search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள் தின விழா"

    • விழாவில் நேருவின் உடையணிந்து வந்த மாணவிகளை உற்சாகப்படுத்தி கவுரவப்படு த்தினர்
    • பள்ளி தாளாளர் செண்பகநாதன் தலைமை தாங்கினார்.

    நாகர்கோவில் :

    தெரிசனம்கோப்பு கவுசிகா பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சென்ட்ரல் ரோட்டரி கிளப் தலைவர் குஞ்சுகிருஷ்ணன், கிரீன்லேண்டு பூதப்பாண்டி ரோட்டரி கிளப்பின் தலைவர் ஜாண்சன், செயலாளர் செல்வதாஸ், நாதன், பரமேஸ்வரன், அய்யப்பன், சிக்கந்தர் பாட்சா ஆகியோர் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். விழாவில் நேருவின் உடையணிந்து வந்த மாணவிகளை உற்சாகப்படுத்தி கவுரவப்படு த்தினர். பள்ளி தாளாளர் செண்பகநாதன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் உமாநாதன், மதிமாதவன், விஜி கிருஷ்ணவேணி, வீரலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் அளவில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கிடையான ஓவியம், மாறுவேடம், கதை சொல்லுதல், தேச பக்தி பாடல்கள், வினாடி வினா, கட்டுரை, கவிதை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது.

    அதன் பரிசளிப்பு விழா செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் நளினி தலைமை தாங்கினார். செய்யாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எல்லப்பன், தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட தலைவர் ஆசிரியர் ஜி. செல்வதிருமால் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக ஓ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றி குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வழக்கறிஞர் ஜி அசோக், ஒன்றிய கவுன்சிலர் ஞானவேல், தலைமை ஆசிரியர்கள், ஜே.ஆர்.சி. ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர்திரளாக கலந்து கொண்டனர்.

    • குழந்தைகள் தின விழாவில் பல் மருத்துவ முகாம் நடக்கிறது.
    • இதில் பள்ளி மேம்பாட்டு குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி நாகநாதபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் நடந்தது.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அமுதா, 30-வது வார்டு கவுன்சிலர் அமுதா சுந்தரேசன் முன்னிலை வகித்தனர். சாந்தி பல் மருத்துவமனை மருத்துவர்கள் நவீனா இளங்கோ, டவுமி ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். குழந்தைகளுக்கு டூத்பிரஸ், பேஸ்ட், உண்டியல் வழங்கப்பட்டது.

    இதில் பள்ளி மேம்பாட்டு குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியை பிரேமா நன்றி கூறினார்.

    • பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றும் மாவட்ட கலெக்டர் மூலம் பின்னர் வழங்கப்படும்
    • பள்ளி அளவில் 46 பேரும், கல்லூரி அளவில் 20 பேரும் கலந்து கொண்டார்கள்.

    நாகர்கோவில்:

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி குமரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியர்களுக்கிடையே யான பேச்சுப் போட்டிகள் நடை பெற்றன. பள்ளி அளவில் 46 பேரும், கல்லூரி அளவில் 20 பேரும் கலந்து கொண்டார்கள்.

    பள்ளிகள் பிரிவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரத்தை மாணவர்ஜெப்றின், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரத்தை மாணவி அகஸ்தியா, 3-ம் பரிசு ரூ.2 ஆயிரத்தை மாணவன் ஆஷிக்எ.எல்ஜித் ஆகியோர் பெற்றனர். அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கான சிறப்பு பரிசுத் தொகை தலா ரூ. 2 ஆயிரத்தை குமாரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 மாணவி ஆக்னஸ் லிவிஷா, மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ருதி ஆகியோர் வென்றனர்.

    கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு 5 ஆயிரத்தை மாணவி ஷானு, 2-ம் பரிசு ரூ.3 ஆயிரத்தை மாணவி ஆஷா, 3-ம் பரிசு ரூ.2 ஆயி ரத்தை மாணவி அஞ்சனா ஆகியோர் பெற்றனர்.

    பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றும் மாவட்ட கலெக்டர் மூலம் பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடந்தது
    • மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த வேலூர் பேட்டை கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதனையொட்டி பள்ளி மாணவ-மாண விகளுக்கு பல்வேறு போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.

    வேலூர் பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சஞ்சிவ் குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மரம் நடுதலின் அவசியம், பிளாஸ்டிக் ஒழிப்பு, போக்சோ சட்டம், குழந்தை தொழிலாளர் தடை, குழந்தை திருமண தடை, அரசு நலத்திட்ட உதவிகள் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • மாறுவேட போட்டிகள் நடந்தது
    • குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

    குடியாத்தம்:

    குடியாத்தம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் இன்னர்வீல் சங்கம் இணைந்து குடியாத்தம் ஒன்றியம் சீவூர் ஊராட்சி கள்ளூர் குறிஞ்சி நகர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு உறுப்பினர்கள் தீபிகாபரத், அமுதாலிங்கம், சீவூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, துணைத் தலைவர் டி.அஜீஸ், ஊராட்சி மன்ற உறுப்பினர் ஷாயிதாஅல்தாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    குடியாத்தம் இன்னர்வீல் சங்கத் தலைவர் கீதாலட்சுமி, செயலாளர் பிரியா, முன்னாள் தலைவர் வசந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

    தொடர்ந்து மாறுவேட போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

    முடிவில் குடியாத்தம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம்ரிஹானா நன்றி கூறினார்.

    • ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது
    • மாணவர்களை ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்

    புதுக்கோட்டை:

    குழந்தைகள் தின விழாவில் குதூகலம் ஐந்தே நிமிடத்தில் கவிதை எழுதி அசத்திய மாணவர்கள் புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மிகவும் வித்தியாசமான முறையில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

    குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு 'புத்தகம் இல்லா நாள்' என அறிவித்தார் பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி. புத்தகப் பை இல்லாமல் மாணவர்கள் மழையையும் பொருட்படுத்தாது மிக உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, ரோஜாப்பூ கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு படத்துக்கு மாணவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

    ரோட்டு மேல காரு, காருக்குள்ள யாரு, எங்க மாமா நேரு என்ற பிரபலமான பாடலை முதல்வர் தங்கம் மூர்த்தி பாட மாணவர்கள் தொடர்ந்து பாடி உற்சாகத்தில் மகிழ்ந்தனர்.

    ஒன்பதாம் வகுப்புக்கு சென்ற பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மாணவர்களை சந்தித்து இன்று மழை பெய்கிறது. ஜன்னல் வழியே அதனை ரசிக்கிறீர்கள். அதனை வைத்து கவிதை எழுதுங்களேன் என்று கூற உடனே பேனா எடுத்த மாணவர்கள் ஐந்தே நிமிடங்களில் மழை பற்றிய மழலைச் சிந்தனைச் சிதறல்களை கவிதைகளாக எழுதிக் காட்டியது பெரும் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு கோணத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி தாங்களும் கவிஞர்கள் தான் என்பதை நிரூபித்தார்கள். வகுப்புகளை அலங்கரித்து மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றுக் கொண்டாடிய காட்சி கண்ணைக் கவர்ந்தது.

    • பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
    • விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்தார்த்தன் தலைமை வகித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்தார்த்தன் தலைமை வகித்தார். பொத்தனூர் அன்பழகன், கவுன்சிலர்கள் வைரமணி, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக பேரூராட்சி தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×