search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே  கள்ளச்சாராய வியாபாரி  குண்டர் சட்டத்தில் கைது
    X

    கைது  செய்யப்பட்ட யோகிதாஸ்.

    சங்கராபுரம் அருகே கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

    • சங்கராபுரம் அருகே கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சங்கராபுரம் அருகே தொண்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த யோகிதாஸ் (29) என்பவர் கடந்த மாதம் 15-ந் தேதி அவரது வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும்போது பகண்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 114 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

    இவர் மீது பகண்டை காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் க்கு பரிந்துரை செய்தார். அதன்படி மேற்படி நபரை ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி யோகிதாஸை, போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

    Next Story
    ×