள் அதிக வரவேற்பை பெறும் சந்தைகளில் வெளியிடப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.


    கோப்பு படம்

    அந்த வகையில் இம்முறை வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் முன்பு எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையில் ஐபோன்களை தயாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அடுத்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் இதே டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஐபோன் X மாடல்களில் OLED பயன்படுத்திய திட்டம் ஆப்பிள் எதிர்பார்ப்புகளுக்கு முரணாக அமைந்தது. குறிப்பாக ஐபோன் X விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்பதோடு, எல்சிடி டிஸ்ப்ளேக்களை பயன்படுத்திய ஐபோன் 7 ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்கள் இருக்கின்றன.

    ஆப்பிளின் விலை உயர்ந்த ஐபோன் X விலை 999 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டதே விற்பனை குறைய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதே போன்று மற்ற ஐபோன்களின் விலை காரணமாகவே அவற்றின் விற்பனை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×