search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்

    ஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.




    ஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் ஒருவழியாக பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. 6.42 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED பானரோமிக் ஆர்க் ஸ்கிரீன், 19:5:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த கலர் ஓஎஸ் 5.1 வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், ஏஐ போர்டிரெயிட்கள், ஏஐ ஸ்கிரீன் ரெக்ஃனீஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 800 சீன்களை கண்டறியும், இதன் ஸ்லைடிங் அம்சம் சுமார் 3,00,000 முறைக்கும் மேல் சோதனை செய்யப்பட்டிருக்கிறது.

    இதன் 3D ஃபேஸ் அன்லாக் வசதி ஓ-ஃபேஸ் ரெக்ஃனீஷன் (O-Face Recognition) என அழைக்கப்படுகிறது. முகத்தில் உள்ள 15,000 முக நுனுக்கங்களை ஸ்கேன் செய்து இந்த தொழில்நுட்பம் இயங்குகிறது. இது வழக்கமான கைரேகை தொழில்நுட்பத்தை விட 20 மடங்கு வேகமாக வேலை செய்கிறது. இதன் 25 எம்பி செல்ஃபி கேமரா இயற்கையாக செல்ஃபிக்களை அழகாக்குகிறது. இத்துடன் 3D லைட்டிங் தொழில்நுட்பம் போர்டிரெயிட்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இத்துடன் ஆப்பிள் அனிமோஜி போன்று 3D ஓமோஜி தொழில்நுட்பம் முக பாவனங்களை பதிவு செய்யும்.



    ஒப்போ ஃபைன்ட் X சிறப்பம்சங்கள்:

    - 6.42 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED 19:5:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 8 ஜிபி ரேம்
    - 256 ஜிபி இன்டெர்னல் மெமகி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓஎஸ் 5.1
    - டூயல் சிம்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, OIS
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
    - 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, DSP மாட்யூல், NXP நாய்ஸ் ரிடக்ஷன்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3,730 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் போர்டாக்ஸ் ரெட் மற்றும் கிளேசியர் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் விலை 999 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.79,070) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாத வாக்கில் இதன் விற்பனை துவங்குகிறது. சீனாவில் ஜூன் 29-ம் தேதியும், ஜூலை 12-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    Next Story
    ×