search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சுப் போட்டி"

    • அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் பேச்சுப் போட்டி நாளை நடைபெறுகிறது.
    • பேரறிஞர் அண்ணாவின் தமிழ் தொண்டும் சமூக சீர்திருத்தமும் என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெறுகிறது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியல் கல்லூரிகளுக்கு நாளை கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

    கட்டுரை போட்டிக்கான தலைப்பு அண்ணாவின் பொது வாழ்வும் தமிழும், பேச்சுப் போட்டிக்கான தலைப்பு பேரறிஞர் அண்ணாவின் தமிழ் தொண்டும் சமூக சீர்திருத்தமும் என்னும் தலைப்பில் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி அன்று பரிசளிப்புகள் வழங்கப்படும்.

    இவ்வாறு கல்லூரி முதல்வர் தனபால் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
    • கூட்டரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து 250 கோரிக்கை மனுக்கள் பெற்றார். பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் விடுதிகளில் சிறந்த 3 விடுதிகளுக்கு கேடயமும், விடுதி களை நல்ல முறையில் நிர்வகிக்கும் காப்பாளருக்கு பரிசுத்தொ கையையும், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணா, மகாத்மா காந்தி ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

    சென்னையில் நடந்த அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இணைப்பில்லம் -கமுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வைரவன்கோவில் - ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காந்திநகர்- மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவை களை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த கண் பரிசோதனை முகாமை கலெக்டர் தொடங்கி வைத்து கண் பரிசோதனை செய்து கொண்டார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றும் மாவட்ட கலெக்டர் மூலம் பின்னர் வழங்கப்படும்
    • பள்ளி அளவில் 46 பேரும், கல்லூரி அளவில் 20 பேரும் கலந்து கொண்டார்கள்.

    நாகர்கோவில்:

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி குமரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியர்களுக்கிடையே யான பேச்சுப் போட்டிகள் நடை பெற்றன. பள்ளி அளவில் 46 பேரும், கல்லூரி அளவில் 20 பேரும் கலந்து கொண்டார்கள்.

    பள்ளிகள் பிரிவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரத்தை மாணவர்ஜெப்றின், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரத்தை மாணவி அகஸ்தியா, 3-ம் பரிசு ரூ.2 ஆயிரத்தை மாணவன் ஆஷிக்எ.எல்ஜித் ஆகியோர் பெற்றனர். அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கான சிறப்பு பரிசுத் தொகை தலா ரூ. 2 ஆயிரத்தை குமாரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 மாணவி ஆக்னஸ் லிவிஷா, மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ருதி ஆகியோர் வென்றனர்.

    கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு 5 ஆயிரத்தை மாணவி ஷானு, 2-ம் பரிசு ரூ.3 ஆயிரத்தை மாணவி ஆஷா, 3-ம் பரிசு ரூ.2 ஆயி ரத்தை மாணவி அஞ்சனா ஆகியோர் பெற்றனர்.

    பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றும் மாவட்ட கலெக்டர் மூலம் பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளன.
    • அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்து ள்ளார்.

    தேனி:

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி வருகிற 15ந் தேதி அன்றும் பெரியார் பிறந்தநாளையொட்டி17ந் தேதியன்றும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளன.

    பள்ளி மாணவர்களுக்கு காலை 10 மணி முதலும், கல்லூரி மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதலும் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பேச்சுப்போட்டிகள் நடை பெறவுள்ளன. இப்போட்டிகளில் தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாண விகள் கலந்துக்கொள்ளலாம்.

    அண்ணா பிறந்தநாளை யொட்டி பள்ளி மாணவ ர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு "தாய் மண்ணிற்குப் பெயர் சூட்டிய தனயன், மாணவ ர்க்கு அண்ணா, அண்ணா வின் மேடைத்தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம்" எனும் தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு" பேரறிஞர்அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், பேரறிஞர் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சு வட்டில், தம்பி ! மக்களிடம் செல்" எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

    பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு " தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ்ச்சமுதாயமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்" எனும் தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு "தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள்?, இனி வரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியார், உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும்" எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

    பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை கல்லூரி இணை இயக்குநர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக் கல்லூரி முதல்வர் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும். அதே போன்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும்.

    கல்லூரி பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 என்ற வகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000, என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும்.

    இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்து ள்ளார்.

    • பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது
    • தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்றது

    கரூர்:

    தமிழ் வளர்ச்சித்துறை பேச்சுப் போட்டி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் வே.ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கரூர் மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி 10 தலைப்புகளில் மாணவர்கள் பேசினார்கள். போட்டியில் புகழூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவி சி.ரித்திஸ்ரீ முதலிடம், கரூர் பரணி வித்யாலயா மேல் நிலைப் பள்ளி 12ம் வகுப்பு மாணவர் ச.சாய்ரித்திக் 2ம் இடம், தம்மநாய்க்கன்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவி து.திவ்யதாரணி 3ம் இடம் பெற்றனர்.

    அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுக்கு கரூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர் ஜோ.ரத்தினவேல்பாண்டி, மலைக்கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவி மு.திவ்யா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இம்மாணவர்களுக்கு முதற்பரிசாக ரூ.5,000, 2ம் பரிசு ரூ.3,000, 3ம் பரிசு ரூ.2,000, சிறப்பு பரிசு ரூ.2,000 வீதம் இரு மாணவர்களுக்கும் வழங்கப்படும். பரிசுத் தொகை காசோலை, பாராட்டுச் சான்றிதழ்கள் ஆட்சியரால் பின்னர் வழங்கப்படும்.

    முதுகலைத் தமிழ் ஆசிரியர்கள் ந.உமாமகேஸ்வரி, ரா.தேவி, த.தேன்மொழி ஆகியோர் நடுவர்களாக பணிபுரிந்தனர். இப்போட்டிக்கான முன்னேற்பாடுகள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார்.

    ×