search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி வழியாக  ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    கிருஷ்ணகிரி வழியாக ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

    • ஒரு வாரமாக முகாமிட்டு தீவிர சோதனை நடத்தி வருகிறார்.
    • தப்பியோடிய லாரி டிரைவர் பர்கத்தை தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஆபாஸ்குமார் உத்தரவுப்படி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி கிருஷ்ணகிரி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டு தீவிர சோதனை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த, ஜூலை, 12-ந் தேதி ஓசூர் - பாகலூர் சாலை, ஜி.மங்கலம் அருகே லாரியில், 50 கிலோ அளவிலான, 600 மூட்டைகளில் கடத்திய, 30 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதில், காரிமங்கலத்தை சேர்ந்த சபீர் (வயது 38), பிலால் (32) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய லாரி டிரைவர் பர்கத்தை தேடி வருகின்றனர்.

    இதில் தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் சபீரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டுபாலாஜி பரிந்துரைத்தார். இதையடுத்து சபீரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜெய சந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சபீர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், தொடர் ரேஷன் கடத்தலில் ஈடுபடும் மேலும் சிலரும் விரைவில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×