search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrested under gangster act"

    • ஒரு வருட காலம் காவலில் வைக்க உத்தரவு
    • ஆணையை ஜெயில் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த, ஆற்காடு அப்பாய் தெருவை சேர்ந்த தமிழ்செல்வன்(எ) செல்லா (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் வளர்மதி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்செல்வன் (எ) செல்லாவை ஒரு வருட காலம் குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதற்கான ஆணையை ஜெயில் அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

    • முன்விரதம் காரணமாக இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்
    • சிறையில் அடைத்தனர்

    திருவண்ணாமலை,

    திருவண்ணாமலை ஜன்னத் நகரை சேர்ந்த அப்துல் நிசார் (வயது 26 )அதே பகுதியைச் சேர்ந்தவர் தர்வேஸ்( 27) இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரதம் இருந்து வந்தது.

    இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

    இதில் காயமடைந்த அப்துல்நிசாரரின் தந்தை அப்துல் காதர் (55 )மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சையில் இருந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தர்விஸ் மற்றும் அவரது நண்பரான பல்லவன் நகரை சேர்ந்த தனசேகர் சூர்யா (27),உறவினரான ஜன்னத் நகரை சேர்ந்த முபாரக்(20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார் அதன் பெயரில் தர்பீஸ் உட்பட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்

    • ஜெயிலில் அடைப்பு
    • கலெக்டர் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் சாத்கர், கோட்டை காலனியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மகன் சுந்தரராஜ் (வயது 47). அதே பகுதி சேர்ந்தவர் பசுபதி.

    இவர்கள் 2 பேரும் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் பலமுறை எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டதால் போலீசார் இருவரையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

    அவரது பரிந்துரையின் பேரில் 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    • திருவண்ணாமலை, போளூர் பகுதியில் தொடர்ந்து குற்ற செயல்கள் அதிகரிப்பு
    • ஜெயிலில் அடைப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த பூமந்தகுளம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் இவரது மனைவி ஜான்சி (வயது 48) இவர் சாராய விற்பனையில் ஈடுபட்ட போதும், திருவண்ணாமலை சமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்த அசோக்குமார் மனைவி மங்கை (42) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்கள் 2 பேரையும் திருவண்ணாமலை டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்த வெங்கடேசன் மகன் பாலாஜி (23) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை கிழக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். போளூர் நகரம் சின்னப்பா தெருவை சேர்ந்த பாலமுருகன் (32) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு போளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா கொடுக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த குமார் (37) என்பவர் திருவண்ணாமலை கருமாரப்பட்டி ஏரிக்கரை அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட போது திருவண்ணாமலை தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இவர்கள் 5 பேரும் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுவதை தடுக்க திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஜான்சி, மங்கை, பாலாஜி, பாலமுருகன், குமார் ஆகிய 5 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • தொடர்ந்து வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டதால் நடவடிக்கை
    • வேலூர் ஜெயிலில் அடைப்பு

    வேலூர்:

    வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ். மானியம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் (வயது 25).பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

    நிர்மல் தொடர்ந்து வழிப்பறி திருட்டில் ஈடுபட்டு வந்தார். அவரை வேலூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார்.

    இதனையடுத்து கலெக்டர் உத்தரவின்படி நிர்மல் குண்டர்சட்டத்தில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள ஆண்டிப்பாளையம் கிராமம் அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 46), முன்னாள் ராணுவ வீரர். இவர், கடந்த அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக மாரிமுத்துவின் மனைவி கவிதா, அவரது கள்ளக்காதலன் செட்டித்தாங்கலை சேர்ந்த வேன் டிரைவர் சங்கர், சிறுமூர் பாபு என்கிற திருமாலன், அடையபுலம் பிரகாஷ்ராஜ், அப்பு ஆகிய 5 பேரை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கவிதாவை தவிர மற்ற 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதனையடுத்து சங்கர், பாபு, பிரகாஷ்ராஜ், அப்பு ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்
    • கைதிகளின் வங்கிக்கணக்குகள் முடக்கம்

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி ஜீவாநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 39). இவர் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். எனவே இவர் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் உள்ளது.

    இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்ததால் போலீசார் கைது செய்தனர். குண்டர்சட்டமும் இவர் மீது பாய்ந்துள்ளது. இந்த நிலையில் இவர் மனம் திருந்தி வாழ முடிவு செய்தார். அதன்படி இனி கஞ்சாவை விற்பனை செய்ய மாட்டேன் என்று பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் பிரமாண பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.

    தான் மனம் திருந்துவதாகவும், தன்னுடைய வாழ்வாதாரத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலையில் நேற்று மனந்திருந்தி வாழ ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 21 குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 322 கிலோ வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்ற செயல்களில் ஈடுவோர்கள் மனம் திருந்த வேண்டும். ராஜேந்திரன் திருந்தி வாழ ஆசைப்படுகிறார்.

    அவர் டீக்கடை வைக்க உதவிகோரி உள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துடன் முடிவு செய்து அவர் தொழில் தொடங்க ஏற்பாடு செய்யப்படும். சாராயம், கஞ்சா விற்பனை செய்தல் போன்ற எந்த வகையான குற்றத்தில் ஈடுபட்டாலும் மனம் திருந்தினால் அவர்களுக்கு உதவி செய்யப்படும்.

    வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்தவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்றார்.

    • கூலி தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.
    • சிறுமியின் பெற்றோர் புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் அஜித்குமார்(21). கூலித்தொழிலாளி.

    இவர் தன்னுடன் பணியாற்றும் மற்றொரு கூலி தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.

    அப்போது அந்த தொழிலாளியின் 8 வயது மகளுடன் அவர் பழகினார். ஒரு கட்டத்தில் சிறுமிக்கு இனிப்பு வாங்கி கொடுத்து ஏமாற்றி அவரை அருகில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதை யாரிடமாவது வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். பயந்து போன சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் அல்லிராணி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி கடந்த 25-ந் தேதி அஜித்குமாரை, கைது செய்து, ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், அஜித்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., ஆசிஷ் ராவத் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதன் பேரில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவு நகல் ஊட்டி கிளை சிறையில் இருந்த அஜித்குமாரிடம் வழங்கப்பட்டது. பின், அஜித்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • இளம்பெண்ணை கடத்திய வழக்கில் நடவடிக்கை
    • பள்ளி மாணவருக்கும் தொந்தரவு கொடுத்தார்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் உப்புமேட்டு காலனி ரோட்டு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் என்ற அருள் (வயது 29). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 6 - ம்தேதி அப்பகுதியில் நடைபெற்ற திருவிழாவின் போது, 6 - ம் வகுப்பு படிக்கும் மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் இவர் மீது இளம்பெண்ணை கடத் தியதாகவும் வழக்கு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவரது குற்ற செயல்களை கட்டுபடுத்தும் பொருட்டு ராஜ்குமார் என்ற அருளை குண்டர் சட்டத்தில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரை செய்தார்.

    அதனை ஏற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். அதன்படி ராஜ்குமார் என்ற அருளை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

    • வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
    • போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    பாணாவரம் பிள்ளையார் கோவில் தெரு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வினோத்குமார் (என்கிற) வினோத் (வயது 32) என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    இவரது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

    ×