கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

முன்விரதம் காரணமாக இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்சிறையில் அடைத்தனர்
கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ஜன்னத் நகரை சேர்ந்த அப்துல் நிசார் (வயது 26 )அதே பகுதியைச் சேர்ந்தவர் தர்வேஸ்( 27) இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரதம் இருந்து வந்தது.

இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இதில் காயமடைந்த அப்துல்நிசாரரின் தந்தை அப்துல் காதர் (55 )மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சையில் இருந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தர்விஸ் மற்றும் அவரது நண்பரான பல்லவன் நகரை சேர்ந்த தனசேகர் சூர்யா (27),உறவினரான ஜன்னத் நகரை சேர்ந்த முபாரக்(20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார் அதன் பெயரில் தர்பீஸ் உட்பட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்

X

Maalai Malar
www.maalaimalar.com