search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டர் சட்டத்தில் கைது"

    • முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள ஆண்டிப்பாளையம் கிராமம் அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 46), முன்னாள் ராணுவ வீரர். இவர், கடந்த அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக மாரிமுத்துவின் மனைவி கவிதா, அவரது கள்ளக்காதலன் செட்டித்தாங்கலை சேர்ந்த வேன் டிரைவர் சங்கர், சிறுமூர் பாபு என்கிற திருமாலன், அடையபுலம் பிரகாஷ்ராஜ், அப்பு ஆகிய 5 பேரை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கவிதாவை தவிர மற்ற 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதனையடுத்து சங்கர், பாபு, பிரகாஷ்ராஜ், அப்பு ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்
    • கைதிகளின் வங்கிக்கணக்குகள் முடக்கம்

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி ஜீவாநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 39). இவர் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். எனவே இவர் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் உள்ளது.

    இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்ததால் போலீசார் கைது செய்தனர். குண்டர்சட்டமும் இவர் மீது பாய்ந்துள்ளது. இந்த நிலையில் இவர் மனம் திருந்தி வாழ முடிவு செய்தார். அதன்படி இனி கஞ்சாவை விற்பனை செய்ய மாட்டேன் என்று பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் பிரமாண பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.

    தான் மனம் திருந்துவதாகவும், தன்னுடைய வாழ்வாதாரத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலையில் நேற்று மனந்திருந்தி வாழ ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 21 குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 322 கிலோ வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்ற செயல்களில் ஈடுவோர்கள் மனம் திருந்த வேண்டும். ராஜேந்திரன் திருந்தி வாழ ஆசைப்படுகிறார்.

    அவர் டீக்கடை வைக்க உதவிகோரி உள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துடன் முடிவு செய்து அவர் தொழில் தொடங்க ஏற்பாடு செய்யப்படும். சாராயம், கஞ்சா விற்பனை செய்தல் போன்ற எந்த வகையான குற்றத்தில் ஈடுபட்டாலும் மனம் திருந்தினால் அவர்களுக்கு உதவி செய்யப்படும்.

    வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்தவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்றார்.

    • கூலி தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.
    • சிறுமியின் பெற்றோர் புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் அஜித்குமார்(21). கூலித்தொழிலாளி.

    இவர் தன்னுடன் பணியாற்றும் மற்றொரு கூலி தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.

    அப்போது அந்த தொழிலாளியின் 8 வயது மகளுடன் அவர் பழகினார். ஒரு கட்டத்தில் சிறுமிக்கு இனிப்பு வாங்கி கொடுத்து ஏமாற்றி அவரை அருகில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதை யாரிடமாவது வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். பயந்து போன சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் அல்லிராணி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி கடந்த 25-ந் தேதி அஜித்குமாரை, கைது செய்து, ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், அஜித்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., ஆசிஷ் ராவத் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதன் பேரில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவு நகல் ஊட்டி கிளை சிறையில் இருந்த அஜித்குமாரிடம் வழங்கப்பட்டது. பின், அஜித்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சத்தியமூர்த்தி தலைமறைவானார்.
    • சத்தியமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(34). கிருஷ்ண கிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு, வீடாக சென்று குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவுக்கு கடத்தி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சின்னகோட்டப்பள்ளி, கிருஷ்ணகிரி ஆவின் பாலம், காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இவரது ஐந்து வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சத்தியமூர்த்தி தலைமறைவானார்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தில் உள்ள அவரது வீட்டில் பதுங்கி இருந்த சத்தியமூர்த்தியை பிடிக்க கடந்த 3&ந் தேதி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர். தப்பிக்க முயன்ற சத்தியமூர்த்தியை போலீசார் மடக்கி பிடித்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

    சத்தியமூர்த்தி மீது ஏற்கனவே பல்வேறு ரேஷன் பொருட்கள் கடத்தல் வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிந்துரைத்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, சத்தியமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்தியமூர்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அடையாளம் தெரியாத நபர் அந்த நகையை திருடி சென்று விட்டார் .
    • குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூர் காவல் எல்லைக்குட்பட்ட ராயப்பன் கொட்டாய் கிராமத்தில் வெங்கடாசலம் மனைவி சுந்தரம்மாள் (வயது 60) என்பவர் சிறிய மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு மளிகை கடையில் பொருட்களை சரி செய்து கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத நபர் அந்த நகையை திருடி சென்று விட்டார் .

    இது குறித்து சுந்தரம்மாள் அரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அரூர் காவல் துறையினர் திருட்டு வழக்கில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் வீராணம் பகுதியைச் சேர்ந்த தயாநிதி மகன் ஹெலீம் அலாசிஸ் (22) என்பவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    இவர் நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க, தருமபுரி காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் பரிந்து ரையின் பேரில்,கலெக்டர் சாந்தி , குற்றவாளி ஹெலீம் அலாசிஸ் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் அரூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபு , ஹெலீம் அலாசிஸ் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

    • சங்கராபுரம் அருகே கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சங்கராபுரம் அருகே தொண்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த யோகிதாஸ் (29) என்பவர் கடந்த மாதம் 15-ந் தேதி அவரது வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும்போது பகண்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 114 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

    இவர் மீது பகண்டை காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் க்கு பரிந்துரை செய்தார். அதன்படி மேற்படி நபரை ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி யோகிதாஸை, போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

    • வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
    • போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    பாணாவரம் பிள்ளையார் கோவில் தெரு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வினோத்குமார் (என்கிற) வினோத் (வயது 32) என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    இவரது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

    • ஒரு வாரமாக முகாமிட்டு தீவிர சோதனை நடத்தி வருகிறார்.
    • தப்பியோடிய லாரி டிரைவர் பர்கத்தை தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஆபாஸ்குமார் உத்தரவுப்படி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி கிருஷ்ணகிரி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டு தீவிர சோதனை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த, ஜூலை, 12-ந் தேதி ஓசூர் - பாகலூர் சாலை, ஜி.மங்கலம் அருகே லாரியில், 50 கிலோ அளவிலான, 600 மூட்டைகளில் கடத்திய, 30 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதில், காரிமங்கலத்தை சேர்ந்த சபீர் (வயது 38), பிலால் (32) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய லாரி டிரைவர் பர்கத்தை தேடி வருகின்றனர்.

    இதில் தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் சபீரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டுபாலாஜி பரிந்துரைத்தார். இதையடுத்து சபீரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜெய சந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சபீர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், தொடர் ரேஷன் கடத்தலில் ஈடுபடும் மேலும் சிலரும் விரைவில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

    • கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்ததாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்
    • மேலும் 2 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சொத்துக்களும் முடக்கப்பட்டன.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வருசநாடு போலீஸ் சரகத்துக்குட்பட்ட காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 57). சண்டியர்குளத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (36). இவர்கள் 2 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்ததாக சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் அவர்களை கைது செய்தார்.

    தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

    எனவே இவர்கள் மீதான குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே கலெக்டர் முரளிதரனுக்கு பரிந்துரை செய்தார்.

    கலெக்டர் உத்தரவின் பேரில் பெருமாள் மற்றும் பழனிச்சாமி ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட 6 பேர் கடந்த 1 மாதத்தில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

    • தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்ட அலுவலரை கத்தியால் குத்திய சக ஊழியர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • மேலும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    தேனி :

    தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி(51). இவர் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்ட அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 30-ந்தேதி பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது அவரது அறைக்குள் புகுந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட இளநிலை உதவியாளர் உமாசங்கர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். இதில் ராஜராஜேஸ்வரி படுகாயமடைந்தார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உமாசங்கரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பெண் அதிகாரியை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட உமாசங்கரை குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×