search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளம்"

    • சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது
    • கேரளாவில் இருந்து கிளம்புவதற்கு முன்பு கூட கேரள ரசிகர்களை விஜய் சந்த்தித்து பேசினார்.

    லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கேரள ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் நான்கு நாட்களாக மிதந்தார் விஜய். அவர் கேரளாவில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து ரசிகர்கள் அவரை சூழ்ந்துக் கொண்டனர்.

    அவர்களின் அன்பை பெற்ற விஜய், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களை சந்தித்து வந்தார். கேரளாவில் இருந்து கிளம்புவதற்கு முன்பு கூட கேரள ரசிகர்களை விஜய் சந்த்தித்து பேசினார்.

    அவரின் மனமார்ந்த நன்றியை மலையாலத்திலேயே கேரள ரசிகர்களிடம் கூறினார். படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் மற்றும் படக்குழு சென்னை திரும்பினர். அடுத்த கட்டமான படப்பிடிப்பை ரஷ்ஷியாவின் தலை நகரமான மாஸ்கோவில் படம்பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில் வெங்கட் பிரபு அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்துடன்," தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" படத்தின் போஸ்டர் ஷூட்டின் போது விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்றும் நடிகர் விஜய்க்கும் அதை எடுத்த புகைப்பட கலைஞரான சுதர்ஷனுக்கும் நன்றியை  தெரிவித்து வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இறைச்சி கோழிகளுடன் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
    • பறவை காய்ச்சல் எதிரொலி

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பறவை காய்ச்சல் பல்வேறு பகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    முதலில் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது திருவனந்தபுரம் மாவட்டத்திலும் இது பரவி உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

    வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள், கோழிகள், வாத்துகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதற்கி டையில் பண்ணை களில் கோழிகள் பாதி க்கப்பட்ட தால், அங்குள்ள கோழிகள், வாத்துகளை அழிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பறவை காய்ச்சல், பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது இல்லை என்றாலும், உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவ வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள குமரி மாவட்டம் படர்ந்தாலுமூடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கேரள வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பறவைகள், கறிக்கோழிகள் ஏற்றி வரும் பெரும்பாலான வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றன. சில வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

    தற்போது பறவை காய்ச்சல், கேரளாவில் தீவிரமடைந்துள்ளதால், அங்கிருந்து கறிக்கோழிகள், கோழிக் குஞ்சுகள், தீவனம், முட்டை போன்றவை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. படந்தாலுமூடு சோதனை சாவடி யில் 3 குழுக்களும், காக்க விளையில் ஒரு குழுவும் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

    ×