search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள கனமழை - முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கினார் கமல்ஹாசன்
    X

    கேரள கனமழை - முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கினார் கமல்ஹாசன்

    தொடர் கனமழையால் கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கேரளா முதல்வரின் நிவாரண நிதி கணக்கிற்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFloods #KamalHaasan
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும்.

    இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன் பிறகு விட்டு விட்டு பெய்த மழை ஜூலை மாத இறுதியில் மீண்டும் பலத்த மழையாக மாறியது. ஆகஸ்டு முதல் வாரத்தில் மிகப்பலத்த மழை பெய்தது.

    மாநிலத்தின் மலையோர மாவட்டங்கள் தொடர்மழையால் பெரும் பாதிப்புக்கு ஆளானது. நிலச்சரிவு, வீடுகள் இடிந்தது, வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது என 30-க்கும் மேற்பட்டோர் மழையால் பலியானார்கள்.

    எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, பாலக்காடு, இடுக்கி, கண்ணூர் உள்பட 8 மாவட்டங்களில் கடந்த 8-ந்தேதிக்கு மேல் தொடங்கிய மழை இன்று வரை இடைவிடாமல் பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக இம்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியது. வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. தரைப்பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கப்பற்படை மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

    தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கேரளாவுக்கு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளன. இந்நிலையில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கேரளா முதல்வரின் நிவாரண நிதி கணக்கிற்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFloods #KamalHaasan
    Next Story
    ×