search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா கனமழை"

    சைக்கிள் வாங்குவதற்காக சேமித்த தனது உண்டியல் பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்காக வழங்கிய விழுப்புரம் சிறுமிக்கு, ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒரு சைக்கிள் கொடுப்போம் என ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது. #KeralaFlood #HeroCycles

    விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற ஒன்பது வயது சிறுமி, சைக்கிள் வாங்குவதற்காக கடந்த 4 ஆண்டுகளாக உண்டியல் பணம் சேமித்து வந்துள்ளார். கேரளாவில் மழை வெள்ள பாதிப்பை டிவியில் பார்த்ததும், தனது 9 ஆயிரம் ரூபாய் சேமிப்பை நிவாரண நிதியாக வழங்கினார் அனுப்பிரியா.

    இந்த செய்தி அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. சிறுமியின் இச்செயலைக் கேள்விப்பட்ட முன்னணி சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ சைக்கிள்ஸ், அனுப்ரியாவுக்குப் புத்தம் புதிய சைக்கிளை வழங்கத் தயார் என்று ட்விட்டரில் அறிவித்தது.

    ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் முஞ்சால் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனுப்ரியா! உன்னை வணங்குகிறேன், நீ ஒரு நல்ல உள்ளம் படைத்தவள். மேலும் நன்மையைப் பரப்புவாயாக. உனக்கு உன் வாழ்வின் ஒவ்வோர் ஆண்டும் ஒரு புதிய சைக்கிள் வழங்குவதில் ஹீரோ மகிழ்ச்சியடைகிறது. முகவரியை எம்மோடு பகிர்ந்துகொள்க. உனக்கு எனது அன்பும் வாழ்த்துகளும். கேரளாவுக்காகப் பிரார்த்திக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார். 



    மேலும், “தனது சேமிப்பு மொத்தத்தையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக வழங்கிய ஒன்பது வயது சிறுமிக்கு சைக்கிளை அளித்த ஹீரோ நிறுவனத்துக்கு நன்றி” என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ட்வீட் செய்துள்ளார்.
    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கோரிய வழக்கில், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை கூட்டி முடிவெடுக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Mullaperiyar #MullaperiyarDam
    புதுடெல்லி:

    கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், திறக்கப்படும் தண்ணீர் இடுக்கி அணைக்கு வந்து சேருகிறது. இடுக்கி அணையும் நிரம்பியுள்ளதால் அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அணையின் பலம் குறித்து கேரள மக்களிடையே அச்சம் நிலவுவதால் அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 136 அடியாக குறைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    இதற்கு பதில் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் அணை பாதுகாப்பாக இருப்பதால் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என கூறியிருந்தார்.

    இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 143 அடியில் இருந்து குறைக்க கோரி இடுக்கியை சேர்ந்த ரசூல்ராய் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முல்லைப் பெரியாறு அணை நீர் இருப்பு, நீர் மேலாண்மை தொடர்பாக நாளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    கூட்டத்தில், நீர்மட்டத்தை தற்காலிகமாக 139 அடியாக குறைப்பது குறித்து ஆராயுமாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

    இது தொடர்பான அறிக்கையை நாளை பிற்பகல் 2 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என கூறிய நீதிபதிகள், வழக்கை நாளைய தினத்துக்கு ஒத்தி வைத்தனர்.
    கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருவதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்கள் நிர்மூலமாகிப் போயுள்ளது. #KeralaRains #KeralaFlood
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த பேய் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது. மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. 

    எனவே 33 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மாநிலத்தில் இன்று காலை வரையில் 24 மணி நேரத்தில் 38.11 மி.மீ. மழை பெய்து இருக்கிறது. மாநிலத்தின் 14 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

    அங்கு அடுத்த 24 மணி நேரத்தில் கனமழையும், மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் 12 மாவட்டங்களுக்கு கடும் அபாய எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. 



    தொடர் மழை மற்றும் அணைகளிலிருது வெளியாகும் தண்ணீர் காரணமாக கண்ணூர், கோழிக்கோடு மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அத்துடன் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. 

    இன்று வெள்ளம், நிலச்சரிவு போன்ற மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் 25 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது. இடுக்கி, முல்லைப்பெரியாறு அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தை சூழ்ந்துள்ளது. 

    ஓடுபாதை மற்றும் சுற்றுவட்டார இடங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளதால் விமான நிலையம் 18–ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக மாநிலத்தில் வெள்ள நிலவரம் மிகவும் மோசமாகியுள்ளது.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு கூடுதல் உதவிகளை செய்யும்படி கேரள அரசு கோரிக்கையை விடுத்து வருகிறது. கேரளாவில் மீட்புப் பணிக்காக மத்திய அரசு கூடுதலாக ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், படகுகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, பினராய் விஜயன் கோரிக்கையை விடுத்துள்ளார். 



    இதற்கிடையே பினராய் விஜயனிடம் பேசிய பிரதமர் மோடி, கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் குறித்து அம்மாநில முதல்வரிடம் கேட்டறிந்தேன், கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்று கூறியுள்ளார். 

    மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கேரளாவிற்கு 4 தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவை அனுப்பியுள்ளது. கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

    ஏற்கனவே வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு புனேவில் இருந்து 4 தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஒவ்வொரு பிரிவிலும் 45 வீரர்கள் இருப்பார்கள். ஏற்கனவே இடுக்கி, எர்ணாகுளம், பாலகாடு, ஆழபுலா, கோழிக்கோடு, வயநாடு, திரிச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 14 பிரிவுகள் நிலை நிறுத்தப்பட்டு, மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 
    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். #MullapperiyarDam #EdappadiPalaniswami #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டது.

    இதையடுத்து 2014, 2015-ம் ஆண்டுகளில் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அதன்பிறகு போதிய மழைப் பொழிவு இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக நீர்மட்டம் 142 அடியை எட்டவில்லை.

    அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்மட்டம் அணையின் உயர்ந்தது. நேற்று அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டியது. நேற்று காலை 6 மணியளவில் நீர்மட்டம் 136.10 அடியாக இருந்தது. அதுவே அணைக்கு நீர்வரத்து அதிகமானதால் நேற்று இரவு நீர்மட்டம் 137 அடியை தாண்டியது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று 142 அடியை எட்டியது. இதையடுத்து, அணையின் 13 மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவுக்கு விநாடிக்கு 11,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் இடுக்கி அணைக்கு செல்கிறது. அந்த அணையும் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், செருதோணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

    அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் தேக்க கொள்ளளவை குறைக்க வேண்டும் என கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    கேரளாவில் கனமழையினால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்தவர்களுக்கு, விற்பனைக்காக வைத்திருந்த போர்வகளை இலவசமாக அளித்த தெரு வியாபாரியின் ஈகை உள்ளம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. #KeralaRain #KeralaFloods
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத பேய் மழை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த கம்பளி போர்வை வியாபாரி ஒருவர் விற்பனைக்காக வைத்திருந்த கம்பளி போர்வைகள் அனைத்தையும் , உடைமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கிய சம்பவம் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது. 

    வயிற்று பிழைப்புக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் ம.பி.யில் இருந்து போர்வைகள் வாங்கி வந்து கேரளாவில் விற்பனை செய்து வரும் தெரு வியாபாரி விஷ்னு, மாங்கோடு பகுதியில் விற்பனையில் ஈடுபட்ட போது அங்குள்ள பள்ளி ஒன்றில் கனமழையால் பாதிகப்பட்டவர்களுக்கான முகாம் திறக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்.

    மழை பாதிப்பினால் உடைமைகளை இழந்து தவித்து வரும் அவர்களுக்கு தன்னுடைய போர்வகளை இலவசமாக வழங்க விரும்பிய அவர், அப்பகுதி தாசில்தாரிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து, விஷ்னுவின் விருப்பத்தை மாவட்ட கூடுதல் நீதிபதி முகமது யூசுப்பிடம் தெரிவித்த தாசில்தார் திவாகரன், விஷ்னுவின் போர்வைகளை முகாமிற்கு எடுத்து செல்வதற்கான வாகன உதவியை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்.

    அதன்படி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த  37 குடும்பங்களை சேர்ந்த 122 பேருக்கு தான் விற்பனைக்காக வைத்திருந்த கம்பளி போர்வைகளை விஷ்னு தானமாக வழங்கினார். விஷ்னுவின் இந்த ஈகை உள்ளத்தை அறிந்த பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது பாராட்டுக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.  #KeralaRain #KeralaFloods 
    தொடர் கனமழையால் கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கேரளா முதல்வரின் நிவாரண நிதி கணக்கிற்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFloods #KamalHaasan
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும்.

    இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன் பிறகு விட்டு விட்டு பெய்த மழை ஜூலை மாத இறுதியில் மீண்டும் பலத்த மழையாக மாறியது. ஆகஸ்டு முதல் வாரத்தில் மிகப்பலத்த மழை பெய்தது.

    மாநிலத்தின் மலையோர மாவட்டங்கள் தொடர்மழையால் பெரும் பாதிப்புக்கு ஆளானது. நிலச்சரிவு, வீடுகள் இடிந்தது, வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது என 30-க்கும் மேற்பட்டோர் மழையால் பலியானார்கள்.

    எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, பாலக்காடு, இடுக்கி, கண்ணூர் உள்பட 8 மாவட்டங்களில் கடந்த 8-ந்தேதிக்கு மேல் தொடங்கிய மழை இன்று வரை இடைவிடாமல் பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக இம்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியது. வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. தரைப்பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கப்பற்படை மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

    தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கேரளாவுக்கு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளன. இந்நிலையில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கேரளா முதல்வரின் நிவாரண நிதி கணக்கிற்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFloods #KamalHaasan
    கேரள கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட மாநில காங்கிரஸ் கட்சியினர் முன்வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். #KeralaFloods2018 #KeralaFloods #KeralaRains #Rahul
    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

    இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் இடிந்துள்ளன. கனமழை காரணமாக 29 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 

    இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்திடுமாறு மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், ‘முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெய்த மழையினால் கேரளா பேரழிவை சந்தித்துள்ளது. பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் தங்களது வீடுகளை கைவிட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    எனவே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த கடினமாக நேரத்தில் என்னுடைய பிராத்தனைகளும், எண்ணங்களும் கேரள மக்களுடன் இருக்கும்’  என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #KeralaFloods2018 #KeralaFloods #KeralaRains #Rahul 
    கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 10 நாட்களில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    ஆழப்புழா, கோட்டயம் போன்ற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 569 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 86 ஆயிரத்து 598 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு கேரளாவில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், கடந்த மே 29-ம்   தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழைக்கு 107 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த ஜூலை 9-ம் தேதியில் இருந்து 2-வது முறையாக பெய்ய தொடங்கிய கனமழைக்கு இதுவரை 39 பேர் பலியாகி உள்ளனர்.
    ×